ஹோண்டா இன்சைட் ஹைப்ரிட் செடான் கார் இந்தியாவில் தரிசனம்!

ஹோண்டா இன்சைட் ஹைப்ரிட் செடான் கார் முதல்முறையாக இந்திய மண்ணில் தென்பட்டுள்ளது. படங்கள் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா இன்சைட் ஹைப்ரிட் செடான் கார் இந்தியாவில் தரிசனம்!

இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதனால், அனைத்து நிறுவனங்களும் மின்சார மற்றும் ஹைப்ரிட் எரிபொருள் வகை மாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கி இருக்கின்றன. அந்த வகையில், ஜப்பானிய கார் நிறுவனமான ஹோண்டா தனது இன்சைட் ஹைப்ரிட் செடான் காரை இந்தியாவில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

ஹோண்டா இன்சைட் ஹைப்ரிட் செடான் கார் இந்தியாவில் தரிசனம்!

இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கும் ஹோண்டா இன்சைட் கார் மூன்றாம் தலைமுறை மாடல் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த காரில் மறைப்புகள் எதுவும் இல்லாமல் சோதனை செய்யப்படுவது ஆட்டோமொபைல் துறையினரை ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

ஹோண்டா இன்சைட் ஹைப்ரிட் செடான் கார் இந்தியாவில் தரிசனம்!

இந்த புதிய ஹோண்டா இன்சைட் செடான் காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு ஆற்றல் மையங்களுமே இ-சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைந்து செயலாற்றுகிறது. பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின் மோட்டார் இணைந்து அதிகபட்சமாக 151 எச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 7.7 வினாடிகளில் எட்டிவிடும்.

ஹோண்டா இன்சைட் ஹைப்ரிட் செடான் கார் இந்தியாவில் தரிசனம்!

இந்த காருக்கு கூடுதல் டார்க் திறனை வழங்குவதில் மின் மோட்டாரின் பங்கு முக்கியமானதாக இருக்கும். லித்தியம் அயான் பேட்டரி மூலமாக மின் மோட்டார் இயங்குகிறது.

ஹோண்டா இன்சைட் ஹைப்ரிட் செடான் கார் இந்தியாவில் தரிசனம்!

புதிய ஹோண்டா இன்சைட் காரில் முன்னால் செல்லும் கார்களுக்கு தகுந்தவாறு இடைவெளியை தானாக மாற்றி பாதுகாப்பாக செலுத்தும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், மோதலை தவிர்க்கும் தானியங்கி பிரேக் சிஸ்டம், தடம் மாறுதலை எச்சரிக்கும் வசதி, சாலை குறியீடுகளை கண்டுணரும் திறன் இந்த காரில் உள்ளது.

ஹோண்டா இன்சைட் ஹைப்ரிட் செடான் கார் இந்தியாவில் தரிசனம்!

எதிரில் வாகனங்கள் வந்தால், தானாக டிம் செய்து கொள்ளும் ஆட்டோமேட்டிக் ஹை பீம் ஹெட்லைட் சிஸ்டம், அனைத்து சக்கரங்களுக்கும் சரியான விகத்தில் பிரேக் பவரை செலுத்தும் வசதி, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட எக்கச்சக்கமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

ஹோண்டா இன்சைட் ஹைப்ரிட் செடான் கார் இந்தியாவில் தரிசனம்!

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்ட்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகளையும் வழங்கும். 2 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், எல்இடி ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகியவையும் உள்ளது.

ஹோண்டா இன்சைட் ஹைப்ரிட் செடான் கார் இந்தியாவில் தரிசனம்!

புதிய ஹோண்டா இன்சைட் ஹைப்ரிட் கார் டொயோட்டா கேம்ரி, ஸ்கோடா சூப்பர்ப் ஆகிய கார்களுக்கு போட்டியாக களமிறக்கப்படும் வாய்ப்புள்ளது. ஹோண்டா சிவிக் காரைவிட அதிக விலை கொண்ட மாடலாக வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. ஆனால், இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது குறித்து இதுவரை எந்த தகவலும் ஹோண்டா நிறுவனத்திடம் இருந்து இல்லை.

Source: Rushlane

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Japanese car maker Honda is testing third generation Insight hybrid sedan in India for the first time.
Story first published: Friday, November 8, 2019, 14:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X