பிரபல மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்... காரணம் என்ன?

ஹூண்டாய் இந்தியா நிருவனம் தனது பிரபல மாடல்களான கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்சென்ட் கார்களின் சிஎன்ஜி வேரியண்ட்களை திரும்ப அழைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் கார்களுக்கு மட்டுமே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரபல மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்... காரணம் என்ன?

இந்த அழைப்பிற்கு காரணம், இந்நிறுவனம் கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்சென்ட் மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட்களில் உள்ள சிஎன்ஜி ஃபில்டர் அசெம்பிள் யூனிட்டில் சில வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையின் காரணமாக சோதனையிட்டு அந்த அசெம்பிள் முழுவதையும் மாற்றி கொடுக்க உள்ளதாம்.

பிரபல மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்... காரணம் என்ன?

இதற்காகவே இவ்விரு மாடல்களின் 6,409 சிஎன்ஜி வேரியண்ட்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன. இந்த சிஎன்ஜி மாடல் கார்கள் 2017 ஆகஸ்ட் 1ல் இருந்து 2019 செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த கால இடைவெளியில் தயாரிக்கப்பட்ட சிஎன்ஜி வேரியண்ட்களை வைத்திருக்கும் உரிமையாளர்களை ஹூண்டாய் நிறுவனம் வருகிற 25ஆம் தேதியில் இருந்து தொடர்பு கொள்ள உள்ளது.

பிரபல மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்... காரணம் என்ன?

இந்த சிஎன்ஜி ஃபில்டர் மாற்றம், கிராண்ட் ஐ10 மற்றும் எக்ஸ்செண்ட் மாடல் கார்களில் முற்றிலும் இலவசமாக செய்துதரப்பட உள்ளது. இந்த இரு மாடல்களும் 1.2 லிட்டர் என்ஜினுடன் விற்பனையாகி வருகின்றன. இவற்றின் சிஎன்ஜி வேரியண்ட் 65 பிஎச்பி பவர் மற்றும் 98 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

பிரபல மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்... காரணம் என்ன?

ஹுண்டாய் நிறுவனம் தற்சமயம் புதிய கம்பெக்ட் செடான் கார் தயாரிப்பில் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அவ்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் விரைவில் இந்திய சந்தையில் எக்ஸ்சென்ட் மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது. எக்ஸ்சென்ட்டிற்கு மாற்று என்பது உறுதியான தகவல் இல்லை. எனவே கிராண்ட் ஐ10- நியோஸ் மாடல்களை போல எக்ஸ்சென்ட் மாடல் உடனும் அவ்ரா-ஐ ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்யலாம்.

பிரபல மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்... காரணம் என்ன?

இந்தியாவில் அறிமுகமாகும் முதல் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான செடான் கார் என்ற பெயரை பெறவுள்ள அவ்ரா மாடலின் என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் குறித்த விரிவான தகவல்கள் சமீபத்தில் தான் வெளியானது. இதனை அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

பிரபல மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்... காரணம் என்ன?

அவ்ரா மாடல் மட்டுமன்றி ஹூண்டாய் நிறுவனம் மேலும் சில மாடல்களையும் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்து அறிமுகப்படுத்தவுள்ளது. அந்த வகையில் ஹூண்டாய் ஐ20 மாடல் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விபரங்களை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

பிரபல மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்... காரணம் என்ன?

கிராண்ட் ஐ10 மாடலின் தயாரிப்பை 2020 ஏப்ரல் முதல் நிறுத்தவுள்ளதாக ஏற்கனவே இந்நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் விரைவில் அவ்ரா மாடல் அறிமுகமாகவுள்ளதால் எக்ஸ்சென்ட் காரின் தயாரிப்பையும் நிறுத்துமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பிரபல மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட் கார்களை திரும்ப அழைக்கும் ஹூண்டாய்... காரணம் என்ன?

இவ்வாறு ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் பல பணிகளால் மிகவும் பிஸியாகவுள்ளது. இதற்கிடையிலும் கிராண்ட் ஐ10, எக்ஸ்சென்ட் மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை களைவதற்கு திரும்ப அழைத்திற்கும் முடிவு உண்மையில் பாராட்டக்குரிய செயலாகும்.

Most Read Articles
English summary
Hyundai Recalls CNG Variants Of Grand i10 & Xcent Models: Here’s Why!
Story first published: Thursday, November 21, 2019, 19:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X