மீண்டும் மலிவு விலை காரை களமிறக்குகிறதா ஹூண்டாய்...? கோனா எலக்ட்ரிக் கார் அறிமுக சிறப்பு தகவல்...!

ஹூண்டாய் நிறுவனம் அதன் முதல் எலக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

மீண்டும் மலிவு விலை காரை களமிறக்குகிறதா ஹூண்டாய்...? கோனா எலக்ட்ரிக் கார் அறிமுக சிறப்பு தகவல்...!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், அதன் முதல் எலக்ட்ரிக் காரான கோனா-வை வருகின்ற ஜீலை மாதம் 9ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ஆங்கில இணையதளமான காடிவாடி வெளியிட்டுள்ளது.

மீண்டும் மலிவு விலை காரை களமிறக்குகிறதா ஹூண்டாய்...? கோனா எலக்ட்ரிக் கார் அறிமுக சிறப்பு தகவல்...!

ஹூண்டாய் தயாரித்து வரும் கோனா எலக்ட்ரிக் காரில், 39 kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 350 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த காரின் அறிமுகத்தைத் தொடர்ந்து, ஹூண்டாய் நிறுவனம், 11 kW கொண்ட 3-பேஸ் சார்ஜர் மையங்களை நாட்டின் முக்கிய நகரங்களிலும், அதன் ஹோம் நிலையங்களிலும் நிறுவ இருக்கின்றது.

மீண்டும் மலிவு விலை காரை களமிறக்குகிறதா ஹூண்டாய்...? கோனா எலக்ட்ரிக் கார் அறிமுக சிறப்பு தகவல்...!

இத்துடன், கோனா எலக்ட்ரிக் காரை வாங்கும் வாடிக்கையாளர்களின் இல்லத்தில் 7.2kW திறன் கொண்ட இன்ஸ்டாண்ட் எலக்ட்ரிக் சார்ஜ் மையங்களை ஹூண்டாய் நிறுவனம் ஏற்படுத்தித் தர இருக்கின்றது. இந்த சார்ஜர் மூலம் கோனா காரை சார்ஜ் செய்யும்போது 9 மணி நேரம் 35 நிமிடங்களில் பேட்டரி முழுமையான சார்ஜை அடைந்துவிடும்.

மீண்டும் மலிவு விலை காரை களமிறக்குகிறதா ஹூண்டாய்...? கோனா எலக்ட்ரிக் கார் அறிமுக சிறப்பு தகவல்...!

இது நீண்ட நேரமாக இருக்கின்றது. ஆனால், சார்ஜிங் நிலையங்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் சார்ஜ் செய்யும்போது, முழுமையான சார்ஜை அடைய மிகவும் குறைவான நேரத்தையே எடுத்துக்கொள்கிறது. இவற்றுடன் நவீன வசதிகளாக, ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி உடன் கூடிய 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது சேட்-நேவ் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் மலிவு விலை காரை களமிறக்குகிறதா ஹூண்டாய்...? கோனா எலக்ட்ரிக் கார் அறிமுக சிறப்பு தகவல்...!

மேலும், இந்த காரில் அண்மையில் அறிமுகமான வெனியூ காரில் பொருத்தப்பட்ட சிறப்பம்சமான ப்ளூ லிங்க் கனெக்டிவிட்டி இணைக்கப்பட உள்ளது. இந்த கனெக்டிவிட்டி மூலம் 30க்கும் மேற்பட்ட காரின் தொழில்நுட்பங்களை ஸ்மார்ட்போன் மூலம் இயக்க முடியும்.

மீண்டும் மலிவு விலை காரை களமிறக்குகிறதா ஹூண்டாய்...? கோனா எலக்ட்ரிக் கார் அறிமுக சிறப்பு தகவல்...!

அந்தவகையில், தற்போது வெனியூ காரில் இடம்பெற்றிருக்கும் இந்த தொழில்நுட்பமானது, 10க்கும் மேற்பட்ட அம்சங்கள் இந்தியர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கையும், கோனா எலக்ட்ரிக் காரில் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் மலிவு விலை காரை களமிறக்குகிறதா ஹூண்டாய்...? கோனா எலக்ட்ரிக் கார் அறிமுக சிறப்பு தகவல்...!

மேலும், இந்த காரில் ஆட்டோமேடிக்காக க்ளைமேட் கன்ட்ரோலை ஆக்டிவேட் செய்யும் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, ஸ்மார்ட் போன் ஆப் மூலம் காரின் டூர்களை லாக் செய்யவும், அன்லாக் செய்யவும் முடியும்.

மீண்டும் மலிவு விலை காரை களமிறக்குகிறதா ஹூண்டாய்...? கோனா எலக்ட்ரிக் கார் அறிமுக சிறப்பு தகவல்...!

இத்துடன் எஞ்ஜின் ஆன்/ஆஃப் செய்யவும் முடியும். அதேபோன்று, இந்த காரில் எமர்ஜென்சி ஆப்ஷனும் வழங்கப்பட்ட உள்ளது. இந்த ஆப்ஷன்மூலம், ஆபத்து காலங்களில், மருத்துவமனை மற்றும் முக்கிய நபர்களுக்கு தகவல் வழங்க உதவும்.

மீண்டும் மலிவு விலை காரை களமிறக்குகிறதா ஹூண்டாய்...? கோனா எலக்ட்ரிக் கார் அறிமுக சிறப்பு தகவல்...!

ஹூண்டாய் நிறுவனம் அண்மையில்தான் அதன் ஹூண்டாய் வெனியூ சப் 4 மீட்டர் எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த காரை யாரும் எதிர்பாராத மலிவான விலையில் விற்பனைக்கு களமிறக்கியது. அந்தவகையில், இந்த காரின் ஆரம்ப வேரியண்டை ரூ. 6.50 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

மீண்டும் மலிவு விலை காரை களமிறக்குகிறதா ஹூண்டாய்...? கோனா எலக்ட்ரிக் கார் அறிமுக சிறப்பு தகவல்...!

இந்த காரில் பிரத்யேகமான நவீன தொழில்நுட்ப வசதிகள் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், ப்ளூ லிங்க் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்தான், ஹூண்டாய் நிறுவனம் அதன் கோனா என்ற எலக்ட்ரிக் காரை இந்திய எலக்ட்ரிக் கார் சந்தையில் களமிறக்க இருக்கின்றது. இந்த கார் இந்தியாவின் முதல் எஸ்யூவி எலக்ட்ரிக் காராக இருக்கின்றது. இதனால், எஸ்யூவி கார் பிரியர்கள் மத்தியில் கோனா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் மலிவு விலை காரை களமிறக்குகிறதா ஹூண்டாய்...? கோனா எலக்ட்ரிக் கார் அறிமுக சிறப்பு தகவல்...!

இந்த காரையும் அந்த நிறுவனம் மலிவான விலையில் களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், இது ரூ. 25 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hyundai Kona Electric Car Launching On July 9. Read In Tamil.
Story first published: Thursday, May 23, 2019, 10:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X