Just In
- 1 hr ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 8 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 9 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 10 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
மே.வங்கம்:மமதா தளபதி பிகே வியூகம் தவிடுபொடி? அன்று சிங்கிள்..இன்று டிரிபிள் டிஜிட் இடங்களில் பாஜக?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அட இவ்வளவு கை ராசி காரரா நம்ம எடப்பாடியார்.. விற்பனை மட்டுமில்லைங்க பாதுகாப்பிலும் அசத்தும் கோனா..!
ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் பாதுகாப்புகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முக்கியமான தகவல்களை இந்தி பதிவில் காணலாம்.

ஹூண்டாய் நிறுவனம், வெனியூ எஸ்யூவி மாடலைத் தொடர்ந்து இந்தியர்களைக் கவர்கின்ற வகையில், அதன் முதல் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
ஹூண்டாயின் உற்பத்தியாலை தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்குவதால், இந்த காரினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விற்பனைக்காக கொடியசைத்து அனுப்பி வைத்தார். மேலும், அப்போது காரில் ஒரு ரவுண்டு வலம் வந்து அசத்தினார்.

கடந்த ஜூலை மாதம் 9ம் தேதி களமிறங்கிய இந்த எஸ்யூவி ரக காருக்கு, மின்சார வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த காருக்கு வேறு போட்டியில்லாததும் ஓர் காரணம்.
இந்நிலையில், இந்த காரின் பாதுகாப்பு குறித்த தகவலை 'ஆஸ்திரேலியா புதிய கார் மதிப்பீட்டு திட்டம்' (ANCAP) என்ற குழு வெளியிட்டுள்ளது. இது சந்தையில் புதிதாக விற்பனைக்கு வரும் கார்களை மோதல் (விபத்து) பரிசோதனைச் செய்து, அதன் தரம் மற்றும் பயணிகளின் பாதுகாப்புகுறித்து தகவல்களை வெளியிட்டு வருகின்றது.

அந்தவகையில், அண்மையில் விற்பனைக்கு அறிமுகமான ஹூண்டாயின் முதல் எலெக்ட்ரிக் கார் கோனாவையும் ஏஎன்சிஏபி அமைப்பு மோதல் பரிசோதனைக்கு உட்படுத்தியது. இதில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் தரத்தில் ஐந்திற்கு 5 நட்சத்திரங்கள் என்ற ரேட்டிங்கை அது பெற்றிருக்கின்றது.

கோனா பெயரில் விற்பனையாகும் இன்டர்நெல் கம்பியூஷன் எஞ்ஜின் (பெட்ரோல் எஞ்ஜின்) கொண்ட காரைக் காட்டிலும், எலெக்ட்ரிக் மாடல் கோனா நல்ல மதிப்பையேப் பெற்றிருக்கின்றது. எரிபொருள் வேரியண்ட் கோனாவும் க்ராஷ் டெஸ்டில் 5-க்கு 5 மதிப்பெண்ணையேப் பெற்றிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

கோனா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் ரூ. 25.30 லட்சம் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், மிக விரைவில் அதன் விலை குறைக்கப்பட்டு ரூ. 23.71 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

ஏற்கனவே, கோனா எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இந்நிலையில், காரின் தரம்குறித்து வெளியாகியிருக்கும் இந்த தகவல், கோனவிற்கான டிமாண்டை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனென்றால், இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த காராக வெளிவந்த டாடா நெக்ஸான் கார், பாதுகாப்பு தர சோதனையில் ஐந்திற்கு 5 நட்சத்திரம் ரேட்டிங்கைப் பெற்ற பின் மிக அதிகளவில் வரவேற்பைப் பெற்றது. அது, தற்போதும் நீடித்து வருகின்றது. ஆகையால், கோனா எலெக்ட்ரிக் காருக்கும் நல்ல வரவேற்பு கிட்டலாம் என கூறப்படுகின்றது.

இந்த கார் தற்போது எந்தவொரு போட்டியுமின்றி தனிக் காட்டு ராஜாவாக செயல்பட்டு வருகின்றது. ஆனால், விரைவில் இதற்கு போட்டியாக எம்ஜி நிறுவனத்தின் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் களமிறங்க இருக்கின்றது.
ஆனால், புதிதாக கோனாவிற்கு போட்டியாக களமிறங்க உள்ள எலெக்ட்ரிக் கார்கள், தற்போது அது பெற்றிருக்கும் ரேட்டிங்கைப் பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் பெரியவர்களின் பாதுகாப்பில் 16.00 புள்ளிகளுக்கு 14.97 என்ற புள்ளிகளைப் பெற்றிருக்கின்றது. இத்துடன், சிறியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் 14.07/16.00 என்ற மதிப்பெண்ணைப் பெற்றிருக்கின்றது.

இதற்கான மோதல் பரிசோதனை சுமார் 64 கிமீ என்ற வேகத்தில் செய்யப்பட்டுள்ளது. இதில், காரின் முன் பகுதி கணிசமாக உருக் குலைந்தாலும், அதன் உட்பகுதியில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் பயணிகளின் பாதுகாப்பை பல மடங்கு அதிகரிக்கின்ற வகையில் செயல்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே, ஐந்திற்கு 5 என்ற நட்சத்திரங்களை கோனா எலெக்ட்ரிக் கார் பெற்றிருக்கின்றது. ஆகையால், கோனா எலெக்ட்ரிக் காரில் பயணிப்பவர்கள், பாதுகாப்புகுறித்த அச்சத்தை துளியளவும் மனதில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

இந்தியாவில் விற்பனையாகும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் ஒரு முழுமையான சார்ஜில் 452 கிமீ தூரம் செல்லும் திறனைப் பெற்றிருக்கின்றது.
அதற்கேற்ப வகையிலான, 39.2 kWh என்ற அதீத திறனுடைய பேட்டரி பேக்கினை அது பெற்றிருக்கின்றது. மேலும், இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார் அதிகபட்சமாக 136 பிஎஸ் பவரையும், 395 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இது வெறும் 9.7 செகண்டுகளில் மணிக்கு 100 கிமீ என்ற வேகத்தை தொடுகின்ற அளவிற்கு சக்தி வாய்ந்ததாக காட்சியளிக்கின்றது.
அதேசமயம், இந்த காரின் பேட்டரிகள் அதிவேக சார்ஜிங் திறனைப் பெற்றிருக்கின்றன. ஆகையால், இதன் பேட்டரிகளை ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் சார்ஜ் செய்தால் வெறும் 57 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜைப் பெற்றுவிடும்.