ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாக கோனா எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மாசு உமிழ்வு இல்லாத போக்குவரத்து சாதனமாக வந்திருக்கும் இந்த புதிய கோனா எலெக்ட்ரிக் கார் இந்திய கார் சந்தையில் புதிய அத்யாயத்தை எழுதும் அம்சங்களை பெற்றுள்ளது. எலெக்ட்ரிக் காரை வாங்க விரும்புவோரின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும் நிறைவான சிறப்பம்சங்களை இந்த கார் பெற்றுள்ளது. அதில், சில மிக முக்கிய அம்சங்களை பகிர்ந்து கொள்கிறோம்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

ஏரோடைனமிக் டிசைன்

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் மிகச் சிறப்பான ஏரோடைனமிக் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வீல் ஆர்ச்சுகள் காற்று மோதும்போது ஏற்படும் சப்தத்தை தவிர்த்து, மிக குறைவான காற்று உராய்வு தன்மையுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. காற்றை வெகுவாக பின்னோக்கி செலுத்தும் வகையிலான முக வடிவமைப்பை பெற்றுள்ளது. இதனால், மின் மோட்டாருக்கான பளு குறிப்பிட்ட அளவு குறைவதால் பேட்டரி திறன் சிறப்பாக தக்க வைக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

சார்ஜர்கள்

ஹூண்டாய் கோனா காருக்கு இரண்டு சார்ஜர்கள் வழங்கப்படும். வீட்டின் சுவரில் பொருத்திக்கொள்ளக்கூடிய ஏசி வால் மவுண்டபிள் சார்ஜர் ஒன்றும், காரிலேயே வைத்துக் கொள்வதற்கான போர்ட்டபிள் சார்ஜரும் வழங்கப்படுகிறது. போர்ட்டபிள் சார்ஜரை சாதாரண 3 பின் 15 ஆம்பியர் சாக்கெட்டில் பொருத்தி சார்ஜ் செய்ய முடியும். இந்த சார்ஜர் மூலமாக 50 கிமீ தூரத்திற்கு சார்ஜ் ஏற்றுவதற்கான வாய்ப்பை வழங்கும். மூன்று மணிநேரத்தில் சார்ஜ் ஏற்றும் திறனை இந்த போர்ட்டபிள் சார்ஜர் வழங்கும்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

ஃபாஸ்ட் சார்ஜர்

வால் மவுண்டபிள் சார்ஜர் மூலமாக ஒரு மணிநேரத்தில் 50 கிமீ தூரத்திற்கு பயணிப்பதற்கான சார்ஜ் ஏற்றும் வாய்ப்பை பெற முடியும். இது தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். மேலும், ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 57 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்ற முடியும். ஆனால், இந்த சார்ஜர் விலை அதிகமாக இருக்கும் என்பதால், டீலர்கள் மற்றும் பொது இடங்களில் மட்டும் நிறுவப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

சிறப்பான ரேஞ்ச்

ஹூண்டாய் கோனா காரில் 39.2 kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்றினால் 452 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இதுவரை விற்பனைக்கு வந்த எலெக்ட்ரிக் கார்கள் தினசரி சார்ஜ் ஏற்றும் அளவிலான பேட்டரிகளுடன் வந்தது. ஆனால், ஹூண்டாய் கோனா காரின் பேட்டரி அதிக திறன் வாய்ந்ததாக இருப்பதால், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். ஒரு வாரத்திற்கு பயணிக்கும் திறன் வழங்கும் பேட்டரி உள்ளது. நீண்ட தூர பயணத்திற்கும் ஏற்றதாக இருக்கும்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

மின் மோட்டார்

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில் இருக்கும் மின் மோட்டார் 131 பிஎச்பி பவரையும், 395 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனால், எலெக்ட்ரிக் கார் மட்டுமின்றி, எஸ்யூவி தோற்றத்திற்கு தகுந்த செயல்திறனையும் வெளிப்படுத்தும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 9.7 வினாடிகளில் எட்டிவிடும். மூன்று இலக்க வேகத்தை எளிதாக எட்டும் வாய்ப்பையும் வழங்கும்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

டிரைவிங் மோடுகள்

இந்த காரில் ஈக்கோ, ஈக்கோ பிளஸ் மற்றும் கம்போர்ட், கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் ஆகிய 4 விதமான டிரைவிங் மோடுகள் உள்ளன. ஸ்போர்ட் மோடில் அதிகபட்ச செயல்திறனை இதன் மின்மோட்டார் வெளிப்படுத்தும். ஈக்கோ மற்றும் ஈக்கோ பிளஸ் மோடுகளில் பயண தூரத்தை நீடிப்பதற்கான வாய்ப்பை பெற முடியும்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

ரீஜெனரேட்டிவ் பிரேக் சிஸ்டம்

பிரேக் பிடிக்கும்போது ஏற்படும் இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றி பேட்டரியில் சேமிக்கும் தொழில்நுட்ப வசதியும் உள்ளது. இதனால், கார் ஓடும்போது கூடுதல் மின் திறனை பெறும் வாய்ப்பு இருக்கிறது. சார்ஜ் குறைவாக இருக்கும்போது ஓட்டுனருக்கு மட்டும் ஏசி காற்று வழங்கும் வசதியும் உள்ளது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கும் 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும். இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் மூலமாக ரேடியோ, மியூசிக் சிஸ்டம், வாய்ஸ் கமாண்ட் மற்றும் ரியர் வியூ மானிட்டராக பயன்படுத்த இயலும்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

விர்ச்சுவல் எஞ்சின் சவுண்ட் சிஸ்டம்

பெட்ரோல், டீசல் கார்கள் போலவே, செயற்கையாக எஞ்சின் சப்தத்தை தருவதற்காக விசேஷ ஸ்பீக்கர் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சப்தம் மூலமாக பாதசாரிகள் கார் வருவதை உணர்ந்து கொள்ள முடிவதோடு, காரின் இயக்கம் குறித்து ஓட்டுனரும் உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை பெற முடியும். ஓட்டுனர் அயர்ந்து போவதையும் தவிர்க்கும்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

இதர அம்சங்கள்

எல்இடி ஹெட்லைட்டுகள், கார்னரிங் லைட்டுகள், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், சேட்டிலைட் நேவிகேஷன், சப் ஊஃபர் மற்றும் 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய க்ரெல் பிரிமீயம் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் சிஸ்டம் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளன.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

வேரியண்ட் விபரம்

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியாவில் பிரிமீயம் என்ற ஒரே வேரியண்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வேரியண்ட்டிற்கு ரூ.25.30 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டூயல் டோன் எனப்படும் இரட்டை வண்ணக் கலவை வேரியண்ட்டிற்கு ரூ.20,000 கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Here are key things to know about all new Hyundai KONA electric SUV car.
Story first published: Wednesday, July 10, 2019, 12:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X