ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவின் 16 முன்னணி நகரங்களில் மட்டுமே விற்பனை...

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவின் 16 முன்னணி நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவின் 16 முன்னணி நகரங்களில் மட்டுமே விற்பனை...

இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பல்வேறு முன்னணி நிறுவனங்களும், தங்களின் எலெக்ட்ரிக் கார்களை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவின் 16 முன்னணி நகரங்களில் மட்டுமே விற்பனை...

இதில், ஹூண்டாய் கோனா கார்தான் (Hyundai Kona) இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் ஹூண்டாய் கோனா, எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவின் 16 முன்னணி நகரங்களில் மட்டுமே விற்பனை...

ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வரும் ஜூலை மாதம் 9ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் பெரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவின் 16 முன்னணி நகரங்களில் மட்டுமே விற்பனை...

ஆனால் ஹூண்டாய் கோனா முதற்கட்டமாக இந்தியாவின் 16 முன்னணி நகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்கள் அடங்கும் என கூறப்படுகிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவின் 16 முன்னணி நகரங்களில் மட்டுமே விற்பனை...

அத்துடன் குறிப்பிட்ட ஹூண்டாய் டீலர்ஷிப்களில் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் உரிமையாளர்களுக்கு ஃபாஸ்ட் சார்ஜர் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதை பயன்படுத்தினால், வெறும் ஒரு மணி நேரத்தில் பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவின் 16 முன்னணி நகரங்களில் மட்டுமே விற்பனை...

அத்துடன் ஹூண்டாய் நிறுவனம் ரெகுலர் ஏசி/வால்பாக்ஸ் சார்ஜிங் ஸ்டேஷனையும் ஆப்ஷனலாக வழங்க உள்ளது. இதனை வீடுகளில் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். இது பேட்டரியை சுமார் 10 மணி நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்து விடும்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவின் 16 முன்னணி நகரங்களில் மட்டுமே விற்பனை...

இந்தியா மார்க்கெட்டிற்கான கோனா காரில், ஹூண்டாய் நிறுவனம் 39kWh பேட்டரியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 136 பிஎஸ் பவர் மற்றும் 395 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்யலாம்.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவின் 16 முன்னணி நகரங்களில் மட்டுமே விற்பனை...

பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி 9.7 வினாடிகளில் எட்டி விடும். சர்வதேச அளவில், பெரிய 64kWh பேட்டரி பேக்கும் வழங்கப்படுகிறது. இது 204 பிஎஸ் பவர் மற்றும் 395 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்ய கூடியது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவின் 16 முன்னணி நகரங்களில் மட்டுமே விற்பனை...

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே கனெக்டிவிட்டி வசதிகளுடன் கூடிய 8 இன்ச் டச் ஸ்கீரின் வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு அதிநவீன வசதிகளும் ஹூண்டாய் கோனா காரில் வழங்கப்படவுள்ளன.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவின் 16 முன்னணி நகரங்களில் மட்டுமே விற்பனை...

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி 25 லட்ச ரூபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி நிறுவனத்தின் இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருடன் ஹூண்டாய் கோனா போட்டியிடவுள்ளது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவின் 16 முன்னணி நகரங்களில் மட்டுமே விற்பனை...

இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி நிறுவனம் இஇஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை, நடப்பாண்டின் இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அனேகமாக வரும் டிசம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

Most Read Articles
English summary
Hyundai Kona To Be Sold In 16 Cities Including Delhi, Mumbai, Chennai, Kolkata, Bangalore. Read in Tamil
Story first published: Wednesday, June 12, 2019, 19:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X