மாருதி எர்டிகா காருக்கு போட்டியாக புதிய எம்பிவி காரை களமிறக்கும் ஹூண்டாய்!

மாருதி எர்டிகா காருக்கு இணையான ரகத்தில் வர இருக்கும் புதிய ஹூண்டாய் எம்பிவி காரின் அறிமுகம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மாருதி எர்டிகா காருக்கு போட்டியாக புதிய எம்பிவி காரை களமிறக்கும் ஹூண்டாய்!

இந்தியாவில் எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக கார்களுக்கான வரவேற்பு அதீதமாக இருந்து வருகிறது. இந்த இரண்டு ரகத்தில் கார்கள் வைத்திருக்கும் நிறுவனங்கள் மட்டுமே ஓரளவு விற்பனையில் தாக்குப்பிடிக்க முடியும் சூழல் உருவாகி இருக்கிறது. தற்போது கார் சந்தை மிக மோசமான நிலையில் இருந்தாலும் கூட இந்த இரண்டு ரகத்திலான மாடல்களுக்கு சிறப்பான விற்பனை இருந்து வருகிறது.

மாருதி எர்டிகா காருக்கு போட்டியாக புதிய எம்பிவி காரை களமிறக்கும் ஹூண்டாய்!

அதன்படி, மாருதி எர்டிகா காருக்கு இணையான ரகத்தில் புதிய எம்பிவி காரை களமிறக்கும் முடிவை ஹூண்டாய் மோட்டார்ஸ் கையில் எடுத்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹெக்ஸாஸ்பேஸ் (HND-7) என்ற பெயரிலான எம்பிவி காரின் கான்செப்ட் மாடலை ஹூண்டாய் காட்சிக்கு வைத்திருந்தது.

மாருதி எர்டிகா காருக்கு போட்டியாக புதிய எம்பிவி காரை களமிறக்கும் ஹூண்டாய்!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த காரை ஹூண்டாய் மோட்டார்ஸ் தயாரிப்பு நிலைக்கு கொண்டு வரவில்லை. இந்த நிலையில், எம்பிவி கார்களுக்கான வலுவான சந்தையை மனதில் வைத்து புத்தம் புதிய மாடலை களமிறக்க முடிவு செய்துள்ளது. மேலும், ஹெக்ஸாஸ்பேஸ் கான்செப்ட்டிற்கு உயிர் கொடுத்து அதனை தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தும் திட்டமும் ஹூண்டாய் வசம் உள்ளது.

மாருதி எர்டிகா காருக்கு போட்டியாக புதிய எம்பிவி காரை களமிறக்கும் ஹூண்டாய்!

இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஹூண்டாய் தலைமை செயல் அதிகாரி எஸ்எஸ் கிம்," உடனடியாக எந்த புதிய ரக கார் சந்தையிலும் களமிறங்கும் எண்ணம் இல்லை. இருப்பினும், வர்த்தக வாய்ப்புள்ள ரக கார் சந்தையில் களமிறங்குவதற்கான ஆய்வுப் பணிகளை செய்ய முடிவு செய்துள்ளோம்," என்று கூறியுள்ளார்.

மாருதி எர்டிகா காருக்கு போட்டியாக புதிய எம்பிவி காரை களமிறக்கும் ஹூண்டாய்!

இந்த நிலையில், ஹூண்டாய் எம்பிவி கார் வரும் 2021ம் ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்ிகறது. க்ராண்ட் ஐ10 காரின் பிளாட்ஃபார்மில் அடிப்படையில் இந்த புதிய எம்பிவி காரை உருவாக்கவும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளதாக கறப்படுகிறது.

மாருதி எர்டிகா காருக்கு போட்டியாக புதிய எம்பிவி காரை களமிறக்கும் ஹூண்டாய்!

கியா செல்டோஸ் மற்றும் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா கார்களில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் எஞ்சின்கள் இந்த புதிய எம்பிவி காரில் பயன்படுத்தப்படும் வாய்ப்புள்ளன. இவை ஏற்கனவே பிஎஸ்-6 தரத்திற்கு இணையானதாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மாருதி எர்டிகா காருக்கு போட்டியாக புதிய எம்பிவி காரை களமிறக்கும் ஹூண்டாய்!

இந்த புதிய எம்பிவி காருக்கு பெரும்பான்மையான உதிரிபாகங்கள் இந்தியாவிலிருந்தே பெறப்படும். மேலும், மாருதி எர்டிகா காரைவிட அதிக பிரிமீயம் அம்சங்களுடன் இந்த புதிய காரை களமிறக்கும் திட்டமும் ஹூண்டாய் வசம் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மாருதி எர்டிகா காருக்கு போட்டியாக புதிய எம்பிவி காரை களமிறக்கும் ஹூண்டாய்!

மாருதி எர்டிகா கார் மட்டுமின்றி, மஹிந்திரா மராஸ்ஸோ, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ரெனோ ட்ரைபர் உள்ளிட்ட கார்களின் சந்தையை கவரும் வகையில் இந்த புதிய காரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Rushlane

Most Read Articles
English summary
South Korean car maker, Hyunda Motors is planning to launch new MPV car in India by 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X