ரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்!

புதிய தலைமுறை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்!

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் வடிவமைப்பிலும், வசதிகளிலும், இடவசதியிலும் மேம்பட்ட மூன்றாம் தலைமுறை மாடலாக வந்துள்ளது. கடந்த 7ந் தேதி முதல் புதிய க்ராண்ட் ஐ10 நியோஸ் காருக்கு முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது. ரூ.11,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யலாம். இந்த புதிய கார் எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்ட்டா ஆகிய 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

ரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்!

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் 3,805 மிமீ நீளமும், 1,680 மிமீ அகலமும், 1,520 மிமீ உயரமும் கொண்டதாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் வீல் பேஸ் 2,450 மிமீ ஆக உள்ளது. பழைய க்ராண்ட் ஐ10 காரைவிட புதிய நியோஸ் மாடலானது நீளத்தில் 40 மிமீ வரையிலும், அகலத்தில் 20 மிமீ வரையிலும் மற்றும் வீல் பேஸ் 25 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்!

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 116 என்எம் டார்க் திறனையும், டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 74 பிஎச்பி பவரையும், 194 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல், டீசல் மாடல்களானது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

ரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்!

புதிய க்ரில் மைப்பபு, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் இடம்பெற்றுள்ளன. உட்புறத்தில் இரட்டை வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. சாஃப்ட் டச் மெட்டீரியல்களும் இதன் பிரிமீயம் அம்சத்தை உணர்த்துகிறது.

ரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்!

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் 8.0 அங்குல ஃப்ளோட்டிங் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் சார்ஜர் மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டமும் உள்ளது.

ரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்!

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர்கள், ஹை ஸ்பீடு வார்னிங் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

ரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்!

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் போலார் ஒயிட், ஆல்ஃபா புளூ, தைபூன் சில்வர், அக்வா டியல், ஃபியரி ரெட், டைட்டன் க்ரே ஆகிய 6 ஒற்றை வண்ணத் தேர்விலும், போலார் ஒயிட் டியூவல் டோன், அக்வா டியல் ஆகிய இரண்டு டியூவல் டோன் வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

ரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்!

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் பெட்ரோல் மாடல் ரூ.4.99 லட்சம் முதல் ரூ.7.13 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடல் ரூ.6.70 லட்சம் முதல் ரூ.7.99 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும். மாருதி ஸ்விஃப்ட், ஃபோர்டு ஃபிகோ உள்ளிட்ட கார்களுடன் போட்டி போடும்.

ரூ.4.99 லட்சம் ஆரம்ப விலையில் புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் அறிமுகம்!

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் விற்பனைக்கு வந்தபோதிலும், பழைய க்ராண்ட் ஐ10 காரும் தொடர்ந்து விற்பனையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், பெட்ரோல் தேர்வில் மட்டுமே கிடைக்கும். எனவே, வாடிக்கையாளர்கள் பட்ஜெட் மற்றும் இதர விஷயங்களை பொறுத்து இரண்டு மாடல்களையும் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles
English summary
Hyundai India has launched the Grand i10 NIOS in the Indian market. The new Hyundai Grand i10 NIOS is available with a starting price of Rs 4.99 lakh. The third-generation hatchback is available in four variants — Era, Magna, Sportz and Asta. The top-spec Grand i10 NIOS Asta is priced at Rs 7.99 lakh. All prices are ex-showroom (Pan India).
Story first published: Tuesday, August 20, 2019, 13:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X