பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா!

ஹோண்டா கார் இந்தியா நிறுவனத்தின் செடான் பிரிவில் உள்ள சிவிக் மாடல் கடந்த அக்டோபரை விட இந்த அக்டோபரில் 30 சதவீதம் கூடுதலாக விற்பனையாகியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா!

2018 அக்டோபரில் 336 யூனிட்கள் விற்பனையாகி இருந்த இந்த சிவிக் மாடல் கடந்த மாதத்தில் 30 சதவீதம் கூடுதலாக 436 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இந்த செடான் பிரிவில் ஹோண்டா சிவிக்கின் 2019 அக்டோபர் மாதத்திற்கான மார்க்கெட் ஷேர் 53 சதவீதமாகும்.

பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா!

கடந்த மார்ச் மாதத்தில் சிவிக் மாடலின் புதிய வெர்சன் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அறிமுகத்தில் இருந்து கடந்த மாதம் வரை மொத்தம் 4,375 யூனிட் சிவிக் புதிய வெர்சன் கார்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா!

செடான் பிரிவு கார்களின் விற்பனையில் எப்போதும் முன்னிலை வகிக்கும் ஹோண்டா சிவிக் மாடல் 2019 ஏப்ரல்- அக்டோபர் கால இடைவெளியில் 4,763 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இது 4,350 யூனிட்கள் விற்பனையான 2018 ஏப்ரல்- அக்டோபர் கால இடைவெளியை விட 9.5 சதவீதம் அதிகமாகும்.

பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா!

சிவிக் மாடலின் இந்த விற்பனை வளர்ச்சி குறித்து ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் முதன்மை துணை இயக்குனர் ராஜேஷ் கோயல் கூறுகையில், சிவிக் மாடல் மீண்டும் இவ்வாறு விற்பனையில் வளர்ச்சி அடைந்து இருப்பது, பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டு வரும் பிரிவில் ஒன்றாக இருக்கும் செடான் பிரிவு கார்களின் தயாரிப்பிற்கு உத்வேகம் அளித்தது போல் உள்ளது.

பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா!

செடான் கார்களில் உள்ள ஸ்டைலிஷ் மற்றும் டைனாமிக் தோற்றம் தான் இந்தளவிற்கு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது என்று கூற வேண்டும். இதற்காக இத்தகைய செடான் கார்களை தேர்வு செய்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி கூறி கொள்கிறேன் என கூறினார்.

பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா!

1.8 லிட்டர் ஐ-விடிஇசி பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனையாகி வரும் சிவிக் மாடலின் தற்போதைய தலைமுறை கார், 140 பிஎச்பி பவரையும் 174 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த என்ஜினுடன் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா!

இந்த பெட்ரோல் என்ஜின் மட்டுமல்லாமல் 1.6 லிட்டர் ஐ-டிடிஇசி டர்போ-டீசல் என்ஜின் தேர்வும் வழங்கப்பட்டுள்ளது. 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் 119 பிஎச்பி பவரையும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது.

பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா!

சிவிக் மாடலில் உள்ள மிக முக்கியமான தொழிற்நுட்பமே 17 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் அமைப்பு தான். ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டுடன் இணைக்கும் வசதியுடன் உள்ள இந்த இன்போடெயின்மெண்ட் அமைப்புடன் ஸ்மார்ட் எண்ட்ரி அமைப்பு, இரு விதமாக மாறக்கூடிய ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 8 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, எலக்ட்ரிக் பார்க்கிங் ப்ரேக் மற்றும் காரின் பின்புறத்தை பல கோணங்களில் காட்டக்கூடிய கேமிரா போன்றவையும் இந்த காரில் உள்ளன.

பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா!

இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் ப்ரேக்கிங், ஆறு காற்றுப்பைகள், காரை நிலையாக வைத்திருக்க உதவும் அமைப்பு, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஹோண்டா லேன் வாட்ச் மற்றும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை ஆங்கர்ஸ் போன்ற எண்ணற்ற பாதுகாப்பு தொழிற்நுட்பங்கள் உள்ளதால் இந்த காருக்கு ஆசியன் என்கேப் அமைப்பு 5-ஸ்டார் ரேட்டிங்கை வழங்கியுள்ளது.

பொருளாதார மந்த நிலையிலும் ஹோண்டா சிவிக் காருக்கு இப்படியொரு வரவேற்பா!

இந்திய எக்ஸ்ஷோரூம்களில் ரூ.17.94 லட்சத்தில் இருந்து ரூ.22.35 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த ஹோண்டா சிவிக் காரின் இந்த வளர்ச்சியால், ஹோண்டா நிறுவனம் செடான் பிரிவில் புதிய மைல்கல்லை அடைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதனால் இந்த பிரிவில் சில புதிய அறிமுகங்களை இந்த நிறுவனத்தில் இருந்து எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Civic Retains Executive Sedan Segment Top Spot: Records 30% Month-On-Month Growth
Story first published: Wednesday, November 20, 2019, 19:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X