காருக்கு ஃபாஸ்டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களில் ஃபாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்தும் நடைமுறை வரும் ஜனவரி 15 முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது. இந்த அட்டையை பெறுவதற்கான வழிகளை இந்த செய்தியில் காணலாம்.

காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள்!

ஃபாஸ்ட் டேக் வாங்கும் வழிகள்

ஃபாஸ்ட் டேக் அட்டையை வாங்குவதற்கு பல்வேறு வழிமுறைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்படுத்தி தந்துள்ளது. ஃபாஸ்ட் டேக் அட்டையை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடி அலுவலகங்களில் மட்டுமில்லாமல், வங்கிகள் மற்றும் பேடிஎம், ஏர்டெல் உள்ளிட்ட பண பரிவர்த்தனை செயலிகள் மூலமாகவும் எளிதாக பெறும் வாய்ப்புகள் உள்ளன.

காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள்!

சுங்கச் சாவடி அலுவலங்கள்:

சுங்கச் சாவடிகளில் உள்ள அலுவலகம் மூலமாக பெறுவதற்கு காரின் பதிவுச் சான்று மற்றும் உரிமையாளரின் அடையாளச் சான்று உள்ளிட்டவற்றை நேரடியாக எடுத்துச் சென்று விண்ணப்பித்து பெற முடியும். ஃபாஸ்ட் டேக் அட்டையை வாங்கியவுடன் ஃபாஸ்ட் டேக் செயலியை ஸ்மார்ட்ஃபோனில் தரவிறக்கம் செய்து கொண்டு, அட்டையில் உள்ள எண்ணையும், ஓடிபி எண்ணையும் வைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.

காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள்!

வங்கிக் கணக்குடன் இணைப்பு

மேலும், ஃபாஸ்ட் டேக் செயலியை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் ஏதேனும் ஒரு வங்கியுடன் இணைத்துக் கொள்ளலாம். அல்லது மொபைல்போன் ரீசார்ஜ் செய்வது போல அந்த ஃபாஸ்ட் டேக் வாலட்டில் பணத்தை வரவு வைத்துக் கொண்டு பயணத்தை தொடரலாம். தானியங்கி முறையில் வங்கி கணக்கிலிருந்து ஃபாஸ்ட் டேக் செயலி மூலமாக பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதியையும் நீங்கள் செயல்படுத்திக் கொள்ள முடியும்.

காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள்!

வங்கிகள் மூலமாக வாங்கும் வழிகள்

நாட்டின் முன்னணி வங்கிகளும் இந்த ஃபாஸ்ட் டேக் அட்டையை விற்பனை செய்கின்றன. ஆனால், எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் தனது கிளைகள் மூலமாக நேரடியாக விற்பனை செய்யவில்லை. வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட ஃபாஸ்ட் டேக் விற்பனை மையங்கள் அல்லது சுங்கச் சாவடி அருகில் செயல்படும் வங்கியின் நேரடி விற்பனை மையங்கள் மூலமாக ஃபாஸ்ட் டேக்கை வாங்க முடியும். வாகனத்தின் பதிவு ஆவணம், உரிமையாளர் அடையாளச் சான்று மற்றும் வாகனத்தை நேரடியாக எடுத்து வருவது அவசியம் என எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் தெரிவிக்கின்றன.

காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள்!

ஆக்டிவேஷன்

ஃபாஸ்ட் டேக் அட்டையை பெற்றவுடன் வங்கியின் பிரத்யேக செயலி அல்லது ஃபாஸ்ட் டேக் கணக்கு (வங்கியின் ஃபாஸ்ட் டேக் கணக்கு பக்கம்) மூலமாக மொபைல் எண்ணை கொடுத்து ஓடிபி மூலமாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பின்னர், மேற்கண்டவாறே, வங்கிக் கணக்குடன் இணைத்துக் கொள்ளலாம்.

காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள்!

உடனடியாக கிடைக்குமா?

இதனை அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மைய பணியாளர்களும் செய்து கொடுக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆனால், ஃபாஸ்ட் டேக் கையிருப்புக்கு தக்கவாறு, உடனே பெற முடியுமா அல்லது சில நாட்கள் கழித்து சென்று வாங்க வேண்டிய நிலை ஏற்படுமா என்பதை அங்குள்ள நிலவரத்தை பொறுத்து அங்கீகரிக்கப்பட்ட வங்கியின் விற்பனை மையங்கள்தான் தெரிவிக்கும்.

காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள்!

வங்கிகளின் ஆன்லைன் விற்பனை முறை

வங்கியிலிருந்து ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பித்து பெற முடியும். வாகனத்தின் பதிவு சான்றின் படத்தையும், விபரங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதன்மூலமாக, வங்கியிலிருந்து ஃபாஸ்ட் டேக் குறிப்பிட்ட நாளில் வீட்டிற்கு வந்துவிடும். ஃபாஸ்ட் டேக்கிற்காக வங்கியின் பிரத்யேக பக்கத்தில் சென்று பரிவர்த்தனை விபரங்களை பார்த்துக் கொள்ள முடியும்.

காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள்!

பேடிஎம் பெஸ்ட்

அடுத்து இப்போது அனைவரும் பயன்படுத்தும் பேடிஎம் ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக ஃபாஸ்ட் டேக்கை எளிதாக ஆர்டர் செய்து வாங்க முடியும். பேடிம் செயலியில் உள்ள ஃபாஸ்ட் டேக் பிரிவுக்கு சென்று வாகனத்தின் பதிவுச் சான்றை மொபைலில் படம் எடுத்து பதிவேற்றம் செய்து சில விபரங்களை அளித்தால் போதுமானது. ரூ.500 கட்டணமும் செலுத்த வேண்டும். இதில், ரூ.150 என்பது வாலட்டில் வரவு வைக்கப்பட்டு இருக்கும். இதனை முதல்முறை பயணத்திற்கான சுங்கக் கட்டணமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள்!

கொஞ்சம் பொறுத்திருக்கணும்

அடுத்த 15 நாட்களுக்குள் ஃபாஸ்ட் டேக் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். இது செயல்பாட்டுக்கு உகந்த நிலையில் வருவதால், வந்த உடன் காரின் முன்புற விண்ட் ஷீல்டின் உட்புறமாக குறிப்பிட்ட இடத்தில் ஸ்டிக்கரை எடுத்து விட்டு ஒட்டினால் போதுமானது. இது மிக எளிதானதாக இருக்கும். அத்துடன், நீங்கள் எந்த வங்கியின் மூலமாகவும் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். தானியங்கி முறையில் வங்கிக் கணக்கிலிருந்து கட்டணத்தை எடுக்கும் வசதியும் உள்ளது.

காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள்!

ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான அதிகபட்ச கட்டணம்

ஃபாஸ்ட் டேக் பெறுவதற்கு அதிகபட்சமாக ரூ.500 வரை வசூலிக்கப்படுகிறது. இதில், வங்கிகளை பொறுத்து ரூ.150 முதல் ரூ.200 வரை கட்டண வாலட்டில் வரவு வைக்கப்பட்டுவிடுகிறது. மீதமுள்ளவை ஃபாஸ்ட் டேக் அட்டையை வழங்குவதற்கான கட்டணம், காப்புத் தொகை ஆகியவை அடங்கும். ஃபாஸ்ட் டேக் செயலிக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட்பேங்கிங் வசதி மூலமாக எளிதாக ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள்!

சிறப்பான திட்டம்

ஃபாஸ்ட் டேக் இருக்கும் காரில் செல்வதன் மூலமாக பல்வேறு அனுகூலங்களை பெற முடியும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் இனி வரிசையில் நிற்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும். இதனால், கால விரயம், எரிபொருள் செலவு ஆகியவை தவிர்க்கப்படும். சுங்கச் சாவடிகளை கடக்கும்போது பணம் எடுக்கப்பட்டது தொடர்பாக குறுந்தகவல் வந்துவிடும். எனவே, மோசடிகள் நடப்பதற்கும் வாய்ப்பு இருக்காது என்று தெரிகிறது. ஒரு ஃபாஸ்ட் டேக்கை ஒரு வாகனத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

Most Read Articles
English summary
ஃபாஸ்ட் டேக் பெறுவதற்கான வழிகள், ஃபாஸ்ட் டேக் வாங்கும் முறைகள், ஃபாஸ்ட் டேக் பயன்கள், ஃபாஸ்ட் டேக் டிப்ஸ்
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X