ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கிமீ பயணம்... இந்தியாவில் ஹூண்டாய் கோனா இன்று விற்பனைக்கு அறிமுகம்

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்திய மார்க்கெட்டில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் கோனா நாளை விற்பனைக்கு அறிமுகம்!

இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் இன்று (ஜூலை 9) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியை சர்வதேச மார்க்கெட்களில் ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது.

ஹூண்டாய் கோனா நாளை விற்பனைக்கு அறிமுகம்!

அங்கு 39kWh மற்றும் 64kWh பேட்டரி ஆப்ஷன்களுடன் ஹூண்டாய் கோனா விற்பனையாகி வருகிறது. இதில், இரண்டாவது பேட்டரி ஆப்ஷனைதான் இந்தியா பெறவுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் முதல் லாங்-ரேஞ்ச் எலெக்ட்ரிக் வாகனம் என்ற பெருமையை ஹூண்டாய் கோனா பெறவுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் 25 கோனா கார்களை கடந்த மாதமே டீலர்ஷிப்களுக்கு அனுப்பி விட்டது குறிப்பிடத்தக்கது.

ஹூண்டாய் கோனா நாளை விற்பனைக்கு அறிமுகம்!

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி 25 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ விலை இன்று தெரிந்து விடும். ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு தற்போதைய நிலையில் நேரடி போட்டியாளர் யாரும் கிடையாது. வரும் டிசம்பர் மாதம் வரை ஹூண்டாய் கோனாதான் தனிக்காட்டு ராஜா.

ஹூண்டாய் கோனா நாளை விற்பனைக்கு அறிமுகம்!

ஆனால் அதன்பிறகு ஹூண்டாய் கோனாவிற்கு போட்டியாக எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி களமிறங்கி விடும். எம்ஜி இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி வரும் டிசம்பர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 64kWh பேட்டரி கொண்ட ஹூண்டாய் கோனா ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்கும்.

ஹூண்டாய் கோனா நாளை விற்பனைக்கு அறிமுகம்!

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் 150kW எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 204 பிஎஸ் பவர் மற்றும் 395 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை இந்த கார் வெறும் 7.6 வினாடிகளில் எட்டி விடும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 167 கிலோ மீட்டர்கள்.

ஹூண்டாய் கோனா நாளை விற்பனைக்கு அறிமுகம்!

முதற்கட்டமாக இந்தியாவின் 16 முன்னணி நகரங்களில் மட்டுமே ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனை செய்யப்படவுள்ளது. இதில், டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியம், மும்பை, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்கள் அடங்கும் என தெரிகிறது. இந்த நகரங்களில் உள்ள குறிப்பட்ட ஹூண்டாய் டீலர்ஷிப்கள் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் கோனா நாளை விற்பனைக்கு அறிமுகம்!

அனேகமாக இது 100kW DC சார்ஜிங் யூனிட்டாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவியை வெறும் 54 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் செய்து விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உங்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு, ஆப்ஷனல் வால் பாக்ஸ்/ஏசி சார்ஜிங் ஸ்டேஷனை ஹூண்டாய் நிறுவனம் வழங்கவுள்ளது.

ஹூண்டாய் கோனா நாளை விற்பனைக்கு அறிமுகம்!

இது பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்ய சுமார் 10 மணி நேரங்களை எடுத்து கொள்ளும். விலையை அதிகரிக்க செய்து விடும் என்பதால், தனிப்பட்ட பயன்பாட்டிற்கு ஃபாஸ்ட் சார்ஜர்கள் வழங்கப்படாது என தெரிகிறது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், டிஆர்எல்கள் உடன் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப் வழங்கப்படவுள்ளது.

ஹூண்டாய் கோனா நாளை விற்பனைக்கு அறிமுகம்!

அத்துடன் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதியுடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் யூனிட், சப் வூஃபருடன் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ஹெட் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங் உள்ளிட்ட வசதிகளும் இடம்பெறும் என தெரிகிறது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமிருக்காது.

ஹூண்டாய் கோனா நாளை விற்பனைக்கு அறிமுகம்!

6 ஏர் பேக்குகள், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம், ரியர்வியூ பார்க்கிங் கேமரா, இபிடி உடன் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்குவதை எளிதாக்கும் வகையில், சமீப காலமாக மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.

ஹூண்டாய் கோனா நாளை விற்பனைக்கு அறிமுகம்!

இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு முறையாக அமலுக்கு வந்த பின்பு, ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் எக்ஸ் ஷோரூம் விலை 7 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Hyundai Kona Electric SUV To Launch Tomorrow. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X