ஹோண்டா சிவிக் காருக்கு போட்டியாக ஹூண்டாய் அப்டேட் செய்த கார் இதுதான்... இந்த வருடமே அறிமுகமாகலாம்...

ஹூண்டாய் நிறுவனம், ஹோண்டா சிவிக் காருக்கு போட்டியாக, அதன் எலான்ட்ரா மாடலை புதுப்பித்துள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலை கூடிய விரைவில் அந்த நிறுவனம் விற்பனைக்கு அறிமுக செய்ய இருக்கின்றது. இந்த கார் குறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹோண்டா சிவிக் காருக்கு போட்டியாக ஹூண்டாய் அப்டேட் செய்த கார் இதுதான்... இந்த வருடமே அறிமுகமாகலாம்....!

ஹூண்டாய் நிறுவனம், அதன் எலான்ட்ரா எனும் செடான் ரக காரை நடப்பாண்டிற்கு ஏற்ப புதுப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலை கூடிய விரைவில், அதாவது இன்னும் ஒரு சில மாதங்களிலேயே அந்த நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கேற்ப, புதுப்பிக்கப்பட்ட எலான்ட்ரா காரை ஹூண்டாய் நிறுவனம் அவ்வப்போது, சாலையில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

ஹோண்டா சிவிக் காருக்கு போட்டியாக ஹூண்டாய் அப்டேட் செய்த கார் இதுதான்... இந்த வருடமே அறிமுகமாகலாம்....!

ஹோண்டா நிறுவனத்தின் சிவிக் மாடலுக்கு போட்டியாக தயாராகி இருக்கும் இந்த புதிய எலான்ட்ரா கார், அதற்கு கடுமையான போட்டியைக் கொடுக்கும் வகையில் சிறப்பான முறையில் அப்டேட்களைப் பெற்றுள்ளது. ஹோண்டா நிறுவனம், அதன் புதிய தலைமுறை சிவிக் காரை அண்மையில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது.

ஹோண்டா சிவிக் காருக்கு போட்டியாக ஹூண்டாய் அப்டேட் செய்த கார் இதுதான்... இந்த வருடமே அறிமுகமாகலாம்....!

ஆகையால், தற்போது இந்த காருக்கு போட்டியாக களமிறங்க இருக்கும் இந்த புதிய எலான்ட்ரா கார் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில், முழுமையாக மேம்படுத்தப்பட்ட மாடலாக புதிய எலான்ட்ரா கார் உருவாகியுள்ளது. அதற்கேற்ப வகையில் இதன் முகப்பு பகுதி மிகவும் பிரமாண்டமாக, பெரிய அளவில் தயாராகியுள்ளது.

ஹோண்டா சிவிக் காருக்கு போட்டியாக ஹூண்டாய் அப்டேட் செய்த கார் இதுதான்... இந்த வருடமே அறிமுகமாகலாம்....!

இதைத்தொடர்ந்து, பல்வேறு புதிய பாகங்களுக்கும் இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு, பம்பர், க்ரில், ஹூட் மற்றும் ஹெட்லைட் உள்ளிட்டவை புதிய அமைப்பைக் கொண்டவையாக இருக்கின்றன. இந்த பிரத்யேக பாகங்கள் காரின் முகப்பு பகுதிக்கு கூர்மையான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளன.

ஹோண்டா சிவிக் காருக்கு போட்டியாக ஹூண்டாய் அப்டேட் செய்த கார் இதுதான்... இந்த வருடமே அறிமுகமாகலாம்....!

மேலும், எலான்ட்ராவின் பக்கவாட்டு பகுதி, பின் பகுதி உள்ளிட்ட அனைத்து பக்கங்களும், மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தற்போதைய மாடலும், பார்ப்பதற்கு மிகவும் போல்டான தோற்றத்தைப் பெற்றதாகவே இருக்கின்றது. இதனை மேலும் மெருகேற்றும் வகையில், புதிய மாடல் எலான்ட்ராவின் தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிவிக் காருக்கு போட்டியாக ஹூண்டாய் அப்டேட் செய்த கார் இதுதான்... இந்த வருடமே அறிமுகமாகலாம்....!

ஹூண்டாய் எலான்ட்ரா காரின் பின் பகுதியில் புத்தம் வடிவிலான பம்பர், காரின் பதிவெண்ணை தாங்கிக் கொள்ளும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, ட்ரங்க்கின் கதவிற்கும் புதிய தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் கதவில்தான் ஹூண்டாய் நிறுவனத்தின் லோகோவும், அதன்கீழ் பிராண்ட் பெயரும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், பிரத்யேக டிசைனிலான டெயில் லேம்பும் அதில் இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிவிக் காருக்கு போட்டியாக ஹூண்டாய் அப்டேட் செய்த கார் இதுதான்... இந்த வருடமே அறிமுகமாகலாம்....!

தொடர்ந்து, காரின் கேபினுக்குள் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு, புத்தம் புதிய வடிவிலான ஸ்போர்ட்டி லுக்கிலான ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஏசியை கன்ட்ரோல் செய்வதற்கும் புதிய அமைப்பிலான சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் காரின் இன்டீரியர் பகுதியில் இடம்பெற்றுள்ளன. ஆனால், அவை குறித்த முழுமையான இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

ஹோண்டா சிவிக் காருக்கு போட்டியாக ஹூண்டாய் அப்டேட் செய்த கார் இதுதான்... இந்த வருடமே அறிமுகமாகலாம்....!

2019 ஹூண்டாய் எலான்ட்ரா கார் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு எஞ்ஜின் தேர்வில் களமிறக்கப்பட உள்ளன. அவ்வாறு, 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்ஜின் ஆகிய ஆப்ஷன்களில் இவை கிடைக்கவிருக்கின்றன. இவை, பிஎஸ்6 தரத்தில் ட்யூன் அப் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஹோண்டா சிவிக் காருக்கு போட்டியாக ஹூண்டாய் அப்டேட் செய்த கார் இதுதான்... இந்த வருடமே அறிமுகமாகலாம்....!

இதில், பெட்ரோல் எஞ்ஜின், 152பிஎஸ் பவரையும், 196 என்எம் டார்க்கையும் வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. அதேபோன்று, டீசல் எஞ்ஜின் 128பிஎஸ் பவரையும், 265 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இவை இரண்டும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றது. இந்த காரின் விலை குறித்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இது கூடிய விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hyundai Elantra Facelift To Launch This Year. Read In Tamil.
Story first published: Friday, June 7, 2019, 14:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X