விலையுயர்ந்த லம்போர்கினி காராக மாறிய ஹோண்டா சிட்டி... எவ்வளவு செலவாச்சு தெரியுமா...?

ஹோண்டா சிட்டி காரை அதன் உரிமையாளர், லம்போர்கினி காராக மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

விலையுயர்ந்த லம்போர்கினி காராக மாறிய ஹோண்டி சிட்டி... எவ்வளவு செலவாச்சு தெரியுமா...?

புதிய வாகன வரி விதியினால், இந்தியாவில் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை வாங்குவது கடினமான விஷயமாக மாற இருக்கின்றது. அதேசமயம், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை, சர்வதேச சந்தையைக் காட்டிலும் தற்போது அதிகமானதாக காட்சியளிக்கின்றது.

விலையுயர்ந்த லம்போர்கினி காராக மாறிய ஹோண்டி சிட்டி... எவ்வளவு செலவாச்சு தெரியுமா...?

இதன்காரணமாக, சிலர் வழக்கான வாகனங்களை கவர்ச்சியான வாகனங்களுக்கு இணையாக மாடிஃபை செய்து வருகின்றனர்.

இதற்கான பணிகளை மேற்கொள்ளும் வகையிலான கராஜ்கள் அண்மைக் காலங்களாக இந்தியாவில் அதிகரித்து வருகின்றது.

விலையுயர்ந்த லம்போர்கினி காராக மாறிய ஹோண்டி சிட்டி... எவ்வளவு செலவாச்சு தெரியுமா...?

அதேசமயம், வாகனங்களை மாடிஃபை செய்யும் கலாச்சாரமும் அண்மைக் காலங்களாக இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் அண்மைக் காலங்களாக, பல செய்திகளை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் குழு வெளியிட்டுள்ளது.

விலையுயர்ந்த லம்போர்கினி காராக மாறிய ஹோண்டி சிட்டி... எவ்வளவு செலவாச்சு தெரியுமா...?

அதேவகையிலான, ஓர் செய்தியைதான் தற்போது இந்த பதிவில் நாம் காண இருக்கின்றோம். ஆனால், இம்முறை முழுக்க முழுக்க தனது உருவத்தை முற்றிலுமாக மாற்றிக் கொண்ட ஹோண்டா சிட்டி கார்குறித்த தகவலை கீழே காணலாம்.

விலையுயர்ந்த லம்போர்கினி காராக மாறிய ஹோண்டி சிட்டி... எவ்வளவு செலவாச்சு தெரியுமா...?

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

இதுகுறித்த வீடியோ மேக்னடோ என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது. இந்த ஹோண்டா சிட்டி கார், தற்போது புதிய தோற்றமாக லம்போர்கினி காராக உருமாறியுள்ளது.

விலையுயர்ந்த லம்போர்கினி காராக மாறிய ஹோண்டி சிட்டி... எவ்வளவு செலவாச்சு தெரியுமா...?

இந்த காரின் உருவம் பார்ப்பதற்கு முழுமையான லம்போர்கினியைப் போன்று காட்சியளிக்கவில்லை என்றாலும், அது தனித்துவமான லுக்கைப் பெற்றிருக்கின்றது. ஆனால், இந்த ஹோண்டா சிட்டி காருக்கு லம்போர்கினி லுக்கை வழங்குவதற்காக பெருமளவிலான வேலைப்பாட்டை, அந்த மாடிஃபை நிறுவனம் செய்துள்ளது.

விலையுயர்ந்த லம்போர்கினி காராக மாறிய ஹோண்டி சிட்டி... எவ்வளவு செலவாச்சு தெரியுமா...?

இருப்பினும், அந்த கார் சிறப்பான தோற்றத்தைப் பெறவில்லை. அதேசமயம், இந்த ஹோண்டா சிட்டி காரின் உண்மையான தோற்றம் மறைக்கப்பட்டு புதிய ரகத்திலான தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது.

அதற்கேற்ப வகையில், ஹோண்டி சிட்டி காரின் பாடி ஃபிரேம்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, லம்போர்கினிக்கான பாடி ஃபிரேம்கள் வழங்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப வகையிலான, ஹெட்லேம்ப், பம்பர் மற்றும் பேனட் உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

விலையுயர்ந்த லம்போர்கினி காராக மாறிய ஹோண்டி சிட்டி... எவ்வளவு செலவாச்சு தெரியுமா...?

அதேபோன்று, காரின் பின்புறத்திலும் கணிசமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகையால், இந்த காரை எந்த பக்கத்திலிருந்து பாத்தாலும், லம்போர்கினி லுக்கையே வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே இந்த கார் சாலையில் செல்லும்போது பார்த்தால், அசல் லம்போர்கினி கார் செல்வதைப்போன்றே காட்சியளிக்கின்றது.

மேலும், இந்த காரின் நான்கு இருக்கைகள் நீக்கப்பட்டு, இரு இருக்கை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு, பின்பக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட இருக்கையின் இடத்தில், தற்போது மெக்கானிஸத்திற்கான அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த லம்போர்கினி காராக மாறிய ஹோண்டி சிட்டி... எவ்வளவு செலவாச்சு தெரியுமா...?

இந்த உருமாற்ற வேலைக்காக அதன் உரிமையாளர் எவ்வளவு செலவு செய்துள்ளார் என்ற தகவல் முழுமையாக தெரியவில்லை. இருப்பினும், இதற்காக ரூ. 1 லட்சத்திற்கும் அதிமான அளவில் செலவு செய்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மலிவான விலையின் காரணமாகவே, ஹோண்டா சிட்டி, முழுமையான லம்போர்கினி லுக்கைப் பெறவில்லை.

விலையுயர்ந்த லம்போர்கினி காராக மாறிய ஹோண்டி சிட்டி... எவ்வளவு செலவாச்சு தெரியுமா...?

அதேசமயம், இந்த காருக்கு ரூ. 5 லட்சம் வரை செலவு செய்திருந்தால், இது முழுமையான லம்போர்கினி லுக்கைப் பெற்றிருக்கும். இதனை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த காலத்தில் வெளியான செய்திகள் இருக்கின்றன. அந்தவகையில், ஃபெர்ராரி தோற்றத்தை ஓர் கார் பெற்றிருந்தது.

Most Read Articles
English summary
Honda City Modified Into A Lamborghini. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X