ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!!

ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்கும் வகையில் புதிய கார்கள் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு களமிறங்கவுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!!

இந்திய வாகன மார்க்கெட் கடந்த சில மாதங்களாக மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில், கார் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலிலும் கூட, எஸ்யூவி செக்மெண்ட் கார்களின் விற்பனை பெரிய அளவில் எல்லாம் பாதிக்கப்படவில்லை. குறிப்பாக எஸ்யூவி செக்மெண்ட்டில் புதிதாக விற்பனைக்கு களமிறக்கப்பட்ட ஹூண்டாய் வெனியூ (சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி) காரின் விற்பனை அமோகமாக உள்ளது.

ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!!

அத்துடன் எஸ்யூவி செக்மெண்ட்டிற்கு மற்றொரு புதுவரவான எம்ஜி ஹெக்டருக்கு புக்கிங் குவிந்து வருகிறது. இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் எஸ்யூவி ரக கார்களை எவ்வளவு விரும்புகின்றனர் என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே. இந்தியாவின் எஸ்யூவி மார்க்கெட்டில் அசைக்க முடியாததொரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் கார் ஹூண்டாய் கிரெட்டா. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஹூண்டாய் கிரெட்டாவும் ஒன்று.

ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!!

இந்திய மார்க்கெட்டில் தற்போது ஹூண்டாய் கிரெட்டாவிற்கு ஒரு சில கார்கள் நேரடியாக போட்டியாகவே திகழ்ந்து வருகின்றன. ஆனால் அவற்றால், ஹூண்டாய் கிரெட்டாவின் விற்பனையை பெரிய அளவில் அசைத்து பார்க்க முடியவில்லை. எனினும் வருங்காலத்தில் இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டாலும் கூட ஏற்படலாம். ஆம், ஹூண்டாய் கிரெட்டாவிற்கு போட்டியாக இந்திய மார்க்கெட்டில் ஒரு சில புதிய கார்கள் களமிறங்கவுள்ளன. இது ஹூண்டாய் கிரெட்டாவின் விற்பனையில் தாக்கத்தை உண்டாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படி ஹூண்டாய் கிரெட்டாவிற்கு போட்டியாக களமிறங்கவுள்ள புதிய கார்கள் குறித்து இனி பார்க்கலாம்.

ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!!

ஹோண்டா எச்ஆர்-வி (Honda HR-V)

விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் மாதம்: ஆகஸ்ட் 2019

புத்தம் புதிய எச்ஆர்-வி காரை ஹோண்டா நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக கூடிய விரைவில் எச்ஆர்-வி காரை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் களமிறக்கவுள்ளது. இந்திய மார்க்கெட்டில், ஹூண்டாய் கிரெட்டாவிற்கு நேரடி போட்டியாக ஹோண்டா எச்ஆர்-வி திகழும்.

ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு முன்னதாக, எச்ஆர்-வி காரை இந்திய சாலைகளில் இறுதிகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தும் பணிகளை ஹோண்டா ஏற்கனவே தொடங்கி விட்டது. ஹோண்டா எச்ஆர்-வி காரில், 1.8 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.6 லிட்டர் i-DTEC டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த இரண்டு இன்ஜின்களுமே ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை ஆப்ஷனாக பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!!

மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio)

விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் காலம்: 2020 தொடக்கம்

இந்திய மார்க்கெட்டில் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ காரை களமிறக்கும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. தற்போது உள்ள மாடலை காட்டிலும் புத்தம் புதிய ஸ்கார்பியோ தோற்றத்தில் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!!

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்பு, ஹூண்டாய் கிரெட்டா மட்டுமல்லாது, டாடா ஹாரியர் எஸ்யூவி காருடனும் இது நேரடியாக போட்டி போடும். அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் புத்தம் புதிய 2.0 லிட்டர் இன்ஜினை புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ பெறும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!!

கியா செல்டோஸ் (Kia Seltos)

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி: 2019 ஆகஸ்ட் 22

கியா நிறுவனம் தங்களது பல்வேறு தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், முதல் கார் செல்டோஸ். புத்தம் புதிய பிளாட்பார்ம் அடிப்படையில் கியா செல்டோஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்பார்ம் அடிப்படையில்தான் அடுத்த தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!!

