மாருதி எஸ் பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் ஹூண்டாய் கார்!

மாருதி எஸ் பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக புதிய மைக்ரோ எஸ்யூவியை களமிறக்குவதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் ஹூண்டாய் கார்!

இந்தியாவில் ஆரம்ப விலை ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மைக்ரோ எஸ்யூவிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ரெனோ க்விட் காரின் வர்த்தகத்தை பார்த்து மாருதி நிறுவனம் எஸ் பிரெஸ்ஸோ என்ற மைக்ரோ எஸ்யூவி ரக காரை வரும் 30ந் தேதி விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் ஹூண்டாய் கார்!

அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் ரூ.3.5 லட்சம் என்ற மிக குறைவான பட்ஜெட்டில் வர இருக்கும் மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இந்த கார் பட்ஜெட் கார் மார்க்கெட்டில் அதிக வரவேற்பை பெறும் என்று தெரிகிறது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் ஹூண்டாய் கார்!

இந்த நிலையில், மைக்ரோ எஸ்யூவிகளுக்கு இருக்கும் வர்த்தக வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்விதமாக, நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாக விளங்கும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும், புதிய மைக்ரோ எஸ்யூவி மாடலை களமிறக்க முடிவு செய்துள்ளது.

மாருதி எஸ் பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் ஹூண்டாய் கார்!

ஹூண்டாய் நிறுவனத்தின் மைக்ரோ எஸ்யூவி ஹூண்டாய் AX என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த கார் தென்கொரியாவில் அடோஸ் என்ற பெயரில் விற்பனையான பழைய சான்ட்ரோ காருக்கு மாற்றாக நிலைநிறுத்தப்பட உள்ளதாம்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் ஹூண்டாய் கார்!

இந்தியா மட்டுமின்றி, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். புதிய ஹூண்டாய் சான்ட்ரோ கார் பிளாட்ஃபார்மிலேயே, மைக்ரோ எஸ்யூவி பாடி ஸ்டைலில் வடிவமைக்கப்படும்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் ஹூண்டாய் கார்!

இந்த காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான புதிய 1.0 லிட்டர் பெட்ரோரல் எஞ்சின் பயன்படுத்தப்படும். மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கலாம். எரிபொருள் சிக்கனத்திலும் மிகச் சிறந்த கார் மாடலாக இருக்கும்.

மாருதி எஸ் பிரெஸ்ஸோவுக்கு போட்டியாக வரும் ஹூண்டாய் கார்!

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ மற்றும் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார்களுக்கு இடையிலான மாடலாக நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது. இந்த காரின் கான்செப்ட் மாடலானது வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு கொண்டு வரப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

Source: Digital Times

Most Read Articles
English summary
Hyundai motors is planning to launch new micro SUV in India to counter Maruti S Presso.
Story first published: Friday, September 20, 2019, 12:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X