ஹோண்டா இ எலெக்ட்ரிக் காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

ஹோண்டா நிறுவனத்தின் இ என்ற பெயரில் வர இருக்கும் புதிய எலெக்ட்ரிக் காரின் படங்கள், தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா இ எலெக்ட்ரிக் காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் ஹோண்டா கார் நிறுவனத்தின் ஹேட்ச்பேக் ரக எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் மாடலானது பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஹோண்டா இ என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த இந்த எலெக்ட்ரிக் கார் தற்போது தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா இ எலெக்ட்ரிக் காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

அடுத்த வாரம் பிராங்க்ஃபர்ட் நகரில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த புதிய கார் பார்வைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக காரின் படங்கள் மற்றும் சில முக்கிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஹோண்டா இ எலெக்ட்ரிக் காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

கான்செப்ட் காரில் இருந்து சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முன்பக்க க்ரில் அமைப்பில் ஒளிரும் பின்னணி கொண்ட ஹோண்டா பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருந்தது. அது தற்போது நீக்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் சைடு மிரர்களுக்கு பதிலாக கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா இ எலெக்ட்ரிக் காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

சைடு கேமரா சிஸ்டமானது இரண்டு 6 அங்குல திரைகளுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக பக்கவாட்டில் மற்றும் பின்புறம் வரும் வாகனங்களை காரின் உள்ளே இருந்தே பார்க்கலாம்.

ஹோண்டா இ எலெக்ட்ரிக் காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

இந்த காரில் 12.3 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் பர்சனல் அசிஸ்டென்ட் சர்வீஸ் அப்ளிகேஷன் மூலமாக க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி கட்டுப்பாடு, பேட்டரியில் சார்ஜ் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும், கட்டுப்பாட்டு வசதிகளையும் ஸ்மார்ட்ஃபோன் மூலமாகவே பெற முடியும்.

ஹோண்டா இ எலெக்ட்ரிக் காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

புதிய ஹோண்டா இ எலெக்ட்ரிக் காரில் இருக்கும் மின் மோட்டார் இரண்டு விதமான பவரை வெளிப்படுத்தும் திறனில் வர இருக்கிறது. ஒரு மாடலானது 134 பிஎச்பி பவரையும், மற்றொரு மாடாலனது 152 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

ஹோண்டா இ எலெக்ட்ரிக் காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

இந்த காருக்கு வழங்கப்பட இருக்கும் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக வெறும் 30 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியுமாம். இதனால், நீண்ட தூர பயணங்களின்போது, சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் மூலமாக எளிதாக சார்ஜ் செய்து பயணத்தை தொடர முடியும்.

ஹோண்டா இ எலெக்ட்ரிக் காரின் படங்கள், தகவல்கள் வெளியீடு!

வரும் 2025ம் ஆண்டு ஐரோப்பாவில் மின்சார கார்களை மட்டுமே விற்பனை செய்வதை இலக்காக கொண்டு ஹோண்டா கார் நிறுவனம் திட்டங்களை கையில் எடுத்துள்ளது. அதன் முதல்படியாக, இந்த புதிய ஹோண்டா இ எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் கார் பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் இந்தியாவிலும் இந்த காரின் அடிப்படையிலான விலை குறைவான எலெக்ட்ரிக் காரை ஹோண்டா அறிமுகம் செய்யும்.

Most Read Articles
English summary
Honda has unveiled the production version of the e electric hatchback for European market.
Story first published: Thursday, September 5, 2019, 10:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X