ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தோனேஷியாவில் நடந்து வரும் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படும், இந்த மாடலின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

கடந்த 2015ம் ஆண்டு ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் ஹோண்டா மொபிலியோ எம்பிவி காருக்கு மாற்றாக, எஸ்யூவி மாடலாக மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.10 லட்சம் பட்ஜெட்டிலான 7 சீட்டர் எஸ்யூவி என்பது இதன் முக்கிய அம்சமாக இருந்து வருகிறது.

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

இந்த நிலையில், இதன் விலை ரகத்தில் மாருதி எர்டிகா, மஹிந்திரா மராஸ்ஸோ உள்ளிட்ட கார்களின் வருகையால், இந்த காருக்கு கடும் நெருக்கடி இருந்து வருகிறது. எனவே, மேம்படுத்தப்பட்ட மாடல் அவசியமாகி இருக்கிறது. இந்த சூழலில், இந்தோனேஷிய மோட்டார் ஷோவில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய ஹோண்டா பிஆர்வி எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

இந்த மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பபட்டுள்ளன. முன்புற பம்பர், ரேடியேட்டர் க்ரில் அமைப்புகளின் வடிவமைப்பு மாற்றப்பட்டு புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

ஸ்கிட் பிளேட் மாதிரியிலான அலுமினிய பாகம், க்ரோம் க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. புதிய பாடி கிளாடிங் சட்டங்கள், டைமண்ட் கட் அலாய் வீல்கள், புதிய பின்புற பம்பர் அமைப்பு ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

புதிய ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியில்ல 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சிவப்பு நூல் தையல் வேலைப்பாடுகளுடன் அப்ஹோல்ஸ்ட்ரி, சென்டர் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவை முக்ிய அம்சங்களாக இருக்கின்றன.

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

இந்தோனேஷிய மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனும் வழங்கப்படும். மேலும், இந்தியாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படும் என்று ஹோண்டா கார் நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது.

ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம்!

கடந்த 4 ஆண்டுகளாக ஹோண்டா பிஆர்வி எஸ்யூவியில் எந்த மாற்றங்களும் இல்லாமல் விறபனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், புதுப்பொலிவுடன் கூடுதல் வசதிகளுடன் வரும் புதிய ஹோண்டா பிஆர்வி வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

Image Source: Honda.Orlando

Most Read Articles
English summary
Honda cars has unveiled the BR-V facelift at the ongoing Indonesia International Motor Show. The current-gen Honda BR-V was launched in 2015 and since then there have been no updates to the model.
Story first published: Friday, April 26, 2019, 10:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X