இருந்த இடத்திலிருந்து ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்குவதற்கான வழிகள்!

வரும் டிசம்பர் 1 முதல் வாகனங்களில் ஃபாஸ்ட் டேக் மின்னணு அட்டை இருப்பது கட்டாயமாக்கப்பட இருக்கிறது. ஃபாஸ்ட் டேக்கை எளிதாக வாங்குவதற்கான வழிமுறைகளை இந்த செய்தியில் காணலாம்.

காருக்கு ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்குவதற்கான வழிகள்!

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் 535 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. இதில், 412 சுங்கச்சாவடிகள் முற்றிலும் ஃபாஸ்ட் டேக் மூலமாக பணம் செலுத்தும் நடைமுறைக்கு மேம்படுத்தப்பட இருக்கின்றன. சாலை அமைத்தது, கட்டமைப்பு வசதிகள் மற்றும் பராமரிப்புக்காக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட அளவு சுங்கக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இருந்த இடத்திலிருந்து காருக்கான ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்கலாம்!

சுங்கச்சாவடிகளில் கட்டணம் பெரும்பாலும் ரொக்கமாகவே வசூலிக்கப்படுவதால், சில்லறை வழங்குவது உள்ளிட்டவற்றால் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்களில் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தி விட்டு கடப்பதற்கு அதிக கால விரயம் ஏற்படுகிறது.

இருந்த இடத்திலிருந்து காருக்கான ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்கலாம்!

இதனை தவிர்க்கும் விதமாக, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் மின்னணு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தானியங்கி முறையில் பணம் செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கட்டாயமாக்க முடிவு செய்தது. இதற்காக, அனைத்து வாகனங்களிலும் ஃபாஸ்ட் டேக் எனப்படும் மின்னணு பண பரிமாற்ற வசதியை வழங்கும் அட்டை பயன்படுத்தப்படும்.

இருந்த இடத்திலிருந்து காருக்கான ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்கலாம்!

வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்குடன் இந்த ஃபாஸ்ட் டேக் அட்டை இணைக்கப்பட்டு இருக்கும். ரேடியோ சிக்னல் தொழில்நுட்ப முறையில் செயல்படும் இந்த அட்டையை கார் உள்ளிட்ட வாகனங்களின் முகப்பில் உள்ள விண்ட் ஷீல்டு கண்ணாடியில் ஒட்ட வேண்டும்.

இருந்த இடத்திலிருந்து காருக்கான ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்கலாம்!

சுங்கச்சாவடியை கடக்கும்போது வாகனத்தில் உள்ள இந்த ஃபாஸ்ட் டேக் அட்டையின் மூலமாக சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டு இருக்கும் கருவி மூலமாக வாகனம் அடையாளம் காணப்படும் தானியங்கி முறையில் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும். குறிப்பிட்ட நேரத்தில் இரு வழித்தடத்தை பயன்படுத்தும்போது தானியங்கி முறையில் கட்டணம் குறைவாக கழிக்கப்படும். எனவே, இந்த சந்தேகமும் மத்திய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இருந்த இடத்திலிருந்து காருக்கான ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்கலாம்!

இதனால், சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டிய அவசியம் இருக்காது. எரிபொருள் விரயம், கால விரயத்தை போக்குவதற்கு இந்த ஃபாஸ்ட் டேக் அட்டை வரப்பிரசாதமாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. வரும் டிசம்பர் 1 முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்களில் ஃபாஸ்ட் டேக் எனப்படும் இந்த கட்டணம் செலுத்தும் அட்டை இருப்பது அவசியம்.

இருந்த இடத்திலிருந்து காருக்கான ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்கலாம்!

மேலும், சுங்கச்சாவடிகளில் உள்ள அனைத்து வரிசைகளும் ஃபாஸ்ட் டேக் மூலமாக செல்லும் வகையில் மாற்றம் செய்யப்படும். ஒரே ஒரு வரிசையில் மட்டுமே ரொக்கமாக கட்டணம் செலுத்த முடியும். ஆனால், கட்டணத்தைவிட இரு மடங்காக செலுத்த வேண்டும். அதாவது, ஒருமடங்கு பயன்பாட்டுக்கு கட்டணமும், அதற்கு ஈடான தொகை அபராதமாகவும் செலுத்த வேண்டும்.

இருந்த இடத்திலிருந்து காருக்கான ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்கலாம்!

எனவே, ஃபாஸ்ட் டேக் அட்டையை வாங்குவதற்கு வாகன உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஃபாஸ்ட் டேக் அட்டையை வாங்குவதற்கு மிக எளிதான வழிமுறைகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பேடிஎம், அமேஸான் செயலிகள் மூலமாக மிக எளிதாக ஆர்டர் செய்து வாங்கலாம்.

இருந்த இடத்திலிருந்து காருக்கான ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்கலாம்!

அதேபோன்று, பாரத ஸ்டேட் வங்கி, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ், கோடக் மஹிந்திரா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட 23 வங்கிகள் மூலமாக ஃபாஸ்ட் டேக் அட்டையை வாகன உரிமையாளர்கள் ஆர்டர் செய்யலாம். குறிப்பிட்ட நாட்களில் ஃபாஸ்ட் டேக் அட்டை வாடிக்கையாளர்களின் வீட்டு விலாசத்திற்கே வந்துவிடும். இதற்காக, எங்கும் அலைய வேண்டாம்.

இருந்த இடத்திலிருந்து காருக்கான ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்கலாம்!

ஆனால், ஃபாஸ்ட் டேக் அட்டையை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும்போது, உரிமையாளரின் பெயர், வாகன பதிவு எண் மற்றும் வாகனத்தின் பதிவுச் சான்று அல்லது ஆர்.சி அட்டையை ஸ்கேன் செய்து வங்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

இருந்த இடத்திலிருந்து காருக்கான ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்கலாம்!

