கார்களில் சைடு மிரர்களுக்கு பதிலாக கேமரா... ஹூண்டாய் அசத்தல்!

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் கார்களுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பில் உலகின் 6வது பெரிய நிறுவனமாக விளங்குகிறது. ஹூண்டாய் மோட்டார்ஸ் குழுமத்தின் அங்கமாக செயல்படும் இந்த நிறுவனம் ஹூண்டாய், ஜெனிசிஸ் மற்றும் கியா ஆகிய மூன்று பிராண்டுகளில் விற்பனையாகும் கார்களுக்கான உதிரிபாகங்களையும், தொழில்நுட்பங்களையும் உருவாக்கி தந்து வருகிறது.

கார்களில் சைடு மிரர்களுக்கு பதிலாக கேமராவை உருவாக்கிய ஹூண்டாய்!

இந்த நிலையில், கார்களுக்கான சைடு மிரர்களுக்கு மாற்றாக புதிய கேமரா அமைப்பை ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. கேமரா மானிட்டரிங் சிஸ்டம் (CMS) என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த அமைப்பு சைடு மிரர்களைவிட அதிக நன்மைகளை அளிக்கும் என்று ஹூண்டாய் மொபிஸ் தெரிவிக்கிறது.

கார்களில் சைடு மிரர்களுக்கு பதிலாக கேமராவை உருவாக்கிய ஹூண்டாய்!

கார் வேகமாக செல்லும்போது காற்றால் சைடு மிரர்கள் மூலமாக இரைச்சல் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதனை லாவகமாக தடுக்கும் விதத்தில், புதிய கேமரா அமைப்பு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

கார்களில் சைடு மிரர்களுக்கு பதிலாக கேமராவை உருவாக்கிய ஹூண்டாய்!

அத்துடன், இந்த புதிய சைடு கேமராவால் காரின் ஏரோடைனமிக்ஸ் சிறப்பாக மேம்படும் என்று ஹூண்டாய் மொபிஸ் தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, காரின் மைலேஜ் அதிகரிக்கும் என்று அடுத்த நன்மையை கூறுகிறது ஹூண்டாய் மொபிஸ்.

கார்களில் சைடு மிரர்களுக்கு பதிலாக கேமராவை உருவாக்கிய ஹூண்டாய்!

இந்த புதிய சைடு கேமரா அமைப்பில் மூன்று விதமான கோணங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும். இதனால், பின்னால் மற்றும் பக்கவாட்டில் மிக அருகில் வரும் வாகனங்களையும், வளைவுகளில் திரும்பும்போது வரும் வாகனங்களையும் எளிதாக தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை இந்த புதிய கேமரா அமைப்பு வழங்கும்.

கார்களில் சைடு மிரர்களுக்கு பதிலாக கேமராவை உருவாக்கிய ஹூண்டாய்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

காரை ஓட்டுபவர் சாலையில் இருந்து கவனத்தை எடுத்து சைடு மிரர்களை பார்ப்பதை இது தவிர்க்கும். உட்புறத்தில் இருக்கும் மானிட்டர் மூலமாகவே பின்னால் மற்றும் பக்கவாட்டில் வரும் வாகனங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட முடியும். தலையை திருப்பி, திருப்பி சைடு மிரர்களை பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

கார்களில் சைடு மிரர்களுக்கு பதிலாக கேமராவை உருவாக்கிய ஹூண்டாய்!

மேலும், சைடு மிரர்களைவிட அளவில் அடக்கமாக இந்த கேமரா அமைப்பு இருப்பதால் நெருக்கடியான இடங்களிலும் சைடு மிரர்கள் பிற வாகனங்களுடன் சைடு மிரர்கள் உரசும் பிரச்னையை தவிர்க்க முடியும்.

கார்களில் சைடு மிரர்களுக்கு பதிலாக கேமராவை உருவாக்கிய ஹூண்டாய்!

சில நிறுவனங்கள் மட்டுமே இந்த புதிய சைடு கேமரா அமைப்பை உருவாக்கி இருக்கின்றன. இந்த புதிய சைடு கேமரா பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடியதாக இருக்கும். எனினும், இதனை காரில் பொருத்துவதற்கு அனைத்து நாட்டு மோட்டார் வாகன விதியில் உரிய திருத்தமும், அரசின் அனுமதியும் பெற வேண்டி இருக்கும்.

கார்களில் சைடு மிரர்களுக்கு பதிலாக கேமராவை உருவாக்கிய ஹூண்டாய்!

ஹூண்டாய், கியா, ஜெனிசிஸ் உள்ளிட்ட சொந்த கார் பிராண்டுகளுக்கு தவிர்த்து, பிற கார் நிறுவனங்களுக்கும் இந்த புதிய சைடு கேமரா அமைப்பை சப்ளை செய்வதற்கு ஹூண்டாய் மொபிஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. புதிய தலைமுறை ஹூண்டாய், கியா, ஜெனிசிஸ் கார்களில் இந்த சைடு கேமரா அமைப்பு இடம்பெறும் என்று ஹூண்டாய் மொபிஸ் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
South korean auto parts supplier, Hyundai Mobis has developed a camera monitor system (CMS) for cars that can replace rear view mirrors soon.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X