லாஞ்சிற்கு முன்னரே அறிமுகமான ஹூண்டாய் கிராண்ட் ஐ10... புக்கிங்கும் தொடங்கியது!!!

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிராண்ட் ஐ10 மாடல் லாஞ்சிற்கு முன்னரே இணையத்தில் அறிமுகமாகியுள்ளது. அந்தவகையில், தற்போது இந்த கார்குறித்து வெளியாகியுள்ள சுவாரஷ்ய தகவல், வீடியோ மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்ற இந்த பதிவில் காணலாம்.

லாஞ்சிற்கு முன்னரே அறிமுகமான ஹூண்டாய் கிராண்ட் ஐ10... புக்கிங்கும் தொடங்கியது!!!

ஹூண்டாய் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார்களில் கிராண்ட் ஐ10 ஹேட்ச்பேக் மாடலும் ஒன்றாக இருக்கின்றது. இந்த கார் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் காருக்கு போட்டியாக விற்பனையில் உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேசமயம், ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களிலும் இது முக்கிய இடத்தை தனக்கென பிடித்து வைத்துள்ளது.

லாஞ்சிற்கு முன்னரே அறிமுகமான ஹூண்டாய் கிராண்ட் ஐ10... புக்கிங்கும் தொடங்கியது!!!

இருப்பினும், இந்த கார் தற்போது வரை, நீண்ட காலமாக புதுப்பிக்கப்படாமலே விற்பனையில் இருந்து வருகின்றது. ஆனால், மாருதி சுஸுகி நிறுவனமோ, ஸ்விஃப்ட் காரை மூன்றாம் தலைமுறை அறிமுகம் செய்துவிட்டது.

இதன்காரணமாக, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 மாடல் கணிசமான வாடிக்கையாளர்களை இழந்து, விற்பனை வீழ்ச்சியைப் பெற்றிருக்கின்றது

லாஞ்சிற்கு முன்னரே அறிமுகமான ஹூண்டாய் கிராண்ட் ஐ10... புக்கிங்கும் தொடங்கியது!!!

ஆகையால், இதனை சமன் செய்யும் விதமாக ஹூண்டாய் நிறுவனம் அப்கிரேட் செய்யப்பட்ட கிராண்ட் ஐ10 மாடலை இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஆனால், அதற்கு முன்னதாக இந்த காரை அறிமுகம் செய்யும் விதமாக, வருகின்ற 20ம் தேதி கிராண்ட் ஐ10 மாடலை ஹூண்டாய் நிறுவனம் வெளியீடு செய்ய உள்ளது.

லாஞ்சிற்கு முன்னரே அறிமுகமான ஹூண்டாய் கிராண்ட் ஐ10... புக்கிங்கும் தொடங்கியது!!!

அதேசமயம், ரூ. 11,000 என்ற முன்தொகையில் இந்த காருக்கான புக்கிங்கை ஹூண்டாய் நிறுவனத்தின் டீலர்கள் தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை காடிவாடி ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

லாஞ்சிற்கு முன்னரே அறிமுகமான ஹூண்டாய் கிராண்ட் ஐ10... புக்கிங்கும் தொடங்கியது!!!

இந்நிலையில், ஹேட்ச்பேக் ரக கார் ரசிகர்களை தன் வசம் இழுக்கும் விதமாக, ஹூண்டாய் நிறுவனம் புதிய கிராண்ட் ஐ10 மாடலின் புகைப்படம், வீடியோ மற்றும் கார்குறித்த சில சிறப்பு தகவல் உள்ளிட்டவற்றை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது, ஹூண்டாய் கிராண்ட் ஐ10 பல்வேறு புதிய சிறப்பு மாற்றங்களைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

ஆகையால், புதிய கிராண்ட் ஐ10 மாடலின் உள் மற்றும் வெளிப்புறம் என அனைத்து பகுதிகளின் தோற்றுமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்டைலைப் பெற்ற இந்த காரில் கிராண்ட் ஐ10 என்ற பேட்ஜூடன் புதிதாக என்ஐஓஎஸ் (NIOS) என எழுதப்பட்டுள்ளது. இது அதிகம் என்பதற்கான பொருள் என கூறப்படுகின்றது.

