452 கிமீ ரேஞ்ச்... ஒற்றை சொல்லால் புக்கிங்கில் கில்லி அடித்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர் மத்தியில் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. முன்பதிவு எண்ணிக்கையும் சியர்ஸ் அடிக்கும் அளவுக்கு எண்ணிக்கை பதிவாகி இருக்கிறது.

452 கிமீ ரேஞ்ச்... ஒற்றை சொல்லால் புக்கிங்கில் கில்லி அடித்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

கடந்த 9ந் தேதி இந்தியாவின் முழுமையான முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக ஹூண்டாய் கோனா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் வந்த இந்த எஸ்யூவிக்கு ரூ.25.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக அறிவிக்கப்பட்டது. ஆன்ரோடு விலை ரூ.28 லட்சம் வரை எகிறியது.

452 கிமீ ரேஞ்ச்... ஒற்றை சொல்லால் புக்கிங்கில் கில்லி அடித்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

ஆண்டுக்கு 500 கோனா எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் இலக்கை ஹூண்டாய் நிர்ணயித்தது. விலை அதிகம் இருப்பதும், எலெக்ட்ரிக் கார்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லை என்பதால், இந்த காருக்கான வரவேற்பு எவ்வாறு இருக்கும் என்று சந்தேகம் நிலவியது.

452 கிமீ ரேஞ்ச்... ஒற்றை சொல்லால் புக்கிங்கில் கில்லி அடித்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

சுற்றுச்சூழலுக்கு உகந்த காராக இருந்தாலும், நடைமுறை பயன்பாட்டில் எலெக்ட்ரிக் கார்கள் மீதான அச்சமே காரணமாக இருந்தது. ஆனால், அந்த சந்தேகங்களையும், அனுமானங்களையும் அடித்து உடைத்துள்ளது கோனா எலெக்ட்ரிக் கார்.

452 கிமீ ரேஞ்ச்... ஒற்றை சொல்லால் புக்கிங்கில் கில்லி அடித்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

ஆம். அறிமுகம் செய்யப்பட்ட 10 நாட்களில் 120 புக்கிங்குகளை இந்த புதிய எலெக்ட்ரிக் கார் பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதற்கு தகுதியுடைய 10,000 வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனராம். இதனால், ஹூண்டாய் நிறுவனம் சந்தோஷத்தில் திக்குமுக்காடி இருக்கிறது.

452 கிமீ ரேஞ்ச்... ஒற்றை சொல்லால் புக்கிங்கில் கில்லி அடித்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

விலை அதிகம் என்ற ஒரு காரணத்தை தவிர்த்து வேறு எந்த குறையும் இல்லாத நிறைவான எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக அறிமுகம் செய்யப்பட்டதுதான் இந்த காருக்கு இந்தளவு வரவேற்பு கிடைப்பதற்கான முக்கிய காரணமாக கருத முடியும்.

452 கிமீ ரேஞ்ச்... ஒற்றை சொல்லால் புக்கிங்கில் கில்லி அடித்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

இந்த காரில் இருக்கும் 39.2kWh கொண்ட பேட்டரியானது முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். வாரம் முழுவதும் அலுவலகம் செல்வதற்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் போதுமானதாக இருக்கும் (நடைமுறை பயன்பாட்டில் ரேஞ்ச் மாறுபடலாம்) என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.

452 கிமீ ரேஞ்ச்... ஒற்றை சொல்லால் புக்கிங்கில் கில்லி அடித்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

அதேபோன்று, நீண்ட தூர பயணங்களுக்கும் இந்த கார் சிறப்பான ரேஞ்ச் பெற்றிருக்கிறது. அத்துடன், இந்த காரில் இருக்கும் மின்மோட்டார் அதிகபட்சமாக 136 எச்பி பவரையும், 395 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. அதாவது, மிட்சைஸ் எஸ்யூவி கார்களுக்கு இணையான ஆற்றலை இந்த கார் பெற்றிருப்பதும் முக்கிய விஷயமாக பார்க்க முடியும்.

452 கிமீ ரேஞ்ச்... ஒற்றை சொல்லால் புக்கிங்கில் கில்லி அடித்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

சிங்கிள் ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 6 முதல் 7 மணிநேரம் பிடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 57 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.

452 கிமீ ரேஞ்ச்... ஒற்றை சொல்லால் புக்கிங்கில் கில்லி அடித்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் லித்தியம் அயான் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.60 லட்சம் கிமீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது. இதுவரை இந்தியாவில் அதிகபட்சமாக 20kWh திறன் வாய்ந்த பேட்டரி வாகனங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் 39.2kWh பேட்டரி உள்ளது.

452 கிமீ ரேஞ்ச்... ஒற்றை சொல்லால் புக்கிங்கில் கில்லி அடித்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

கொடுக்கும் பணத்திற்கு மதிப்பை சேர்க்கும் விதத்தில், எல்இடி பகல்நேர விளக்குகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் இருக்கைகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் என ஏராளமான வசதிகள் உள்ளன.

452 கிமீ ரேஞ்ச்... ஒற்றை சொல்லால் புக்கிங்கில் கில்லி அடித்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

இந்த எலெக்ட்ரிக் காரில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா வசதிகளும் இடம்பெற இருக்கின்றன.

452 கிமீ ரேஞ்ச்... ஒற்றை சொல்லால் புக்கிங்கில் கில்லி அடித்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்!

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் 11 பெருநகரங்களில் உள்ள 15 டீலர்கள் வழியாகவே மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. மேலும், டெல்லி, மும்பை, சென்னை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் தனது அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்குகளில் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Hyundai Motor India has received 120 confirmed bookings for its electric sports utility vehicle Kona, launched earlier this month.
Story first published: Saturday, July 20, 2019, 16:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X