புதிய ஹோண்டா கார்களுக்கு புதிய ஸ்மார்ட் இஎம்ஐ திட்டம் அறிமுகம்!

ஹோண்டா கார்களுக்கு புதிய ஸ்மார்ட் இஎம்ஐ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை விரைவில் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த திட்டம் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா கார்களுக்கு புதிய ஸ்மார்ட் இஎம்ஐ திட்டம் அறிமுகம்!

வாடிக்கையாளர்களுக்கு புதுமையான மாதத் தவணை திட்டங்களும், குத்தகை அடிப்படையில் வழங்கும் திட்டங்களையும் கார் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. அதிக சுமை இல்லாத மாதத் தவணை திட்டங்களாக இதனை கார் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஹோண்டா கார்களுக்கு புதிய ஸ்மார்ட் இஎம்ஐ திட்டம் அறிமுகம்!

பெருநகரங்களில் இந்த திட்டத்திற்கு அதிக வரவேற்பும் இருந்து வருகிறது. இந்தநிலையில், முதல்முறையாக புதுமையான மாதத் தவணை திட்டத்தை ஹோண்டா கார் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதற்காக, டிரான்ஸ்லீஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

புதிய ஹோண்டா கார்களுக்கு புதிய ஸ்மார்ட் இஎம்ஐ திட்டம் அறிமுகம்!

'ஸ்மார்ட் இஎம்ஐ' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த மாதத் தவணை திட்டத்தின் கீழ் பல்வேறு அனுகூலங்களை புதிய ஹோண்டா கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

புதிய ஹோண்டா கார்களுக்கு புதிய ஸ்மார்ட் இஎம்ஐ திட்டம் அறிமுகம்!

இதன்படி, புதிய ஹோண்டா கார் வாங்கும் வாடிக்கையாளர் இந்த திட்டத்தில் இணைந்தால் சாதாரண மாதத் தவணையை விட மிக குறைவான மாதத் தவணையை செலுத்தினால் போதுமானது. காருக்குரிய கடன், பதிவு நடைமுறைகள், இன்ஸ்யூரன்ஸ், பராமரிப்பு உள்ளிட்ட அனைத்தையும் டிரான்ஸ்லீஸ் நிறுவனம் ஏற்றுக் கொள்ளும்.

புதிய ஹோண்டா கார்களுக்கு புதிய ஸ்மார்ட் இஎம்ஐ திட்டம் அறிமுகம்!

வாடிக்கையாளர்கள் டிரான்ஸ்லீஸ் நிறுவனத்துடன் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஒப்பந்த காலம் முடிவடையும்போது, காரின் மறுவிற்பனை மதிப்பு அடிப்படையில் மீதமுள்ள தொகையை செலுத்தி வாடிக்கையாளரே அந்த காரை சொந்தமாக்கிக் கொள்ளலாம். இல்லையெனில், டிரான்ஸ்லீஸ் நிறுவனத்திடம் காரை திரும்ப ஒப்படைந்துவிடலாம்.

புதிய ஹோண்டா கார்களுக்கு புதிய ஸ்மார்ட் இஎம்ஐ திட்டம் அறிமுகம்!

இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் அதிக முதலீடு செய்வது தவிர்க்கப்படும் என்று டிரான்ஸ்லீஸ் தெரிவிக்கிறது. மேலும், காரை முறையாக பராமரித்து, சிறப்பான ஓட்டும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் ரீசேல் மதிப்பும் வழங்கப்படும்.

புதிய ஹோண்டா கார்களுக்கு புதிய ஸ்மார்ட் இஎம்ஐ திட்டம் அறிமுகம்!

முதல்கட்டமாக டெல்லி, மும்பை நகரங்களிலும், விரைவில் சென்னை, பெங்களூர், புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய நகங்களிலும் இந்த ஸ்மார்ட் இஎம்ஐ திட்டம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹோண்டா டீலரில் இதற்கான நடைமுறைகள் மற்றும் தகவல்களை பெற முடியும்.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Cars India has announced that it has tied up with TranzLease, an car leasing and mobility solutions service provider, to offer auto finance solution for its customers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X