4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா!

இந்தியாவின் எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் க்ரெட்டா சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நேற்றுடன் 4 ஆண்டுகளை ஹூண்டாய் க்ரெட்டா பூர்த்தி செய்துள்ளது. இருப்பினும், ஹூண்டாய் க்ரெட்டா மீதான மோகம் இன்னமும் குறைந்தபாடில்லை. பல புதிய மாடல்கள் வந்தாலும், விற்பனையில் தொடர்ந்து இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடல்களில் ஒன்றாக தக்கவைத்து வருகிறது.

4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா!

ஸ்திரமான மார்க்கெட்

எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ் கார்களின் வருகை ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு சற்று நெருக்கடியை அளித்தாலும், தொடர்ந்து சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் விற்பனையில் 5 லட்சம் யூனிட்டுகளை கடந்து அசத்தியது. இந்த நிலையில், பல புதிய மாடல்கள் வந்தாலும், ஹூண்டாய் க்ரெட்டாவுக்கு தொடர்ந்து அதிக வரவேற்பு இருப்பதற்கான சில காரணங்களை இங்கே காணலாம்.

4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா!

டிசைன்

ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு இருப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று டிசைன். சொகுசு ரக கார்களுக்கு நிகரான மிக நேர்த்தியான அழகான எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முகப்பில் பிரம்மாண்ட க்ரில் அமைப்பு, மிடுக்கான தோற்றம் இந்த எஸ்யூவி வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகிறது.

4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா!

விலை

ஹூண்டாய் க்ரெட்டா கார் மிகச் சரியான விலையில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் ரூ.9.80 லட்சம் முதல் ரூ.15.40 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மிட்சைஸ் கார்களுக்கு நிகரான அம்சங்களை பெற்றிருப்பதுடன், மிகச் சரியான விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் கிடைப்பது இதன் மதிப்பை தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா!

இடவசதி

ஹூண்டாய் க்ரெட்டா காரில் 5 பேர் பயணிப்பதற்கு போதுமான சிறப்பான இடவசதியை அளிக்கிறது. கேபினில் சிறப்பான சப்த தடுப்பு அமைப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், தினசரி மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக இருக்கிறது.

4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

எஞ்சின் தேர்வுகள்

புதிய ஹூண்டாய் க்ரெட்டா கார் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும், டீசல் எஞ்சின்கள் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கின்றன. மைலேஜிலும் வாடிக்கையாளர்களின் பாக்கெட்டை பதம் பார்க்காத அளவுக்கு சிறந்த எரிபொருள் சிக்கனம் கொண்ட மாடலாக இருந்து வருகிறது.

4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா!

ஓட்டுதல் தரம்

செயல்திறன் மிக்க எஞ்சின், அருமையான கையாளுமை, சிறந்த ஸ்டீயரிங் சிஸ்டம் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புடன் ஓட்டுதல் தரத்திலும் சிறந்த எஸ்யூவி கார் மாடலாக நன்மதிப்பை பெற்றிருக்கிறது. இதனால், ஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உற்சாகமான அனுபவத்தை தரும்.

4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா!

பாதுகாப்பு

ஹூண்டாய் க்ரெட்டா காரின் டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சி்டம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ளது. மேலும், இந்த காரின் இடதுகை ஸ்டீயரிங் வீல் அமைப்புடைய மாடல் லத்தீன் என்சிஏபி அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் 5க்கு 4 என்ற நட்சத்திர மதிப்பீட்டை பெற்றது.

4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா!

நிறைவான கார்

அனைத்து அம்சங்களிலும் நிறைவான கார். கொடுக்கும் பணத்திற்கு அதிக மதிப்பை தருவதுடன், ரீசேல் மதிப்பிலும் சிறந்து விளங்குகிறது. இதனால், பல புதிய மாடல்கள் வந்தாலும் ஹூண்டாய் க்ரெட்டா காரின் மதிப்பு குறையவில்லை.

4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா!

புதிய மாடல்

புதிய தலைமுறை அம்சங்களுடன் கூடிய ஹூண்டாய் க்ரெட்டா கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பில் பல்வேறு மாறுதல்களுடன் அதிக நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த கார் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hyundai Creta is the best selling model in its class and here are some reason why it's so popular suv among indian customers.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X