ஸ்பெஷல் க்ரெட்டா மாடலை இந்தியாவில் களமிறக்கியது ஹூண்டாய்... அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனம், அதன் ஸ்பெஷல் எடிசன் ஹூண்டாய் க்ரெட்டா மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஸ்பெஷல் க்ரெட்டா மாடலை இந்தியாவில் களமிறக்கியது ஹூண்டாய்... அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா...?

இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார்களுக்கான சந்தை அண்மைக் காலங்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன்காரணமாக, சமீப காலமாக களமிறங்கும் கார்கள் அனைத்தும், இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி சந்தையை குறிவைத்தே அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது.

ஆகையால், கடந்த வருடங்களில் இந்திய மிட்-சைஸ் எஸ்யூவி சந்தை அதிக எண்ணிக்கையிலான அறிமுகங்களைக் கண்டது.

ஸ்பெஷல் க்ரெட்டா மாடலை இந்தியாவில் களமிறக்கியது ஹூண்டாய்... அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா...?

இந்நிலையில், புதிய அறிமுகங்களால் மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் தலைவனாக செயல்படும், ஹூண்டாய் க்ரெட்டா சமீபகாலமாக கடுமையான போட்டியைச் சந்தித்து வருகின்றது. அதிலும், மிக முக்கியமாக புதிய வரவாக இருக்கும் டாடா ஹாரியர், எம்ஜி ஹெக்டர் கார்களால் அதிக சோதனையைச் சந்தித்து வருகின்றது.

ஸ்பெஷல் க்ரெட்டா மாடலை இந்தியாவில் களமிறக்கியது ஹூண்டாய்... அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா...?

இந்த தாக்குதலை எதிர்கொள்ளும் விதமாக, ஹூண்டாய் நிறுவனம், க்ரெட்டாவின் லிமிடெட் எடிசன் மாடலாக ஸ்போர்ட்ஸ் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய க்ரெட்டா ஸ்போர்ட்ஸ் வேரியண்டின் பெட்ரோல் வெர்ஷன் ரூ. 12.78 லட்சம் என்ற விலையிலும், டீசல் வெர்ஷன் ரூ. 14.13 லட்சம் என்ற விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் க்ரெட்டா மாடலை இந்தியாவில் களமிறக்கியது ஹூண்டாய்... அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா...?

இவையனைத்தும், எக்ஸ்-ஷோரூம் விலையாகும். அதேசமயம், இந்த வெர்ஷன்களும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்க இருக்கின்றது.

ஹூண்டாய் க்ரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிசன் முற்றிலும் மாறுபட்ட காஸ்மெடிக் அப்டேட்டைப் பெற்றிருக்கின்றது. இத்துடன், 20 வகையிலான புதிய அப்கிரேடுகளை இந்த கார் பெற்றிருக்கின்றது. இது ஸ்டாண்டர்டு மாடலைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டதாக காணப்படுகின்றது.

ஸ்பெஷல் க்ரெட்டா மாடலை இந்தியாவில் களமிறக்கியது ஹூண்டாய்... அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா...?

இதைத்தொடர்ந்து, இந்த கார் பேந்தம் கருப்பு மற்றும் போலார் வெள்ளை உள்ளிட்ட இரண்டு விதமான வண்ண தேர்வில் கிடைக்கின்றது. இத்துடன், ட்யூவல் டோன் ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்படுகின்றது. அந்தவகையில், காரின் ரூஃப் மட்டும் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றது. ட்யூவல் டோன் தேர்விற்காக கூடுதலாக ரூ. 11 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிங்கிள் டோன் வேரியண்டிற்கு இந்த கூடுதல் விலை கிடையாது.

ஸ்பெஷல் க்ரெட்டா மாடலை இந்தியாவில் களமிறக்கியது ஹூண்டாய்... அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா...?

புத்தம் புதிய இந்த ஸ்போர்ட்ஸ் எடிசன் க்ரெட்டா, அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால், பல்வேறு புதிய அப்டேட்டுகள் வழங்கப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கின்றது. அந்தவகையில், ஸ்மோக்கட் புரொஜக்டர் ஹெட்லேம்ப், டார்க் குரோம் ஃபினிஸ் கிரில், சில்வர் ரூஃப் ரெயில், ஸ்கிட் பிளேட்டுகள், பாக்ஸ் ட்யூவல் எக்சாஸ்ட், கருப்பு நிற கண்ணாடி கேஸ் மற்றும் ரியர் ஸ்பாய்லர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கூடுதலாக காணப்படுகின்றன.

ஸ்பெஷல் க்ரெட்டா மாடலை இந்தியாவில் களமிறக்கியது ஹூண்டாய்... அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா...?

அதேபோன்று, காரின் கேபினுக்குள்ளும் கணிசமான மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், இன்டீரியர் முழவதுக்கும் கருப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், காரின் இருக்கைக்கு கருப்பு நிறத்திலான ஃபேப்ரிக்குகள் க்ரெட்டா என்ற எழுத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் க்ரெட்டா மாடலை இந்தியாவில் களமிறக்கியது ஹூண்டாய்... அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா...?

அதேபோன்று, ஸ்டியரிங் வீலிற்கு லெதர் உறை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் எடிசன், க்ரெட்டாவின் எஸ்எக்ஸ் வேரியண்ட்டை தழுவி தயார் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், அதில் இடம்பெற்றிருக்கும் அனைத்தும் அம்சங்களும், தற்போதைய ஸ்போர்ட்ஸ் எடிசனிலும் இடம்பெற்றிருக்கின்றது.

ஸ்பெஷல் க்ரெட்டா மாடலை இந்தியாவில் களமிறக்கியது ஹூண்டாய்... அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா...?

அந்தவகையில், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஹைட் அட்ஜஸ்டபிள் டிரைவர் இருக்கை, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சிறப்பம்சத்துடன் கூடிய 7.0 இன்சிலான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஒயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்பெஷல் க்ரெட்டா மாடலை இந்தியாவில் களமிறக்கியது ஹூண்டாய்... அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா...?

இத்துடன், பாதுகாப்பு அம்சங்களாக, ட்யூவல் ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி உள்ளிட்டவையும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த காரில் மெக்கானிக்கலாக எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகின்றது.

ஸ்பெஷல் க்ரெட்டா மாடலை இந்தியாவில் களமிறக்கியது ஹூண்டாய்... அப்படி என்ன ஸ்பெஷல் இருக்குனு தெரியுமா...?

ஆகையால், 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்ஜின் தேர்வே ஸ்பெஷல் ஸ்போர்ட்ஸ் எடிசன் வேரியண்டில் கிடைக்கின்றது. இந்த வேரியண்ட் சாதாரண வேரியண்டைக் காட்டிலும் 60 ஆயிரம் கூடுதல் விலை உயர்வைப் பெற்றிருக்கின்றது.

Most Read Articles
English summary
Hyundai Creta Sports Edition Launched In India. Read In Tamil.
Story first published: Friday, August 2, 2019, 20:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X