சும்மா கத விடாதீங்க பாஸ்.. இந்த பைக் விலை 62 லட்சமா..? லக்சூரி க்ரூஸர் இறக்குமதி செய்யப்பட்ட கதை!

இந்தியாவைச் சேர்ந்த அரபு நாட்டு தொழிலதிபர் டிரைக் ரக பைக்கை இந்தியாவில் களமிறக்குவதற்காக பெரும் தொகை மற்றும் அதிகபட்ச சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சும்மா கத விடாதீங்க பாஸ்.. இந்த பைக் விலை 62 லட்சமா..? லக்சூரி க்ரூஸர் இறக்குமதி செய்யப்பட்ட கதை!

விலையுயர்ந்த மற்றும் வித்தியாசமான தோற்றம் கொண்ட வாகனங்கள் பல இந்தியாவில் காணப்படுவதுண்டு. அவற்றை காணும் பலர் அது மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்கள் என கருதுகின்றனர். ஆனால், அது உண்மை இல்லை.

முற்றிலும் வித்தியாசமான தோற்றம் மற்றும் டிசைன் கொண்ட வாகனங்கள் மேற்கத்திய நாடுகள் பலவற்றில் விற்பனையில் இருக்கின்றன.

சும்மா கத விடாதீங்க பாஸ்.. இந்த பைக் விலை 62 லட்சமா..? லக்சூரி க்ரூஸர் இறக்குமதி செய்யப்பட்ட கதை!

அந்தவகையிலான ஒரு சில வாகனங்களை பெரும் பணக்காரர்கள் பல லட்சம் செலவில் இறக்குமதி செய்து இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய ஓர் வாகனம் பற்றிய தகவலை இந்த பதிவில் நாம் காணவிருக்கின்றோம்.

ஹோண்டாவின் தயாரிப்பில் ஜப்பானில் உருவாக்கப்பட்டு வரும் வாகனம்தான் ஹோண்டா கோல்ட் விங். டிரைக் ரகத்திலான இந்த பைக்கை க்ரூஸிங் மெஸின் என்று அழைக்கின்றனர்.

சும்மா கத விடாதீங்க பாஸ்.. இந்த பைக் விலை 62 லட்சமா..? லக்சூரி க்ரூஸர் இறக்குமதி செய்யப்பட்ட கதை!

இந்த டிரைக் ரக பைக்கில் சொகுசு கார்களில் காணப்படும் பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் பல லக்சூரி பைக்குகளில் இல்லா பல வசதிகள் இந்த பைக்கில் உள்ளன. இதன்காரணமாகவே, அதன் உரிமையாளர் அரபு நாட்டில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்துள்ளார்.

சும்மா கத விடாதீங்க பாஸ்.. இந்த பைக் விலை 62 லட்சமா..? லக்சூரி க்ரூஸர் இறக்குமதி செய்யப்பட்ட கதை!

மேலும், இந்த டிரைக் ரக பைக் எவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டது. அதில் எத்தகைய சிரமங்களை அவர் கண்டார் என்பதுகுறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவை கவுமுடி என்ற யுடியூப் தளம் வெளயிட்டுள்ளது.

சும்மா கத விடாதீங்க பாஸ்.. இந்த பைக் விலை 62 லட்சமா..? லக்சூரி க்ரூஸர் இறக்குமதி செய்யப்பட்ட கதை!

அந்த வீடியோவில் முன்னதாக, டிரைக் பைக்கில் இடம்பெற்றுள்ள அனைத்து சிறப்பம்சங்கள்குறித்த தகவலையும் அவர் கூறியுள்ளார்.

இதன்மூலம், கோல்ட் விங் டிரைக் பைக்கில் வாட்டர் ப்ரூஃப் ஜேபிஎல் சவுண்டு சிஸ்டம், சிபி ரேடியோ, எஃப்எம் ரேடியோ மற்றும் க்ரூஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ஹேட்ச்பேக் ரக கார்களில்கூட இல்லாத அளவில் 55 லிட்டரை சேமித்து வைத்துக்கொள்ளுகின்ற வகையில் ப்யூவல் டேங்க் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

சும்மா கத விடாதீங்க பாஸ்.. இந்த பைக் விலை 62 லட்சமா..? லக்சூரி க்ரூஸர் இறக்குமதி செய்யப்பட்ட கதை!

