இந்தியாவில் மிக பிரபலமான இந்த கார் புது அவதாரம் எடுக்கிறது... எதிர்பார்ப்பை எகிற வைத்த தகவல் இதுதான்

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள கிராண்ட் ஐ10 காருக்கு ஹூண்டாய் நிறுவனம் புது அவதாரம் கொடுக்கவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்த காருக்கு புது அவதாரம் கொடுக்கிறது ஹூண்டாய்... காரணம் இதுதான்...

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு பிரபலமான கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இதில் ஒன்றுதான் கிராண்ட் ஐ10 (Hyundai Grand i10). ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனமானது (Hyundai Motor India Limited-HMIL), கிராண்ட் ஐ10 காரை, கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்த காருக்கு புது அவதாரம் கொடுக்கிறது ஹூண்டாய்... காரணம் இதுதான்...

மார்க்கெட்டில் லான்ச் ஆனவுடனே 'ஹிட்' அடித்து, ஹூண்டாய் நிறுவனத்திற்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்ததுடன், வருவாயையும் ஈட்டி தந்தது கிராண்ட் ஐ10. அத்துடன் மாருதி சுஸுகி ஸ்விப்ட் (Maruti Suzuki Swift) காருக்கு வலுவான போட்டியாளராகவும் கிராண்ட் ஐ10 உருவெடுத்தது. வாடிக்கையாளர்கள் வழங்கிய அமோக ஆதரவின் காரணமாக, 1 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை, கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் எட்டியது கிராண்ட் ஐ10.

இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்த காருக்கு புது அவதாரம் கொடுக்கிறது ஹூண்டாய்... காரணம் இதுதான்...

அப்போது ஹூண்டாய் கிராண்ட் ஐ10 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 10 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்தன. வெறும் மாதங்களில், 1 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டியதால், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தது. இதன்பின் அடுத்த வந்த ஆண்டுகளிலும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் விற்பனை சக்கை போடு போட்டது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்த காருக்கு புது அவதாரம் கொடுக்கிறது ஹூண்டாய்... காரணம் இதுதான்...

மலிவான விலை, மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் என இரண்டு கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்பட்டது ஆகியவையே ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. இதனிடையே விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, கிராண்ட் ஐ10 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்த காருக்கு புது அவதாரம் கொடுக்கிறது ஹூண்டாய்... காரணம் இதுதான்...

அப்போது சிறிய அளவிலான மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தன. இந்த சூழலில் தற்போது 7 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை எட்டி அசத்தியிருக்கிறது ஹூண்டாய் கிராண்ட் ஐ10. ஆனால் தற்போது போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், இரண்டாம் தலைமுறை கிராண்ட் ஐ10 காரை களத்தில் இறக்க ஹூண்டாய் நிறுவனம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்த காருக்கு புது அவதாரம் கொடுக்கிறது ஹூண்டாய்... காரணம் இதுதான்...

அனேகமாக நடப்பாண்டில் இறுதியில் வரும் பண்டிகை காலத்தில் புதிய தலைமுறை கிராண்ட் ஐ10 கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என ஹூண்டாய் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்க்கெட்டை விட்டு வெளியேறவுள்ள மாடலுடன் ஒப்பிடுகையில், அடுத்த தலைமுறை மாடல் பல்வேறு மாற்றங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்த காருக்கு புது அவதாரம் கொடுக்கிறது ஹூண்டாய்... காரணம் இதுதான்...

இரண்டாவது தலைமுறை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் முன்பும், பின்பும் புதிய பம்பர்கள் வழங்கப்படுவதுடன், ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லேம்ப்ஸ் ஆகியவை மாற்றியமைக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் டாப் எண்ட் வேரியண்ட்களில் புதிய அலாய் வீல்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் மிகவும் பிரபலமான இந்த காருக்கு புது அவதாரம் கொடுக்கிறது ஹூண்டாய்... காரணம் இதுதான்...

இதன் இன்டீரியரிலும் பல்வேறு புதிய வசதிகள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டீசல் இன்ஜின்கள் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படும் என கூறப்படுகிறது. பிஎஸ்6 (BS6) மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்கும் வகையில் அவை இருக்கலாம். அதே சமயம் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளதால், ஏராளமான பாதுகாப்பு வசதிகளையும் அடுத்த தலைமுறை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
7 Lakh Units Sold: Hyundai Grand i10 Achieves New Sales Milestone In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X