கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் அறிமுகம்!

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் அறிமுகம்!

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் அடிப்படையில் க்ராஸ்ஓவர் மாடலாக உருவாக்கப்பட்ட ஐ20 ஆக்டிவ் கார் இதன் ரகத்தில் விற்பனையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையை பெற்று வருகிறது. எஸ்யூவி போன்ற இதன் சிறப்பு அம்சங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் அறிமுகம்!

இந்த நிலையில், புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஒப்பாக, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஐ20 ஆக்டிவ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த கார் எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் டியூவல் டோன் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் அறிமுகம்!

இந்த நிலையில், இந்த மூன்று வேரியண்ட்டுகளிலுமே ரிவர்ஸ் கேமரா, பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், ஓட்டுனர் மற்றும் முன் இருக்கை பயணிக்கான சீட் பெல்ட் அலர்ட் சிஸ்டம் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக வழங்கப்படுகிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் அறிமுகம்!

தவிரவும், இந்த காரில் 6 ஏர்பேக்குகள், பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், குறிப்பிட்ட வேகத்தில் தானாக மூடிக்கொள்ளும் பூட்டுதல் அமைப்பு ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் அறிமுகம்!

புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், கார்னரிங் விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், சுறா துடுப்பு வடிவிலான ஆன்டெனா, ரூஃப் ரெயில்கள், ஸ்கிட் பிளேட் மாதிரி வடிவங்களுடன் இந்த கார் மிகச் சிறப்பான அம்சங்களுடன் கவர்கிறது.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் அறிமுகம்!

இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க் திறனையும், டீசல் எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் அறிமுகம்!

புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை இந்த சாதனம் சப்போர்ட் செய்யும். இந்த காரில் புஷ் பட்டன் ஸ்டார்ட், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் அறிமுகம்!

புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் ரூ.7.74 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ், ஹோண்டா டபிள்யூஆர்வி உள்ளிட்ட கார்களுடன் போட்டி போடும். இந்த ரகத்தில் சிறந்த தேர்வாக தொடர்ந்து முன்னிலைப்படுத்தும் வகையில் கூடுதல் சிறப்புகளுடன் வந்துள்ளது.

Most Read Articles
English summary
South Korean car maker, Hyundai Motor has launched updated version of i20 Active car in India.
Story first published: Saturday, November 2, 2019, 12:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X