ஜனவரி முதல் ஹூண்டாய் கார் விலை உயர்கிறது

வரும் ஜனவரி முதல் ஹூண்டாய் கார் விலை கணிசமாக உயர்த்தப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வரும் ஜனவரி முதல் ஹூண்டாய் கார் விலை உயர்கிறது

மூலப்பொருட்களின் விலை, உற்பத்தி செலவீனம் மற்றும் பண மாற்று மதிப்பு அடிப்படையில், காலாண்டுக்கு ஒருமுறை கார்களின் விலையை உயர்த்துவது குறித்து வாகன நிறுவனங்கள் பரிசீலிப்பது வழக்கம். அந்த வகையில், வரும் ஜனவரி முதல் கார் விலையை உயர்த்துவதற்கான முடிவை வாகன நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.

வரும் ஜனவரி முதல் ஹூண்டாய் கார் விலை உயர்கிறது

ஏற்கனவே, மாருதி சுஸுகி, கியா மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ளன. தற்போது இந்த வரிசையில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கார் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் கார் விலையை உயர்த்தும் முடிவை அறிவித்துள்ளது.

வரும் ஜனவரி முதல் ஹூண்டாய் கார் விலை உயர்கிறது

ஹூண்டாய் கார் நிறுவனத்தின் அனைத்து கார்களின் விலையும் உயர்த்தப்பட இருப்பதாக தெரிகிறது. பொதுவாக 2 முதல் 3 சதவீதம் கார் விலை உயர்த்துவது கார் நிறுவனங்களின் வழக்கமாக இருக்கிறது. வரும் ஜனவரி முதல் கார் விலையை உயர்த்த இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

வரும் ஜனவரி முதல் ஹூண்டாய் கார் விலை உயர்கிறது

ஜனவரியில் கார் விலை உயர்த்தப்பட்டதற்கு பின் அடுத்த ஓரிரு மாதங்களில் பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய கார்களை ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் அறிமுகப்படுத்த உள்ளன. அப்போது மற்றொரு விலை உயர்வையும் வாடிக்கையாளர்கள் சந்திக்க வேண்டி இருக்கும்.

வரும் ஜனவரி முதல் ஹூண்டாய் கார் விலை உயர்கிறது

பிஎஸ்-6 கார்களின் விலை கணிசமாக அதிகரிக்கும் என தெரிகிறது. அதாவது, பட்ஜெட் கார்களின் விலை ரூ.10,000 முதல் ரூ.15,000 வரையிலும், பெரிய வகை டீசல் கார்களின் விலை ஒரு லட்ச ரூபாய் முதல் 3 லட்ச ரூபாய் வரை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

வரும் ஜனவரி முதல் ஹூண்டாய் கார் விலை உயர்கிறது

எனவே, பிஎஸ்-6 கார்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக ஒரு விலை உயர்வை கொடுப்பதற்கு கார் நிறுவனங்கள் தயாராகிவிட்டதாக கருதப்படுகிறது. இதர நிறுவனங்களும் விரைவில் கார் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

வரும் ஜனவரி முதல் ஹூண்டாய் கார் விலை உயர்கிறது

ஜனவரியில் ஒரு விலை உயர்வை தொடர்ந்து அடுத்த ஓரிரு மாதங்களில் மற்றொரு விலை உயர்வு என புதிய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்க காத்திருப்போருக்கு இரடிப்பு அதிர்ச்சியை தாங்குவதற்கு தயாராக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Most Read Articles
English summary
Hyundai Motor has announced that the company wwill increase prices of all its cars from January 2020.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X