நம்ம எடப்பாடியார் தொடங்கி வைத்த காருக்கு இத்தனை சிறப்பா... ஆட்டம், பாட்டத்துடன் டெலிவரி!

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் ஆட்டம் பாட்டத்துடன், வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நம்ம எடப்பாடியார் தொடங்கி வைத்த காருக்கு இத்தனை சிறப்பா... ஆட்டம், பாட்டத்துடன் டெலிவரி!

பொதுவாக வாகன விற்பனை மையங்கள் புதிய வாகனங்களை டெலிவரி கொடுக்கும்போது, வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, ஆச்சரியப் பரிசை கொடுப்பது வழக்கம்.

அந்தவகையில், அண்மையில் ஜீப் நிறுவனம், நடிகை தாப்ஸி புக் செய்திருந்த காம்பஸ் காரை டெலிவரி கொடுக்கும்போது, ஆட்டம் ஆடி, பாட்டு பாடி கொண்டாட்டத்துடன் புதிய காரை டெலிவரி கொடுத்தனர். இதுகுறித்த, வீடியோ மிக வேகமாக வைரலாகியது.

நம்ம எடப்பாடியார் தொடங்கி வைத்த காருக்கு இத்தனை சிறப்பா... ஆட்டம், பாட்டத்துடன் டெலிவரி!

ஓர் நடிகைக்கு இத்தகைய சிறப்பு அந்தஸ்தா என பொறாமைப்படும் வகையில், அச்சம்பவம் இருந்தது.

இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனமும் இத்தகைய சிறப்பான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளது. ஆனால், இந்நிறுவனம் ஓர் நடிகரை கொண்டாடவில்லை. மாறாக, அதன் சாதாரண வாடிக்கையாளரை மிகச் சிறப்பாக வரவேற்கும் வகையில், இத்தகைய செயலை செய்துள்ளது.

நம்ம எடப்பாடியார் தொடங்கி வைத்த காருக்கு இத்தனை சிறப்பா... ஆட்டம், பாட்டத்துடன் டெலிவரி!

இச்சம்பவம், உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் டீலர்களால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, இதுகுறித்த வீடியோவும் வைரலாகி வருகின்றது.

வீடியோவில், ஷோரூமிற்குள் வரும் வாடிக்கையாளர்களை அன்புடன் வரவேற்கும் ஊழியர்கள், அவர்களை இருக்கையில் அமர வைக்கின்றனர். பின்னர், பாலிவுட் திரைப்பட பாடலை ஒலிக்க வைத்துவிட்டு, ஒரு சிறிய குத்தாட்டத்தை போடுகின்றனர்.

நம்ம எடப்பாடியார் தொடங்கி வைத்த காருக்கு இத்தனை சிறப்பா... ஆட்டம், பாட்டத்துடன் டெலிவரி!

அதேநேரத்தில், வாடிக்கையாளர்களை சிறப்பாக உபசரிக்கும் விதமாக, அவர்களுக்கு வெல்கம் ட்ரிங்க் வழங்கப்படுகின்றது. தொடர்ந்து, இருக்கையில் அமர்ந்திருந்த அவர்களை அழைத்து சென்ற ஊழியர்கள், காருக்கு முன்பு நிறுத்தி, சுற்றி வந்து நடனமாடி மகிழ்வித்தனர்.

இதனை பார்க்கும்போது, சிறிய திருவிழாவைப் போன்று இருக்கின்றது. இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்...

சாதாரண வாடிக்கையாளர்களையும் கொண்டாடும் வகையில், ஹூண்டாய் மேற்கொண்ட இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக, டாப்ஸிக்கு டெலிவரி கொடுக்கப்பட்ட வீடியோ 15 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றது. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் இந்த வீடியோ, இந்த எண்ணிக்கையை தொடுமா என்பது தெரியவில்லை. ஏனென்றால், இந்தியாவில் நடிகர்களுக்கு எப்போதும் நல்ல மதிப்பு உண்டு.

நம்ம எடப்பாடியார் தொடங்கி வைத்த காருக்கு இத்தனை சிறப்பா... ஆட்டம், பாட்டத்துடன் டெலிவரி!

ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காராக கோனா விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த கார் கடந்த ஜூலை மாதம் 9ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 25.30 லட்சம் ஆகும்.

நம்ம எடப்பாடியார் தொடங்கி வைத்த காருக்கு இத்தனை சிறப்பா... ஆட்டம், பாட்டத்துடன் டெலிவரி!

இந்த காரின் உற்பத்தி சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் தயாரிப்பு கூடத்தில்தான் நடைபெற்று வருகின்றது. இதன் பாகங்கள் அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டு, அசெம்பிள் செய்யப்பட உள்ளன.

இந்த காரின் டெலிவரியை தொடங்கி வைக்கும் விதமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த மாதம் 24ம் தேதி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

நம்ம எடப்பாடியார் தொடங்கி வைத்த காருக்கு இத்தனை சிறப்பா... ஆட்டம், பாட்டத்துடன் டெலிவரி!

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த கோனா எலெக்ட்ரிக் காரில் 39.2KWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிமீ வரை பயணிக்க முடியும்.

அதற்கேற்ப வகையில், 100 kW திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது, 136 பிஎஸ் பவரையும், 395 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த எஸ்யூவி ரக கார் முன்பக்க வீல் டிரைவ் திறன் கொண்டதாக இருக்கின்றது. இது, சிங்கிள் ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைந்து இயங்குகின்றது.

நம்ம எடப்பாடியார் தொடங்கி வைத்த காருக்கு இத்தனை சிறப்பா... ஆட்டம், பாட்டத்துடன் டெலிவரி!

அதேசமயம், இந்த எஞ்ஜின் 0த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 9.7 செகண்டுகளிலேயே தொட்டுவிடும் என கூறப்படுகின்றது. இத்துடன், இதில் நான்கு விதமான ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. அவை, ஈகோ, ஈகோ ப்ளஸ், கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் ஆகிய பெயர்களில் இயங்கும்.

நம்ம எடப்பாடியார் தொடங்கி வைத்த காருக்கு இத்தனை சிறப்பா... ஆட்டம், பாட்டத்துடன் டெலிவரி!

இந்த எலெக்ட்ரிக் காரில் சிறப்பு வசதிகளாக, சன் ரூஃப், வென்டிலேட் செய்யக்கூடிய இருக்கைகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஸ்பிளிட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி டிஆர்எல் விளக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவை, காருக்கு லக்சூரியஸ் மற்றும் சிறப்பான தோற்றத்தை வழங்குகின்றது.

நம்ம எடப்பாடியார் தொடங்கி வைத்த காருக்கு இத்தனை சிறப்பா... ஆட்டம், பாட்டத்துடன் டெலிவரி!

இத்துடன், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ப்ளே வசதியுடன் கூடிய 7 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயிண்மெண்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகளாக சாவியில்லா நுழைவு மற்றும் ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

நம்ம எடப்பாடியார் தொடங்கி வைத்த காருக்கு இத்தனை சிறப்பா... ஆட்டம், பாட்டத்துடன் டெலிவரி!

மேலும், பாதுகாப்பு வசதியாக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், டிஸ்க் பிரேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஐசோ பிக்ஸ் சைல்ட் இருக்கை மவுண்டுகள் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கார், தற்போது இந்தியாவின் முக்கியமான 11 நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கின்றது.

Most Read Articles
English summary
Hyundai Dealer Sales Executives Dance Bollywood Songs Before Delivering Kona EV To Customer-Video. Read In Tamil.
Story first published: Thursday, August 22, 2019, 12:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X