லாஞ்சிற்கு முன்னரே அறிமுகமான ஹூண்டாய் கிராண்ட் ஐ10... புக்கிங்கும் தொடங்கியது!!!

எனவே, இந்த புதிய பேட்ஜ் கிராண்ட் ஐ10 பல்வேறு சிறப்பம்சங்களைப் பெற்றிருப்பதைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஆகையால், இந்த காரில் புதிய ட்யூன் அப்பைப் பெற்ற எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வில் இந்த கார் கிடைக்கும் என தற்போதைய தகவல் தெரிவிக்கின்றது.

லாஞ்சிற்கு முன்னரே அறிமுகமான ஹூண்டாய் கிராண்ட் ஐ10... புக்கிங்கும் தொடங்கியது!!!

ஹுண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் வடிவமைப்பு:

ஹூண்டாய் நிறுவனம் கிராண்ட் ஐ10 மாடலை முதல் முறையாக இந்தியாவில் களமிறக்கியபோது, இதுதான் மிகச்சிறந்த தோற்றமுடைய ஹேட்ச்பேக் கார் என்பதை வெளிப்படுத்தியது. அந்தவகையில், அதன் திரவ வடிவமைப்பு (fluidic design) இருந்தது. இதன் காரணமாகவே, தற்போதைய கிராண்ட் ஐ10 என்ஐஓஎஸ் மடாலிலும் அதே தோற்ற மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது.

லாஞ்சிற்கு முன்னரே அறிமுகமான ஹூண்டாய் கிராண்ட் ஐ10... புக்கிங்கும் தொடங்கியது!!!

அதேசமயம், கணிசமாக ஸ்போர்ட்டி லுக்கையும் இந்த கார் பெறவிருக்கின்றது. அதற்கேற்ப வகையில், டிஆர்எல்களுடன் கூடிய பெரிய அளவிலான கேஸ்கேட் கிரில், புத்தம் புதிய தோற்றத்திலான ஹெட்லேம்ப், சிறிய பனி விளக்குடன் கூடிய பம்பர் உள்ளிட்டவை இணைக்கப்பட உள்ளன.

லாஞ்சிற்கு முன்னரே அறிமுகமான ஹூண்டாய் கிராண்ட் ஐ10... புக்கிங்கும் தொடங்கியது!!!

ஆகையால், காரின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் பார்த்தோமேயானால், அது பெரிய மற்றும் மிகவும் ஷார்ப்பான ஹேட்பேக் ரக காரைப் போன்ற நிழலை தோற்றுவிக்கும். இத்துடன், பிரம்மிப்பான தோற்றத்தை அதிகரிக்கும் வகையில், புதிய டிசைனிலான அலாய் வீலும் இணைக்கப்பட்டுள்ளது.

லாஞ்சிற்கு முன்னரே அறிமுகமான ஹூண்டாய் கிராண்ட் ஐ10... புக்கிங்கும் தொடங்கியது!!!

ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் இன்டீரியர்:

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரின் வெளிப்புறத்தைப்போன்றே, உட்புறமும் மிகச் சிறந்ததாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அண்மையில் களமிறக்கப்பட்டு இமாலய வரவேற்பைப் பெற்று வரும் வெனியூ எஸ்யூவி ரக காரின் உள்கட்டமைப்பை ஒத்தவாறு, புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10 என்ஐஓஎஸ் மாடலின் இன்டீரியரும் தயார் செய்யப்பட்டுள்ளது.

லாஞ்சிற்கு முன்னரே அறிமுகமான ஹூண்டாய் கிராண்ட் ஐ10... புக்கிங்கும் தொடங்கியது!!!

