சகல வசதிகளுடன் ஹோண்டா அமேஸ் ஆட்டோமேட்டிக்!

ஹோண்டா அமேஸ் காரில் அதிக வசதிகள் நிரம்பிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

சகல வசதிகளுடன் ஹோண்டா அமேஸ் ஆட்டோமேட்டிக்!

காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் மாருதி டிசையர் காருக்கு அடுத்து விற்பனையில் இரண்டாவது இடத்தில் ஹோண்டா அமேஸ் கார் இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் இரண்டாம் தலைமுறை மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

சகல வசதிகளுடன் ஹோண்டா அமேஸ் ஆட்டோமேட்டிக்!

அசத்தலான டிசைன், பிரிமீயம் வசதிகளுடன் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வில் அறிமுகமானது. இதனால், வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல் தலைமுறை மாடலைவிட இரண்டாம் தலைமுறை மாடல் விற்பனையில் சிறப்பாக இருந்து வருகிறது.

சகல வசதிகளுடன் ஹோண்டா அமேஸ் ஆட்டோமேட்டிக்!

இந்த நிலையில், ஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல், டீசல் மாடல்கள் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், ஆட்டோமேட்டிக் மாடலானது வி என்ற நடுத்தர வசதிகள் கொண்ட வேரியண்ட்டில் மட்டுமே கிடைத்து வருகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு சற்று ஏமாற்றமான விஷயமாகவே இருக்கிறது.

சகல வசதிகளுடன் ஹோண்டா அமேஸ் ஆட்டோமேட்டிக்!

அதிக வசதிகள் நிரம்பிய ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இல்லாதது பெரும் குறையாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், ஹோண்டா அமேஸ் காரின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் அதிக வசதிகள் நிரம்பிய விஎக்ஸ் என்ற டாப் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

சகல வசதிகளுடன் ஹோண்டா அமேஸ் ஆட்டோமேட்டிக்!

இந்த புதிய ஆட்டோமேட்டிக் விஎக்ஸ் வேரியண்ட்டில் ஹோண்டாவின் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். யுஎஸ்பி போர்ட், நேவிகேஷன் வசதிகள் உள்ளன.

சகல வசதிகளுடன் ஹோண்டா அமேஸ் ஆட்டோமேட்டிக்!

இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் திரை ரியர் பார்க்கிங் சென்சார்களை சப்போர்ட் செய்யும் . மேலும், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், தானியங்கி முறையில் இறங்கும் ஓட்டுனர் பக்க ஜன்னல் கண்ணாடி ஆகியவை முக்கிய விஷயங்களாக இருக்கின்றன.

சகல வசதிகளுடன் ஹோண்டா அமேஸ் ஆட்டோமேட்டிக்!

ஏற்கனவே இருந்து வரும் வி வேரியண்ட்டில் இருக்கும் கீ லெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் வசதி, பவர் விண்டோ, பெட்ரோல் மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதிகள் இந்த மாடலிலும் தக்க வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் ரியர் ஏசி வென்ட்டுகள் இந்த காரில் இல்லாதது குறையான விஷயமாகவே தொடர்கிறது.

சகல வசதிகளுடன் ஹோண்டா அமேஸ் ஆட்டோமேட்டிக்!

இந்த புதிய விஎக்ஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டானது பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 110 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

சகல வசதிகளுடன் ஹோண்டா அமேஸ் ஆட்டோமேட்டிக்!

ரேடியண்ட் ரெட், ஒயிட் ஆர்ச்சிட் பியர்ல், லூனார் சில்வர் மெட்டாலிக், கோல்டன் பிரவுன் மெட்டாலிக் மற்றும் மாடர்ன் ஸ்டீல் மெட்டாலிக் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

சகல வசதிகளுடன் ஹோண்டா அமேஸ் ஆட்டோமேட்டிக்!

புதிய ஹோண்டா அமேஸ் காரின் பெட்ரோல் விஎக்ஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு ரூ.8.56 லட்சம் விலையிலும், டீசல் விஎக்ஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு ரூ.9.56 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

Most Read Articles
English summary
Honda has launched the VX trim for the petrol-CVT and the diesel-CVT Amaze models. The top of the line variants have been priced at Rs 8.56 lakh (ex-showroom, India) and Rs 9.56 lakh (ex-showroom, India), respectively. The prices are Rs 41,000 more than the V trim versions of each of the variants.
Story first published: Wednesday, April 24, 2019, 10:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X