ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் டிரக் கான்செப்ட்... ஹூண்டாய் அறிமுகம்!

ஹைட்ரஜனில் இயங்கும் புதிய டிரக் கான்செப்ட் மாடலை ஹூண்டாய் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. படங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் டிரக் கான்செப்ட்... ஹூண்டாய் அறிமுகம்!

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் பெட்ரோல், டீசலுக்கு மாற்றான எரிபொருளில் இயங்கும் வாகனங்களை உருவாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு அதிக முதலீடு செய்துள்ளதை போன்றே, ஹைட்ரஜன் எரிபொருளாக கொண்டு இயங்கும் ஃப்யூவல் செல் வாகனங்களை தயாரிப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் டிரக் கான்செப்ட்... ஹூண்டாய் அறிமுகம்!

கடந்த 2013ம் ஆண்டு முதல் இந்த ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வாகன தயாரிப்புக்கு பெரும் முதலீடுகளையும் செய்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்த நிலையில், ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் எஸ்யூவியை ஏற்கனவே அறிமுகம் செய்துவிட்டது.

ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் டிரக் கான்செப்ட்... ஹூண்டாய் அறிமுகம்!

இந்த நிலையில், தற்போது ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் டிரக் மாதிரி மாடலை அமெரிக்காவில் நடந்த வர்த்தக வாகன கண்காட்சியின் மூலமாக பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது.

ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் டிரக் கான்செப்ட்... ஹூண்டாய் அறிமுகம்!

ஹூண்டாய் HDC-6 நெப்டியூன் என்ற பெயரில் இந்த புதிய டிரக் கான்செப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெஸ்லா எலெக்ட்ரிக் டிரக் மாதிரி மாடலை ஓரம் கட்டும் வகையில் மிகச் சிறப்பான வடிவமைப்பு தாத்பரியங்களுடன் இந்த டிரக் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் டிரக் கான்செப்ட்... ஹூண்டாய் அறிமுகம்!

நவீன யுக டிரக் மாடலாக வந்திருக்கும் இந்த ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வாகனத்தின் பயணிக்கும் தூர அளவு உள்ளிட்ட எந்த தகவலும் இப்போது வெளியிடப்படவில்லை. ஆனால், அதிக தூரம் பயணிக்கும் திறனையும், செயல்திறனையும் ஒருங்கே வழங்கும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் டிரக் கான்செப்ட்... ஹூண்டாய் அறிமுகம்!

மேலும், இந்த டிரக்கின் இழுவை டிராக்டர் மாடலின் கேபின் மிகவும் சிறப்பான இடவசதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை ஓட்டுனர்களுக்கு வழங்கும். அத்துடன், புதிய குளிர்சாதன வசதி கொண்ட டிரெய்லர் இந்த டிராக்டருடன் இணைக்கப்பட்டு இருக்கிறது.

ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மூலமாக இயங்கும் டிரக் கான்செப்ட்... ஹூண்டாய் அறிமுகம்!

இந்த டிரெய்லரானது சப்தம் மற்றும் அதிர்வுகள் இல்லாமல் இயங்கும். அத்துடன், 90 சதவீதம் வரை குறைவான மாசு உமிழ்வை வெளிப்படுத்தும் என்று ஹூண்டாய் தெரிவிக்கிறது. இதன் ஒற்றைச் சுவர் ஃபோம் கட்டமைப்பு மிகச் சிறந்த உறுதித்தன்மையும், எடை குறைவானதாகவும் இருக்கும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
South Korean vehicle maker, Hyundai has revealed the HDC-6 Neptune concept in US. It will use hydrogen fuel-cell technology and will give the emission free transportation solution for future.
Story first published: Wednesday, October 30, 2019, 13:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X