புதிய பெயரில் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்

புதிய பெயரில் புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. இன்று வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் மூலமாக இது உறுதியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

புதிய பெயரில் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்

இந்தியாவின் காம்பேக்ட் செடான் கார் ரகத்தில் முக்கிய போட்டியாளர்களில் ஒன்றாக ஹூண்டாய் எக்ஸ்சென்ட் விளங்குகிறது. ஆனால், மாருதி டிசையர் மற்றும் ஹோண்டா அமேஸ் கார்களின் வலுவான சந்தையை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காரால் அசைக்க முடியாமல் திணறி வருகிறது.

விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக டாக்சி மார்க்கெட்டிலும் இந்த கார் சந்தைப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, தனிநபர் வாடிக்கையாளர் வட்டம் குறைந்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், இதன் டிசைன் இல்லை.

புதிய பெயரில் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்

இந்த நிலையில், அனைத்து விதத்திலும் நிறைவை தரும் புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, தனிநபர் வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களுடன் அறிமுகமாக இருக்கிறது. தற்போது இந்த கார் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

புதிய பெயரில் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்

பண்டிகை காலத்தில் வந்த ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் அடிப்படையிலான செடான் வெர்ஷனாக எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் இந்த காம்பேக்ட் செடான் கார் வேறுபடுத்தப்பட்டு இருக்கும் என்பது ஹூண்டாய் தெரிவித்திருக்கும் தகவல்களால் தெரிந்து கொள்ள முடிகிறது.

புதிய பெயரில் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்

புதிய ஹூண்டாய் காம்பேக்ட் செடான் கார் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டு இருக்கும் டீசரில், புதிய காம்பேக்ட் செடான் காரானது அவ்ரா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் டிசைன் தாத்பரியங்களை அதிக அளவில் பார்க்க முடியும்.

புதிய பெயரில் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்

புதிய ஹூண்டாய் அவ்ரா காரில் பூமராங் வடிவிலான எல்இடி பகல்நேர விள்ககுகள், தேன்கூடு அமைப்பிலான முன்புற க்ரில் அமைப்பு, க்ரோம் பூச்சுடன் கதவு கைப்பிடிகள், C வடிவிலான எல்இடி விளக்குகளுடன் டெயில் லைட் க்ளஸ்ட்டர் அமைப்பு, 15 அங்குல அலாய் வீல்கள், சுறாத் துடுப்பு வடிவ ஆன்டெனா ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய பெயரில் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரின் டேஷ்போர்டு அமைப்பு இதிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கும். 8 அங்குல தொடுதிரை சாதனம், ஆட்டோ கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ரியர் ஏசி வென்ட்டுகள், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி, ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

புதிய பெயரில் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்

புதிய ஹூண்டாய் அவ்ரா செடான் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படும். இவை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக இருக்கும். இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படலாம்.

புதிய பெயரில் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்

தற்போதைய மாடல் ரூ.5.81 லட்சத்திலிருந்து கிடைக்கும் நிலையில், புதிய மாடலின் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்படும். மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், ஃபோர்டு ஆஸ்பயர், ஃபோக்ஸ்வேகன் அமியோ கார்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Hyundai has revealed the name of its upcoming compat sedan, which will be called the Aura.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X