கியா செல்டோஸ் ஏராளமான வசதிகளுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஏர் ப்யூரிஃபையர், கனெக்டட் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 6 ஏர் பேக்குகள் உள்ளிட்ட வசதிகள் கியா செல்டோஸ் எஸ்யூவியில் வழங்கப்படவுள்ளன. செல்டோஸ் காரில் கியா நிறுவனம் மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களையும், மூன்று ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களையும் வழங்கவுள்ளது.

ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!!

நீங்கள் எஸ்யூவி ரகத்திலான காரை விரும்பாதவர் என்றால், விரைவில் 7பேர் அமரும் வசதியுடன் மலிவு விலையில் களமிறங்க உள்ள எம்பிவி ரக ரெனால்ட் ட்ரைபர் கார் குறித்த தகவலை கீழே காணலாம்.

ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!!

பிரான்ஸை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் வெகு விரைவில் களம் இறக்கவுள்ள புதிய கார் ஒன்று வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ட்ரைபர்தான் அந்த கார். 7 சீட்டர் காரான ரெனால்ட் ட்ரைபர், மூன்று வரிசை இருக்கை அமைப்புடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!!

போதுமான இடவசதி மற்றும் அட்டகாசமான டிசைனுடன் ரெனால்ட் ட்ரைபர் களம் காணவுள்ளது. அத்துடன் ஓரளவிற்கு குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுவதால், இந்திய வாடிக்கையாளர்களின் ஆவலை ட்ரைபர் தூண்டியுள்ளது. ரெனால்ட் ட்ரைபர் கார் குறித்து நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி கொண்டுள்ளன.

ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!!

இதன்படி ரெனால்ட் ட்ரைபர் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. இந்த வரிசையில் ரெனால்ட் ட்ரைபர் காரின் அறிமுகம் மற்றும் டெலிவரி தொடர்பாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி ரெனால்ட் ட்ரைபர் கார் இந்திய மார்க்கெட்டில் அடுத்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!!

அனேகமாக ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ரெனால்ட் ட்ரைபர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் ஆகஸ்ட் மாத இறுதியில், ரெனால்ட் ட்ரைபர் காரின் டெலிவரி தொடங்கப்படும் எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!!

ஆனால் இந்த தகவலை ரெனால்ட் இந்தியா நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை. அதிகாரப்பூர்வ தேதியை ரெனால்ட் இந்தியா நிறுவனம் அறிவிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும். ரெனால்ட் ட்ரைபர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கூறப்படும் அதே ஆகஸ்ட் 22ம் தேதிதான் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மற்றொரு காரான கியா செல்டோஸ் எஸ்யூவி இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!!

செல்டோஸ் எஸ்யூவிதான் இந்தியாவில் கியா நிறுவனம் களமிறக்கவுள்ள முதல் கார். சரி, மீண்டும் ரெனால்ட் ட்ரைபருக்கு வருவோம். ரெனால்ட் ட்ரைபர் காருக்கான முன்பதிவு அனேகமாக அடுத்த வாரம் தொடங்கப்படலாம் என தெரிகிறது. மாருதி சுஸுகி ஸ்விப்ட் மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 உள்ளிட்ட கார்களுடன் ரெனால்ட் ட்ரைபர் போட்டியிடும்.

ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!!

நான்கு ஏர் பேக்குகள், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், அனைத்து வரிசைகளிலும் ஏசி வெண்ட் உள்பட பல்வேறு வசதிகளுடன் ரெனால்ட் ட்ரைபர் களம் காணவுள்ளது. ரெனால்ட் ட்ரைபர் காரில், 1.0 லிட்டர் 'எனர்ஜி' பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவர் மற்றும் 96 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

ஹூண்டாய் கிரெட்டாவிற்கு கடும் சவால் அளிக்க களமிறங்கும் கார்கள் இவைதான்... அனல் பறக்க போகும் போட்டி!!

இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் Easy-R ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெனால்ட் ட்ரைபர் காரின் ஆரம்ப விலை 5 லட்ச ரூபாயாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயம் டாப் எண்ட் வேரியண்ட் 7 லட்ச ரூபாய் என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

Most Read Articles
English summary
Hyundai Creta’s Upcoming Rivals : Honda HR-V, Kia Seltos, New Mahindra Scorpio. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X