வெனியூ புண்ணியத்தில் எஸ்யூவி சந்தையில் நம்பர்-1 இடத்தை பிடித்த ஹூண்டாய்!

வெனியூ புண்ணியத்தில் எஸ்யூவி சந்தையில் நம்பர்-1 இடத்தை ஹூண்டாய் மோட்டார்ஸ் பிடித்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வெனியூ புண்ணியத்தில் எஸ்யூவி சந்தையில் நம்பர்-1 இடத்தை பிடித்த ஹூண்டாய்!

இந்தியாவின் எஸ்யூவி மார்க்கெட்டில் மஹிந்திரா நிறுவனமும்,மாருதி கார் நிறுவனமும் விற்பனையில் முன்னிலை வகித்து வந்தன. இந்த நிலையில், கடந்த மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெனியூ காருக்கு வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

வெனியூ புண்ணியத்தில் எஸ்யூவி சந்தையில் நம்பர்-1 இடத்தை பிடித்த ஹூண்டாய்!

விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இரண்டு மாதங்களில் 50,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளையும் வாரி சுருட்டியுள்ளது. இதனால், மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட மாடல்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

வெனியூ புண்ணியத்தில் எஸ்யூவி சந்தையில் நம்பர்-1 இடத்தை பிடித்த ஹூண்டாய்!

இந்த நிலையில், வெனியூ கார் விற்பனை மூலமாக எஸ்யூவி மார்க்கெட்டில் ஹூண்டாய் நிறுவனம் நம்பர்-1 இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதாவது, எஸ்யூவி மட்டுமல்லாது, எம்பிவி, எஸ்யூவி கார்கள் அடங்கிய யுட்டிலிட்டி கார் சந்தையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

வெனியூ புண்ணியத்தில் எஸ்யூவி சந்தையில் நம்பர்-1 இடத்தை பிடித்த ஹூண்டாய்!

ஆம், கடந்த ஜூலை மாத விற்பனையில் மொத்தமாக 16,234 எஸ்யூவி ரக கார்களை ஹூண்டாய் மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. இதில், வெனியூ, க்ரெட்டா, டூஸான் மற்றும் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் அடங்கும்.

வெனியூ புண்ணியத்தில் எஸ்யூவி சந்தையில் நம்பர்-1 இடத்தை பிடித்த ஹூண்டாய்!

இரண்டாவது இடத்தில் மஹிந்திரா நிறுவனம் உள்ளது. கடந்த மாதத்தில் 16,003 எஸ்யூவி கார்களை மஹிந்திரா விற்பனை செய்துள்ளது. ஆனால், இதில் எம்பிவி, எஸ்யூவி ரக கார்களை உள்ளடக்கிய யுட்டிலிட்டி ரக கார்களின் விற்பனை கணக்கில் கொள்ளப்ப்டடுள்ளது. எக்ஸ்யூவி500, ஸ்கார்ப்பியோ, பொலிரோ, தார் உள்ளிட்ட யுட்டிலிட்டி ரக கார் மாடல்கள் அடங்கும்.

வெனியூ புண்ணியத்தில் எஸ்யூவி சந்தையில் நம்பர்-1 இடத்தை பிடித்த ஹூண்டாய்!

மூன்றாவது இடத்தில் மாருதி கார் நிறுவனம் உள்ளது. ஜூலையில் மொத்தமாக 15,178 கார்களை விற்பனை செய்துள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, எஸ் க்ராஸ் மற்றும் எர்டிகா காரும் இதில் அடங்கும். ஹூண்டாய் வெனியூ வருகையால் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.

வெனியூ புண்ணியத்தில் எஸ்யூவி சந்தையில் நம்பர்-1 இடத்தை பிடித்த ஹூண்டாய்!

கடந்த மாதத்தில் 9,585 ஹூண்டாய் வெனியூ கார்கள் விற்பனையாகி உள்ளன. அதற்கடுத்து, 6,585 க்ரெட்டா எஸ்யூவி கார்கள் விற்பனையாகி உள்ளன. இதில், வெனியூ வருகையால் ஹூண்டாய் உற்சாகமடைந்திருந்தாலும், க்ரெட்டா விற்பனையை பதம் பார்த்துவிட்டது.

வெனியூ புண்ணியத்தில் எஸ்யூவி சந்தையில் நம்பர்-1 இடத்தை பிடித்த ஹூண்டாய்!

மாதத்திற்கு சராசரியாக 8,000 கார்கள் என்ற அளவில் இருந்த ஹூண்டாய் க்ரெட்டா விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், அந்த இழப்பை வெனியூ மூலமாக ஈடுகட்டிக் கொள்ள ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
Hyundai Beats Maruti Suzuki and Mahindra in India's utility car segment.
Story first published: Monday, August 5, 2019, 12:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X