ஆகையால், இந்த காரில் புதிய டேஷ்போர்ட், ப்ளூ லிங்க் கன்னெக்டட் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கூடுதல் பாதுகாப்பு அம்சம் மற்றும் பிரிமியம் ரகத்திலான மெட்டீரியல்கள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

லாஞ்சிற்கு முன்னரே அறிமுகமான ஹூண்டாய் கிராண்ட் ஐ10... புக்கிங்கும் தொடங்கியது!!!

இத்துடன், 8 இன்ச் அளவு கொண்ட டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ மென்பொருள் அம்சம் இணைக்கப்பட்டுள்ளது. இதைக்கொண்ட ப்ளூலிங்க் தொழில்நுட்பத்தை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

லாஞ்சிற்கு முன்னரே அறிமுகமான ஹூண்டாய் கிராண்ட் ஐ10... புக்கிங்கும் தொடங்கியது!!!

அதேபோன்று, காரின் இட வசதி முந்தைய மாடலைக் காட்டிலும் குறிப்பிட்ட அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய கிராண்ட் ஐ10 மாடல் அதிக இடவசதி மற்றும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பெற்ற நவீன மாடலாக களமிறங்க இருக்கின்றது.

மேலும், இந்த கார் பாதுகாப்பிலும் குறைந்ததில்லை என்பதை வெளிப்படுத்தும்வகையில், இரண்டு ஏர் பேக், இபிடி வசதியுடன் ஆன்டிலாக் பிரேக்கிங் வசதி உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது.

லாஞ்சிற்கு முன்னரே அறிமுகமான ஹூண்டாய் கிராண்ட் ஐ10... புக்கிங்கும் தொடங்கியது!!!

ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ் எஞ்ஜின்:

இந்த காரில் பிஎஸ்-VI தரத்திலான 1.2 லிட்டர் கப்பா எஞ்ஜின் பொருத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தற்போது விற்பனையில் இருக்கும் கிராண்ட் ஐ10 மாடலைப் போன்றே 83 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜினில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மேனுவல் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், மலிவு ரக ஏஎம்டி கியர்பாக்ஸைக் கொண்டு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ரீபிளேஸ் செய்யப்பட உள்ளது.

லாஞ்சிற்கு முன்னரே அறிமுகமான ஹூண்டாய் கிராண்ட் ஐ10... புக்கிங்கும் தொடங்கியது!!!

இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ்தான் புதிய சான்ட்ரோ காரிலும் இடம்பெற்றுள்ளது. இத்துடன், பிஎஸ்-VIஇன் இரண்டாம் வெர்ஷனையும் ஹூண்டாய் நிறுவன் அறிமுகம் செய்ய உள்ளது. அது, 1.2 லிட்டர் டீசல் யூனிட்டாகும். இது, மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும்.

அதேசமயம், ஹூண்டாய் நிறுவனத்தின் மூலம் வெளிவரும், முதல் பிஎஸ்-VI தரத்திலான கார் என்ற பெருமையை இந்த கிராண்ட் ஐ10 என்ஐஓஎஸ் கார் சூட இருக்கின்றது.

லாஞ்சிற்கு முன்னரே அறிமுகமான ஹூண்டாய் கிராண்ட் ஐ10... புக்கிங்கும் தொடங்கியது!!!

ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியாஸ் எதிர்பார்க்கப்டும் விலை:

புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 கார் பிஎஸ்-VI தரத்திற்கு உயர்த்தப்பட்டிருப்பதால், அதன் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாருதி சுசுகி ஸ்விஃப்ட்டை விட அது அதிக விலையாக இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. அதேசமயம், தற்போது விற்பனையில் இருக்கும் கிராண்ட் ஐ 10 மாடலை விட ரூ. 25,000 பிரீமிய தொகையில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Hyundai Grand I10 NIOS Revealed. Read In Tamil.
Story first published: Wednesday, August 7, 2019, 15:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X