Just In
- 25 min ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 1 hr ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 2 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 2 hrs ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
Don't Miss!
- Finance பேடிஎம் UPI ஐடிகள், புதிய வங்கிகளுக்கு மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு!
- Movies பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
- News ‛‛சார் ஹிந்தி ப்ளீஸ்’’.. முகம்மாறி சீமான் கூறிய வார்த்தை.. விடாத பெண் நிருபரால் கடைசியில் ட்விஸ்ட்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாளன் இவன்தான்... ஷோரூம்களை வந்தடைந்த புதிய தலைமுறை கிராண்ட்ஐ10...
ஹூண்டாய் நிறுவனத்தின், அடுத்த தலைமுறை கிராண்ட் ஐ10 காரின் அடுத்த தலைமுறை மாடல், ஷோரூம்களை வந்தடைந்துள்ளது. இதுகுறித்த ஸ்பை படம் மற்றும் தகவலை இந்த பதிவில் காணலாம்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், அதன் புதிய தலைமுறை கிராண்ட் ஐ10 மாடலை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கின்றது.
இதைமுன்னிட்டு, இந்த கார்கள் அதன் டீலர் ஷோரூம்களை வந்தடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த புகைப்படம் மற்றும் தகவலை காடிாவடி ஆங்கில தளம் வெளியிட்டுள்ளது.
இந்த கார் லாஞ்சிற்கு முன்னரே, இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது குறிப்பிடத்தகுந்தது. அதேசமயம், அந்த நேரத்திலேயே இதற்காகன முன் பதிவுகளும் தொடங்கப்பட்டு விட்டது. அவ்வாறு, முன்னதாக கசிந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் மூலம், புதிய தலைமுறை கிராண்ட ஐ10 கார் நியோஸ் (NIOS) என்ற பெயரில் களமிறங்க இருப்பது தெரியவந்தது.
மேலும், இந்த கார்களின் உற்பத்தியை தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. இது, அண்மையில்தான் தொடங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இருப்பினும், இந்த காருக்கான புக்கிங் ரூ. 11 ஆயிரம் என்ற முன்தொகையில் நடைபெற்று வருகின்றது. இதற்கான நடவடிக்கையில், ஹூண்டாய் நிறுவனத்தின் டீலர்கள் மும்பரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்த புதிய கிராண்ட் நியாஸ் கார், அதன் மூதாதையர்களான கிராண்ட் ஐ10 மற்றும் எலைட் ஐ20 மாடல்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தப்பட உள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய கிராண்ட் ஐ10 நியாஸ் கார், அதன் பெயருக்கேற்ற வகையிலான டிசைன் தாத்பரியங்களைப் பெற்றிருக்கின்றது. இந்த கவர்ச்சியான வடிவமைப்பிற்காக ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
காரின் டிசைன் மட்டுமின்றி அதில் இணைக்கப்பட்டுள்ள மற்ற அம்சங்களும் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற தோற்றத்தையும், ஸ்டைலையும் பெற்றிருக்கின்றது. இதனை, முன்னதாக வெளியாகிய வீடியோவைப் பார்த்தாலே உங்களுக்கு புரிந்துவிடும்.
அந்த வீடியோவ நீங்கள் கீழே காணலாம்...
புதிய கிராண்ட் ஐ10 நியாஸ் காரின் முகப்பு பகுதி, சர்வதேச தரத்திலான தோற்ற மொழியைப் பெற்றிருக்கின்றது. ஆகையால், இந்த காரின் அழகில் மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். குறிப்பாக ஹேட்ச்பேக் ரக கார் பிரியர்கள் மத்தியில் இந்த கார் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கேற்ப வகையில் காரின் முகப்பு பகுதியில், புரோமினன்ட் கேஸ்கேடிங் கருப்பு நிற கிரில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இரு முனைகளிலும் பெரிய அளவிலான பூமராங் தோற்றத்திலான எல்இடி பகல் நேர மின்விளக்குகள், ஹெட்லைட்டை ஹைலைட் செய்து காட்டும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டிசைன் முந்தைய மாடல்களுடன் ஒப்பிட்டு பார்த்தால், மிக மிக புத்தம் புதிய டிசைனாக காட்சியளிக்கின்றது. இந்த புதுப்பிக்கப்பட்ட ஹெட்லேம்பில் புரொஜக்டர் மின்விளக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், இன்டிகேட்டர்களும் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த காரின் பம்பர் மற்றும் பானட்டிற்கு புத்தம் புதிய ஸ்போர்ட்ஸ் கார் போன்ற தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், காரின் கவர்ச்சியான தோற்றம் கூடுதல் எடுப்பாக காட்சியளிக்கின்றது. அந்தவகையில், பானட்டிற்கு புதிய ஸ்போர்டி லைன் மற்றும் கிரீயேசெஸ் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று பம்பருக்கு, ஷார்ப்பான லோவர் எண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
வெளிப்புறத்தைப் போன்றே, புதிய கிராண்ட் ஐ10 மாடலின் உள் புறத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆகையால், புதிய கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் கூடுதல் சிறப்பம்சங்களுடன் காட்சியளிக்கின்றது. இதனை குறிக்கும் வகையிலேயே நியாஸ் (NIOS) என எழுதப்பட்டுள்ளது. இதற்கு அர்த்தம் அதிகம் என்பதாகும்.
அந்தவகையில், அண்மையில் களமிறக்கப்பட்டு இமாலய வரவேற்பைப் பெற்று வரும் வெனியூ எஸ்யூவி ரக காரில் இடம்பெற்றுள்ள ப்ளூ லிங்க் கனெக்ட் வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொடுதிரை வசதி கொண்ட 8 இன்ச் இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகள் பொருத்தப்பட்டுள்ளது.
இத்துடன், பாதுகாப்பு வசதிகளாக இரண்டு ஏர் பேக்குகள், இபிடி வசதியுடன் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த காரில் இடம் பெற உள்ளது.
இந்த காரில் 1.2 லிட்டர் ட்யூவல் விடிவிடி பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.2 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. இதில், பெட்ரோல் எஞ்ஜின் 81 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
அதேபோன்று, டீசல் எஞ்ஜின் 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த இரண்டு எஞ்ஜின்களுமே 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 5-ஸ்பீடு ஸ்மார்ட் ஆட்டோ ஏஎம்டி திறனில் கிடைக்கலாம்.
புத்தம் புதிய கிராண்ட் ஐ10 நியாஸ் கார் ரூ. 5.2 லட்சத்தில் இருந்து ரூ. 7.9 லட்சம் என்ற விலையில் களமிறக்கப்படலாம். இது மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாக இருக்கும். அதற்கேற்ப, இந்த கார் பிரிமியம் தரத்தில் உருவாகியுள்ளது.
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!