வங்கிகளை பொறுத்து ரூ.400 முதல் ரூ.500 வரை கட்டணத்துடன் ஃபாஸ்ட் டேக் அட்டையை விற்பனை செய்கின்றன. இதில், அட்டை வழங்குவதற்கான நடைமுறை கட்டணம், காப்புத் தொகை மற்றும் கட்டணம் செலுத்துவதற்கான குறிப்பிட்ட தொகையை இருப்பு வைத்து வழங்குகின்றன. பேடிம், அமேஸான் செயலிகளிலும், வங்கி கணக்கில் பணம் இருப்பதை உறுதி செய்துவிட்டு பயணிக்க வேண்டியது அவசியம்.

இருந்த இடத்திலிருந்து காருக்கான ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்கலாம்!

வங்கியிலிருந்து ஃபாஸ்ட் டேக் அட்டை கையில் கிடைத்தவுடன், அதன் ஒருபுறத்தில் இருக்கும் ஸ்டிக்கரை நீக்கிவிட்டு வாகனத்தின் முன்புற விண்ட்ஷீல்டில் ஒட்ட வேண்டும். அதாவது, வழிகாட்டுமுறைகளை பின்பற்றி கண்ணாடியின் உட்புறமாக குறிப்பிட்ட பகுதியில் ஒட்டுவது முக்கியம். ஏற்கனவே, அந்த அட்டை உங்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்கும். ஃபாஸ்ட் டேக் அட்டையை வாங்குவதில் வேறு எந்த நடைமுறை சிக்கலையும் எதிர்கொள்ள வேண்டியிருக்காது.

இருந்த இடத்திலிருந்து காருக்கான ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்கலாம்!

வங்கி மூலமாக பெற முடியாத நிலை ஏற்பட்டால், சுங்கச்சாவடியில் செயல்படும் அலுவலங்களில் வேலை நேரத்தில் மேற்கண்ட வாகனம் மற்றும் உரிமையாளர் பற்றிய ஆவணங்களுடன் சென்று ஃபாஸ்ட் டேக் அட்டையை வாங்க முடியும். மேலும், ஃபாஸ்ட் டேக் அட்டையை காப்பு கட்டணமில்லாமல் வழங்கவும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி எளிதாக ஃபாஸ்ட் டேக் அட்டையை வாங்கி பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும்.

இருந்த இடத்திலிருந்து காருக்கான ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்கலாம்!

சுங்கச்சாவடி அலுவலகம் மூலமாக வாங்கும்போது ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்ஃபோன்களுக்காக "My Fastag" என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாக உங்களது வங்கிக் கணக்கை இணைத்துக் கொண்டு கட்டண முறையை ஆக்டிவ் செய்து கொள்ள வேண்டும்.

இருந்த இடத்திலிருந்து காருக்கான ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்கலாம்!

வங்கியிலிருந்து இந்த செயலிக்கு குறிப்பிட்ட தொகையை நீங்கள் முன்கூட்டியே பரிமாற்றம் செய்து இருப்பில் வைத்துக் கொள்வது நல்லது. அதேபோன்று. அதிகபட்சமாக ரூ.20,000 வரை இந்த வாலட்டில் வாகன உரிமையாளர் வைத்துக் கொள்ள முடியும். அதாவது, நீண்ட தூரம் பயணிக்கும் டிரக் உள்ளிட்ட வர்த்தக வாகனங்களுக்கு அதிக கட்டணம் செலுத்தும் நிலை இருக்கிறது.

இருந்த இடத்திலிருந்து காருக்கான ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்கலாம்!

வங்கியில் இருந்து நேரடியாக வாங்கும்போது, அவர்களே ஃபாஸ்ட் டேக் அட்டையில் வங்கிக் கணக்குடன் இணைத்து இருப்பர் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். பேடிஎம், அமேஸான் ஆகிய செயலிகளின் வாலட்டில் பணத்தை வங்கியிலிருந்து பரிமாற்றம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இருந்த இடத்திலிருந்து காருக்கான ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்கலாம்!

புதிதாக வரும் கார் உள்ளிட்ட வாகனங்களில் டீலர்களிலேயே ஃபாஸ்ட் டேக் அட்டை பொருத்தி கொடுக்கப்படுகிறது. எனவே, புதிதாக வாகனம் வாங்குவோர் தனியாக ஆர்டர் செய்து வாங்க வேண்டாம் என்பதையும் மனதில் வையுங்கள். அதேபோன்று, புதிதாக வாகனங்களை முன்பதிவு செய்துள்ளவர்களும் வாங்க வேண்டாம்.

இருந்த இடத்திலிருந்து காருக்கான ஃபாஸ்ட் டேக்கை ஈஸியா வாங்கலாம்!

இந்த ஃபாஸ்ட் டேக் அட்டையின் மூலமாக நெடுஞ்சாலைகளில் செல்வோர் நேரத்தையும், எரிபொருள் விரயத்தையும் வெகுவாக மிச்சப்படுத்த முடியும் என்பதுடன், வங்கிகள் கட்டணத்தில் குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடியையும் வழங்குகின்றன. ஆனால், சுங்கச்சாவடிகளில் ஆயிரக்கணக்கானோர் வசூலிப்பாளர்கள் பணியில் இருந்தனற். இவர்கள் ஷிஃப்ட் முறையில் வேலை செய்து வந்தனர். புதிய ஃபாஸ்ட் டேக் கட்டண முறை அறிவிப்பால், அவர்கள் பணி இழப்பை சந்திக்கும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

Most Read Articles
English summary
Here are some ways to get fastag easily ahead few days of the deadline.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X