பெர்ஃபார்மென்ஸ் கார்களை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ்!

பெர்ஃபார்மென்ஸ் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

பெர்ஃபார்மென்ஸ் கார்களை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ்!

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக விளங்குகிறது. வெளிநாடுகளில் N என்ற பிரத்யேக பிராண்டில் செயல்திறன் மிக்க கார்களை விற்பனை செய்து வருகிறது.

பெர்ஃபார்மென்ஸ் கார்களை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ்!

அதாவது, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது சொகுசு கார்களின் அதிசெயல்திறன் மிக்க மாடல்களை ஏஎம்ஜி பிராண்டில் விற்பனை செய்வது போன்றே, ஹூண்டாய் நிறுவனம் என் பிராண்டில் தனது செயல்திறன் மிக்க கார்களை விற்பனை செய்து வருகிறது.

பெர்ஃபார்மென்ஸ் கார்களை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ்!

இந்த நிலையில், இந்தியாவில் செயல்திறன் மிக்க கார்களுக்கான வரவேற்பு மெல்ல அதிகரித்து வருகிறது. இதனை மனதில் வைத்து வர்த்தக விரிவாக்க முயற்சியாக என் பிராண்டில் தனது செயல்திறன் மிக்க கார்களை விரைவில் இந்தியாவில் களமிறக்குவதற்கான முயற்சிகளை ஹூண்டாய் மேற்கொண்டுள்ளதாக கார்அண்ட்பைக் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

பெர்ஃபார்மென்ஸ் கார்களை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ்!

ஹூண்டாய் என் பிராண்டில் வர இருக்கும் புதிய கார்கள் சாதாரண கார் மாடல்களைவிட தோற்றத்தில் மிக வசீகரமாகவும், சற்றே கூடுதல் செயல்திறன் பெற்றதாகவும் இருக்கும். அதாவது, மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி அளவுக்கு மிக அதீத செயல்திறன் பெற்ற மாடல்களாக இருக்காது.

பெர்ஃபார்மென்ஸ் கார்களை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ்!

ஆனால், சிறப்பு ஆக்சஸெரீகளுடன் வெகுவாக கவரும் வகையில் தோற்றத்துடன் இந்த கார்கள் வர இருக்கின்றன. ஏற்கனவே, என் பிராண்டு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்காக வாடிக்கையாளர் சிலரிடம் கருத்துக் கேட்பு படலத்தையும் நிகழ்த்தி இருக்கிறது ஹூண்டாய்.

பெர்ஃபார்மென்ஸ் கார்களை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ்!

இதில், சாதகமான முடிவுகள் கிடைத்ததையடுத்து, திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது. முதல் மாடலாக ஹூண்டாய் ஐ30 என் கார் வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 278.8 பிஎச்பி பவரையும், 353 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பெர்ஃபார்மென்ஸ் கார்களை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ்!

இந்த செயல்திறன் மிக்க ஹேட்ச்பேக் கார் மாடலானது 0 -100 கிமீ வேகத்தை 6.1 வினாடிகளில் எட்டிவிடும். இந்த கார் வரும் 2020ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பெர்ஃபார்மென்ஸ் கார்களை இந்தியாவில் களமிறக்குகிறது ஹூண்டாய் மோட்டார்ஸ்!

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் என் பிராண்டு மாடல்கள் என் பெர்ஃபார்மென்ஸ் மற்றும் என் லைன் என்ற இரண்டு மாடல்களில் விற்பனை செய்யப்படுகின்றன. ஐ30 மற்றும் டூஸான் ஆகிய இரண்டு கார்களின் என் பிராண்டு கார்கள் விற்பனையில் உள்ளன. இந்த இரண்டு மாடல்களுமே இந்தியாவிற்கு சாத்தியமானதாக கருதப்படுகிறது.

Most Read Articles
English summary
According to media report, South Korean car maker Hyundai is planning to launch its N performance range of cars in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X