ஓட்டல் பார்க்கிங்கில் இருக்கும் கார் திருடு போனால் யார் பொறுப்பு.. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

வாலட் பார்க்கிங்கில் கொடுக்கப்படும் கார் திருடு போனால் யார் பொறுப்பேற்பது என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

பார்க்கிங்கில் இருக்கும் கார் திருடு போனால் யார் பொறுப்பு... சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

கடந்த 1998ம் ஆண்டு டெல்லியில் உள்ள தாஜ் மஹால் ஓட்டலுக்கு காரில் வந்த விருந்தினர் ஒருவர் தனது மாருதி ஸென் காரை பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு தங்கியுள்ளார். ஆனால், திரும்பி வந்து பார்த்தபோது, காரை காணவில்லை.

பார்க்கிங்கில் இருக்கும் கார் திருடு போனால் யார் பொறுப்பு... சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

இதையடுத்து, ஓட்டல் நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால், இதற்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது. இது உரிமையாளரின் சொந்த பொறுப்பு என்றும் தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, ஓட்டல் நிர்வாகத்திற்கு எதிராக தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

பார்க்கிங்கில் இருக்கும் கார் திருடு போனால் யார் பொறுப்பு... சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

இந்த புகாரை ஏற்றுக்கொண்டு குறைதீர் ஆணையம் விசாரணை நடத்தியது. இதில், காரை பறிகொடுத்தவருக்கு ரூ.2.8 லட்சத்தை இழப்பீடாக வழங்க ஓட்டல் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

பார்க்கிங்கில் இருக்கும் கார் திருடு போனால் யார் பொறுப்பு... சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

ஆனால், இழப்பீடு வழங்க மறுத்த ஓட்டல் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பார்க்கிங் செய்தபோது கொடுத்த ரசீதில், உரிமையாளர்கள் சொந்த பொறுப்பிலேயே காரை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளதாக ஓட்டல் நிர்வாகம் வாதாடியது.

பார்க்கிங்கில் இருக்கும் கார் திருடு போனால் யார் பொறுப்பு... சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சதானந்தகவுதர் மற்றும் அஜய் ரோத்தகி ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்கனவே தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.

பார்க்கிங்கில் இருக்கும் கார் திருடு போனால் யார் பொறுப்பு... சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

ஓட்டல் நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்ட வாதங்களை நிராகரித்த நீதிபதிகள்,"ஓட்டல் பார்க்கிங்கில் நிறுத்தப்படும் கார் உள்ளிட்ட வாகனங்கள் காணாமல் போனாலும், சேதம் அடைந்தாலும் அதற்கு ஓட்டல் நிர்வாகம் முழு பொறுப்பேற்க வேண்டும்," என்று தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

பார்க்கிங்கில் இருக்கும் கார் திருடு போனால் யார் பொறுப்பு... சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

அதேநேரத்தில், இதுபோன்ற விஷயத்தில் ஓட்டல் நிர்வாகம் எப்போதுமே பொறுப்பேற்க வேண்டியதில்லை. இயற்கை சீற்றங்கள், உரிமையாளரின் அலட்சியத்தால் சேதம் அடைவது, விதிமீறல் தொடர்பாக அரசு அதிகாரிகள் வாகனங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட தருணங்களில் ஓட்டல் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டாம் என்றும் தெளிவுப்படுத்தி உள்ளனர்.

பார்க்கிங்கில் இருக்கும் கார் திருடு போனால் யார் பொறுப்பு... சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், சினிமா தியேட்டர்களில் பார்க்கிங் வசதி அளிக்கப்படுகிறது. கார் பார்க்கிங் செய்வதற்காக தனியாக கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. சில நிறுவனங்கள் தங்களது நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை தரும் விதத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில்லை. அவர்கள் வாங்கும் பொருட்களால் வரும் லாபமே போதுமானதாக கருதுகின்றன.

பார்க்கிங்கில் இருக்கும் கார் திருடு போனால் யார் பொறுப்பு... சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

இந்த நிலையில், பார்க்கிங்கிற்காக கொடுக்கப்படும் ரசீதில், காரில் ஏற்படும் சேதம், திருடு போதல் உள்ளிட்டவற்றிற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் பொறுப்பேற்காது என்று வாசகம் இடம்பெற்றிருக்கிறது. இதனை வைத்து பார்க்கிங்கில் நடக்கும் விபத்துக்கள் மற்றும் திருடு போவது உள்ளிட்டவற்றில் இருந்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் பொறுப்பேற்பதில்லை. அது உரிமையாளரின் சொந்த பொறுப்பு என்றும் தெரிவித்துவிடுகின்றனர்.

பார்க்கிங்கில் இருக்கும் கார் திருடு போனால் யார் பொறுப்பு... சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. இது நிச்சயம் வாகன உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் தீர்ப்பாகவே கருத முடியும்.

Most Read Articles
English summary
A bench of justices M M Shantanagoudar and Ajay Rastogi held, "Once possession of the vehicle is handed to the hotel staff or valet, there is an implied contractual obligation to return the vehicle in a safe condition upon the direction of the owner".
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X