ஆஹா... ஹோண்டா சிவிக் காரை வேற லெவலுக்கு மாற்றி அசத்திய சென்னை டாக்டர்!

சென்னையை சேர்ந்த டாக்டர் ஒருவர் தனது புதிய ஹோண்டா சிவிக் காரை ஸ்போர்ட்ஸ் கார் போன்று அட்டகாசமான முறையில் கஸ்டமைஸ் செய்து வாங்கி இருக்கிறார். முதல் பார்வையிலேயே பார்ப்போரை காதல் கொள்ள செய்யும் இந்த காரின் படங்கள் மற்றும் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஆஹா... ஹோண்டா சிவிக் காரை வேற லெவலுக்கு மாற்றி அசத்திய சென்னை டாக்டர்!

கடந்த மார்ச் மாதம் புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த புதிய தலைமுறை சிவிக் கார் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விற்பனையிலும் இதன் ரகத்தில் முதன்மையான மாடலாக மாறி இருக்கிறது.

ஆஹா... ஹோண்டா சிவிக் காரை வேற லெவலுக்கு மாற்றி அசத்திய சென்னை டாக்டர்!

இந்த நிலையில், சென்னையை சேர்ந்த மருத்துவர் பிரசாந்த் அருண் இந்த காரை அண்மையில் வாங்கி இருக்கிறார். எனினும், தனது சிவிக் கார் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று விரும்பிய அவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஏபிஐ கார்ஸ் என்ற கஸ்டமைஸ் நிறுவனத்தை அணுகியுள்ளார்.

ஆஹா... ஹோண்டா சிவிக் காரை வேற லெவலுக்கு மாற்றி அசத்திய சென்னை டாக்டர்!

அதாவது, பிரசாந்த் அருண் தனது சிவிக் காரை முன்பதிவு செய்யும்போதே, ஏபிஐ கார் நிறுவனத்தை அணுகியதுடன், கஸ்டமைஸ் செய்யும் திட்டத்தையும் தெரிவித்துள்ளார். அதாவது, வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் சிவிக் காரின் டைப்-ஆர் என்ற உயர் செயல்திறன் மிக்க ஸ்போர்ட்ஸ் கார் ஸ்டைலில் மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆஹா... ஹோண்டா சிவிக் காரை வேற லெவலுக்கு மாற்றி அசத்திய சென்னை டாக்டர்!

இதனை ஏற்றுக் கொண்ட ஏபிஐ கார்ஸ் நிறுவனம் சிவிக் டைப்-ஆர் காருக்கு வழங்கப்படும் கூடுதல் ஆக்சஸெரீகளை ஆர்டர் செய்து இறக்குமதி செய்துள்ளது. சிவிக் டைப்-ஆர் காரில் பயன்புத்தப்படும் பம்பர், ஸ்பாய்லர், பாடி சைடு ஸ்கர்ட் ஆகியவற்றுடன் ஏபிஎஸ் என்ற விசேஷ பாடி கிட்டையும் ஆர்டர் செய்து இறக்குமதி செய்துவிட்டனர்.

டாக்டர் பிரசாந்த் அருணுக்கு ஹோண்டா சிவிக் கார் டெலிவிரி கொடுப்பதற்கு முன்பாகவே, அதற்கு உரிய கஸ்டமைஸ் செய்வதற்கான பாகங்களை ஏபிஐ கார்ஸ் நிறுவனம் இறக்குமதி செய்து தயாராக வைத்திருந்தது. இதையடுத்து, காரை டெலிவிரி பெற்ற பிரசாந்த் அருண், ஏபிஐ கார்ஸ் நிறுவனத்திடம் சிவிக் காரை வழங்கினார்.

ஆஹா... ஹோண்டா சிவிக் காரை வேற லெவலுக்கு மாற்றி அசத்திய சென்னை டாக்டர்!

அதன்படி, க்ரில் அமைப்பு, புதிய பம்பர், வீமான் பிராண்டு 18 அங்குல அலாய் சக்கரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அலாய் வீல்களில் வெவ்வேறு அளவுடைய மிச்செலின் பைலட் டயர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. முன்சக்கரங்களில் 235/40/18 அளவுடைய டயர்களும், பின்சக்கரங்களில் 245/40/18 அளவுடைய டயர்களும் உள்ளன.

ஆஹா... ஹோண்டா சிவிக் காரை வேற லெவலுக்கு மாற்றி அசத்திய சென்னை டாக்டர்!

இந்த காருக்கு ஏபிஎஸ் பாடி கிட் மூலமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது, விசேஷ தெர்மோபிளாஸ்ட் ரெஸின் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கார்பன் ஃபைபர் போன்ற பானட் மற்றும் விசேஷ வண்ணப்பூச்சுடன் சைடு மிரர்கள் இந்த காருக்கு கூடுதல் வசீகரத்தை தருகின்றன. செராமிக் கோட்டிங் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆஹா... ஹோண்டா சிவிக் காரை வேற லெவலுக்கு மாற்றி அசத்திய சென்னை டாக்டர்!

அதேநேரத்தில், வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் சிவிக் டைப்-ஆர் காரில் அதிசெயல்திறன் மிக்க எஞ்சின் பயன்படுத்தப்படும் நிலையில், இந்த காரில் எஞ்சினில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. பிஎம்சி ஏர் ஃபில்டர் மட்டும் கூடுதல் விஷயமாக தெரிவிக்கப்படுகிறது.

டாக்டர் பிரசாந்த் அருண் வாங்கியிருக்கும் கார் சிவிக் ஐ-விடெக் மாடல். இந்த காரில் இருக்கும் 1.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 174 என்எம் டார்க் திறனையும் வெளிப்புத்தும். சிவிடி கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

ஆஹா... ஹோண்டா சிவிக் காரை வேற லெவலுக்கு மாற்றி அசத்திய சென்னை டாக்டர்!

ஹோண்டா சிவிக் காரை இவ்வாறு படு கவர்ச்சியாக மாற்றுவதற்கு ரூ.3 லட்சம் செலவிட்டுள்ளதாக டாக்டர் பிரசாந்த் அருண் தெரிவித்துள்ளார். புதிய ஹோண்டா சிவிக் காரின் பெட்ரோல் மாடல் ரூ.17.94 லட்சம் முதல் ரூ.22.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Source: Dr Prashanth Arun/Instagram

Most Read Articles
English summary
A Chennai based doctor has modified his second-generation Honda Civic and made it look like the Honda Civic Type-R. The Civic in question is a 2019 i-VTEC model. The modifications is only cosmetic, and not changes have been made to the interiors and mechanics. Images of the car were uploaded to Dr Arun's Facebook account.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X