முதல் எலக்ட்ரிக் காரின் பெயரை வெளியிட்டது ஹோண்டா: கார் குறித்த சிறப்பு தகவலும் கசிந்தன!

ஹோண்டா நிறுவனம், அதன் முதல் எலக்ட்ரிக் காரின் பெயரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும், அந்த கார் சிறப்பு தகவல்களும் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

முதல் எலக்ட்ரிக் காரின் பெயரை வெளியிட்டது ஹோண்டா: கார் சிறப்பு தகவலும் கசிந்தன!

ஹோண்டா நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் காருக்கு 'ஹோண்டா இ' என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ஆட்டோகார் இந்தியா ஆங்கிலா இணையதளம் வெளியிட்டுள்ளது.

முதல் எலக்ட்ரிக் காரின் பெயரை வெளியிட்டது ஹோண்டா: கார் சிறப்பு தகவலும் கசிந்தன!

இந்த புதிய மாடல் எலக்ட்ரிக் காரை முதல் முறையாக, கடந்த வருடம் நடைபெற்ற ஃப்ராங்க்போர்ட் வாகன கண்காட்சியில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. தொடர்ந்து, நடப்பாண்டில் நடைபெற்ற ஜெனிவா வாகன கண்காட்சியிலும், மீண்டும் ஒரு முறை, புரோட்டை டைப்பிலான அந்த எலக்ட்ரிக் காரை ஹோண்டா காட்சிப்படுத்தி இருந்தது.

முதல் எலக்ட்ரிக் காரின் பெயரை வெளியிட்டது ஹோண்டா: கார் சிறப்பு தகவலும் கசிந்தன!

காட்சிக்குள்ளாகிய இந்த கார் தயாரிப்பிற்கு எடுத்துச்செல்ல 95 சதவீதம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில்தான், நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காருக்கு 'ஹோண்டா இ' என்ற பெயரை அந்த நிறுவனம் வைத்துள்ளது.

முதல் எலக்ட்ரிக் காரின் பெயரை வெளியிட்டது ஹோண்டா: கார் சிறப்பு தகவலும் கசிந்தன!

ஹோண்டா நிறுவனம், அதன் முதல் எலக்ட்ரிக் காரை, அனைவரையும் வகையில் உருவாக்கி வருகின்றது. அந்த வகையில், இ காரை ரெட்ரோ டிசைனில் தயாரிக்க இருக்கின்றது. இதற்கான டிசைன் மற்றும் அம்சங்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் எலக்ட்ரிக் காரின் பெயரை வெளியிட்டது ஹோண்டா: கார் சிறப்பு தகவலும் கசிந்தன!

எலக்ட்ரிக் கார்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஏ மற்றும் பி பிளாட்பாரத்தில் வைத்துதான், ஹோண்டா இ கார் தயாரிக்கப்பட உள்ளது.

காருக்கான சக்தியை வழங்கும் பேட்டரிகள், காரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட உள்ளன. இதற்கான பேட்டரிகள், பேனேசோனிக் நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

முதல் எலக்ட்ரிக் காரின் பெயரை வெளியிட்டது ஹோண்டா: கார் சிறப்பு தகவலும் கசிந்தன!

காரின் பெயர் மட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ள, மற்ற தகவல்கள் இதுவரை முழுமையாக வெளியிடப்படவில்லை. இருப்பினும் கார் குறித்த சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் இணையத்தில் வைரல் வருகின்றன.

முதல் எலக்ட்ரிக் காரின் பெயரை வெளியிட்டது ஹோண்டா: கார் சிறப்பு தகவலும் கசிந்தன!

தகவலின்படி, ஹோண்டா இ எலக்ட்ரிக் காரில், 99 குதிரைகளின் ஓடும் திறனை வெளிப்படுத்தக் கூடிய மின் மோட்டார் பொருத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று, 300 என்எம் டார்க்கையும் அந்த எஞ்ஜின் வெளிப்படுத்தும். காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 201 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

முதல் எலக்ட்ரிக் காரின் பெயரை வெளியிட்டது ஹோண்டா: கார் சிறப்பு தகவலும் கசிந்தன!

அதேபோன்று, காரில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் சார்ஜ் செய்யதால், வெறும் அரை மணி நேரத்தில் 80 சதவீதம் சார்ஜை அடைந்துவிடும். அதேசமயம், கார் சாலையில் செல்லும்போது, காற்றினால் வேகம் குறைந்துவிடாத அளவிற்கு, காரின் ஏரோடைணமிக்ஸ் அமைப்பு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் எலக்ட்ரிக் காரின் பெயரை வெளியிட்டது ஹோண்டா: கார் சிறப்பு தகவலும் கசிந்தன!

இத்துடன், இ காரில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், பின்பக்கத்தில் வரும் வாகனங்களைப் பார்ப்பதற்கு வழங்கப்படும் கண்ணாடிகளுக்குப் பதிலாக கேமிராக்கள் வழங்கப்பட்டுள்ளன. அது காருக்கு அருகில் வாகனங்கள் குறித்த தகவலை உள்ளே இருக்கும் டிஸ்பிளே மூலம் காண்பித்துவிடும்.

முதல் எலக்ட்ரிக் காரின் பெயரை வெளியிட்டது ஹோண்டா: கார் சிறப்பு தகவலும் கசிந்தன!

இதற்காக, காரின் உட்புறத்தில், 12 இன்ச் கொண்ட டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, காரின் இன்டீரியரில் சென்டர் கன்சோல் மற்றும் டேஸ்போர்ட், உட் பினிஸிங்கில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது காருக்கு ராயல் லுக்கை வழங்குகிறது.

முதல் எலக்ட்ரிக் காரின் பெயரை வெளியிட்டது ஹோண்டா: கார் சிறப்பு தகவலும் கசிந்தன!

இந்த பிரத்யேகமான மாடலை ஹோண்டா நிறுவனம் ஜப்பானில் உள்ள உற்பத்திச் சாலையில் வைத்து தயாரித்து வருகிறது. முதல்கட்டமாக இ கார் யுரோப்பியன் சந்தையில் அறிமுகப்படுத்த இருக்கின்றது. இதைத்தொடர்ந்தே, உலகின் மற்ற நாடுகளில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது. ஆனால், இந்த காரின் இந்திய வருகை குறித்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதேசமயம், இந்த நிறுவனத்தின் ஹெச்ஆர்-வி எனப்படும் கார் நடப்பாண்டின் இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகமாக இருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Confirmed New Name For Their First Electric Car. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X