ஹோண்டா சிட்டி பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

ஹோண்டா சிட்டி காரின் பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா சிட்டி பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி கார் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வருவதற்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், அதற்கு தக்க அம்சத்துடன் ஹோண்டா சிட்டி கார் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா சிட்டி பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

ஹோண்டா சிட்டி காரின் பிஎஸ்-6 பெட்ரோல் மாடலுக்கு வேரியண்ட்டை பொறுத்து ரூ.9.91 லட்சம் முதல் ரூ.14.31 லட்சம் வரையில் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.ஹோண்டா சிட்டி காரின் பிஎஸ்-4 பெட்ரோல் மாடலைவிட பிஎஸ்-6 பெட்ரோல் மாடலின் விலை ரூ.15,000 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா சிட்டி பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

தற்போது ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் மாடல் மட்டும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக வந்துள்ளது. இந்த காரில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 117 பிஎச்பி பவரையும், 145 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக உள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

ஹோண்டா சிட்டி பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இந்த கார் எஸ்வி, வி, விஎக்ஸ், இசட்எக்ஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். எஸ்வி பேஸ் வேரியண்ட்டை தவிர்த்து பிற அனைத்து வேரியண்ட்டுகளிலும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

ஹோண்டா சிட்டி பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

அதேநேரத்தில், சிட்டி காரின் பிஎஸ்-6 டீசல் மாடல் வரும் ஏப்ரல் மாதத்தையொட்டி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிட்டி காரின் பிஎஸ்-4 மாடல் தொடர்ந்து சில மாதங்கள் விற்பனையில் இருக்கும் நிலையில் விலை ரூ.5,000 வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read: 2020 மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் தாய்லாந்து கண்காட்சியில் அறிமுகம்...

ஹோண்டா சிட்டி பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

ஹோண்டா சிட்டி காரின் டீசல் மாடலில் 1.5 லிட்டர் ஐடிடெக் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கிறது. இந்த எஞ்சின் ஒரு சில மாதங்களில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக கிடைக்கும்.

Most Read: கழுதையை வைத்து சர்ச்சையை ஏற்படுத்திய ஹெக்டர் உரிமையாளர்... அடிபணிந்த எம்ஜி..!

ஹோண்டா சிட்டி பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இந்த காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை இந்த சாதனம் சப்போர்ட் செய்யும். வாய்ஸ் கமாண்ட், நேவிகேஷன், புளூடுத் வசதிகளும் உள்ளன.

Most Read: புதிதாக 100 கார் விற்பனை நிலையங்களை திறக்கும் டாடா மோட்டார்ஸ்

ஹோண்டா சிட்டி பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விற்பனைக்கு அறிமுகம்

இதனிடையே, அடுத்த ஆண்டு மத்தியில் தலைமுறை புதிய ஹோண்டா சிட்டி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அண்மையில் தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய மாடல் வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் மாறுபட்ட மாடலாக இருக்கும். அத்துடன், பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுகள் வருவதுடன், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Japanese car maker, Honda cars has launched City car with BS6-compliant petrol engine in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X