தொடர்ந்து, பயணிகள் இருக்கைக்கு கீழே மிகப்பெரிய அளவில் இட வசதி வழங்கப்பட்டுள்ளது. இது லக்கேஜ் வைப்பதற்கான ஸ்டோரேஜ் ஆகும். இதுதவிர, பின்னிருக்கை மேல் கூடுதலாக சுமையேற்றிக் கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பு வசதிக் கொண்ட டிரைக் பைக்கை வைத்திருப்பவர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாபு ஜான் என்று கூறப்படுகின்றது.

MOST READ:எடப்பாடியின் முயற்சியால் தமிழகத்திற்கு அடித்த ஜாக்பாட்! என்னது இத்தனை ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பா?

சும்மா கத விடாதீங்க பாஸ்.. இந்த பைக் விலை 62 லட்சமா..? லக்சூரி க்ரூஸர் இறக்குமதி செய்யப்பட்ட கதை!

இவர் இந்தியர் என்றாலும் தற்போது அரபு நாட்டில் தொழில்புரிந்து வருகின்றார். இந்த டிரைக் பைக்கை அவர் கடந்த 14 நான்கு மாதங்களுக்கு முன்பே இறக்குமதி செய்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால், சுங்க இலாக்க அதிகாரிகளின் கெடுபிடியால் வெளியேற்றாமல் முடியாமல் தவித்து வந்துள்ளார். இதையடுத்து, சட்டத்தின் உதவியை நாடி பாபு ஜான் பெரும் தொகையை வரியாக செலுத்தி பயன்பாட்டுக்காக எடுத்துவந்துள்ளர்.

MOST READ: 1,600 தொழிலாளர்களுக்கு வலுக்கட்டாயமாக ஓய்வளித்து வீட்டிற்கு அனுப்பும் டாடா மோட்டார்ஸ்..

சும்மா கத விடாதீங்க பாஸ்.. இந்த பைக் விலை 62 லட்சமா..? லக்சூரி க்ரூஸர் இறக்குமதி செய்யப்பட்ட கதை!

அவ்வாறு, டிரைக் பைக்கை வெளியே கொண்டு வந்தபோது, அதில் இடம்பெற்றிருந்த பல வசதிகள் வேலை செய்யவில்லை என அவர் கூறப்படுகின்றது. பைக்கின் மின் ஒயர் போன்றவற்றை எலிகள் பதம்பார்க்கப்பட்டு மிக மோசமான நிலையில் இருந்ததாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

MOST READ: ஓடும் பேருந்தின் கியரை மாற்றி விளையாடிய சிறுவன்... டிரைவருக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா..?

சும்மா கத விடாதீங்க பாஸ்.. இந்த பைக் விலை 62 லட்சமா..? லக்சூரி க்ரூஸர் இறக்குமதி செய்யப்பட்ட கதை!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களை இந்தியாவில் சர்வீஸ் செய்வது அவ்வளவு எளிதான காரியமில்லை என்பது அனைவரும் ஒன்று. ஆகையால், துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோல்டு விங்கை சீர் செய்வதில் பாபு ஜான் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார். மேலும், அதனை சீர் செய்ய சுமார் 11 மணி நேரங்களுக்கும் அதிகமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சும்மா கத விடாதீங்க பாஸ்.. இந்த பைக் விலை 62 லட்சமா..? லக்சூரி க்ரூஸர் இறக்குமதி செய்யப்பட்ட கதை!

ஹோண்டா கோல்டு விங் பைக்கில் ஆறு சிலிண்டர் கொண்ட 1,832 சிசி திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது. இந்த டிரைக் பைக்கில் 5 ஸ்பீடு உள்ளீடு கொண்ட கியர் மற்றும் ரிவர்ஸ் கியர் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கை ஹோண்டா ரூ. 30 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனைச் செய்கின்றது.

சும்மா கத விடாதீங்க பாஸ்.. இந்த பைக் விலை 62 லட்சமா..? லக்சூரி க்ரூஸர் இறக்குமதி செய்யப்பட்ட கதை!

ஆனால், கேரளாவைச் சேர்ந்த பாபு ஜான், ஹோண்டா கோல்டு விங்கை அரபு நாட்டில் இருந்து வாங்கியது மற்றும் இறக்குமதி செய்ததபோன்று பல்வேறு காரணங்களுக்காக ரூ. 62 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விலை சற்று அதிகமாக காணப்பட்டாலும் அதில் பல்வேறு சொகுசு வசதிகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Honda Gold Wing Trike India Imported Story. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X