ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

பேட்டரியில் இயங்கும் ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கான சந்தை மெல்ல வேகமெடுத்து வருகிறது. இந்த சந்தையில் உள்நாட்டு நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா ஆகியவை முன்னிலை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஆனால், ஹூண்டாய் நிறுவனம் ஒருபடி மேலே போய் தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகம் செய்துள்ளது.

ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

அடுத்து எம்ஜி மோட்டார் நிறுவனமும் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், ஹோண்டா கார் நிறுவனமும் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது.

ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

அதன்படி, பேட்டரியில் இயங்கும் ஜாஸ் காரை இந்தியாவில் வைத்து சாலை சோதனகளுக்கு உட்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ஸ்பை படங்கள் வெளியாகின. இந்த நிலையில், டெல்லியில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருவது குறித்த படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

வெளிநாடுகளில் ஃபிட் என்ற பெயரில் விற்பனையாகி வரும் ஜாஸ் காரின் எலெக்ட்ரிக் மாடல்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் காரின் டிசைன் தற்போது விற்பனையில் உள்ள சாதாரண ஜாஸ் காரிலிருந்து பல்வேறு சிறிய அளவிலான மாற்றங்களை கண்டுள்ளது.

ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

முன்புற க்ரில் அமைப்பு எடுக்கப்பட்ட இரண்டு ஹெட்லைட் க்ளஸ்ட்டர்களையும் இணைக்கும் விதத்திலான, சில்வர் பட்டை கொடுக்கப்பட்டுள்ளது. டெயில் லைட் க்ளஸ்ட்டரும் மாற்றப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த டிசைனில் பெரிய மாற்றங்கள் இல்லை.

ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

புதிய அலாய் வீல்கள், ரியர் ஸ்பாய்லர் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக உள்ளன. வலது முன்புற ஃபென்டரில் சார்ஜிங் போர்ட் மூடி கொடுக்கப்பட்டு இருப்பதை ஸ்பை படங்கள் மூலமாக தெரிந்து கொாள்ள முடிகிறது.

ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

புதிய ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்போது, 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை ஓட்டம்!

அடுத்த ஆண்டு இந்த புதிய ஹோண்டா ஜாஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியர்களின் பார்வைக்கு அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் அல்லது 2021ம் ஆண்டில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Source: Carandbike

Most Read Articles
English summary
The Honda Jazz EV has now been spotted yet again on the Indian streets.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X