ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல்: முழு விபரம்

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல்: முழு விபரம்

புதிய தலைமுறை ஹூண்டாய் சான்ட்ரோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை கொண்டாடும் விதத்தில், சிறப்பு பதிப்பு மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், பண்டிகை காலத்தில் கார் வாங்குவோரை கவரும் விதத்திலும் இந்த புதிய மாடலில் கூடுதல் சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல்: முழு விபரம்

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் சான்ட்ரோ ஸ்போர்ட்ஸ் SE என்ற பெயரில் வந்துள்ளது. மேலும், ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டின் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல்: முழு விபரம்

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ ஸ்போர்ட்ஸ் எடிசன் மாடலானது அக்வா டியல் மற்றும் போலார் ஒயிட் வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இதில், அக்வா டியல் என்பது புத்தம் புதிய வண்ணத் தேர்வாக வந்துள்ளது.

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல்: முழு விபரம்

இந்த மாடலில் கூடுதலாக கருப்பு வண்ண கதவு கைப்பிடிகள், கருப்பு வண்ண சைடு மிரர்கள், கிளாஸி பிளாக் என்ற பளபளப்பான கருப்பு வர்ணப்பூச்சுடன் கூடிய ரூஃப் ரெயில்கள், கன்மெட்டல் க்ரே வண்ணத்திலான வீல் கவர்கள், பின்புறத்தில் க்ரோம் அலங்கார வேலைப்பாடு, பாடி கிளாடிங் சட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனிவர்சரி எடிசன் என்பதற்கான பேட்ஜ்களும் இடம்பெற்றுள்ளன.

MOST READ: அரசியல்வாதிகள் வெள்ளை கலர் கார்களை அதிகம் பயன்படுத்துவது ஏன் தெரியுமா? எல்லாம் ஒரு காரணமாதான்...

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல்: முழு விபரம்

இந்த காரின் இன்டீரியர் முழுவதுமாக கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருப்பதுடன் நீல வண்ண அலங்கார வேலைப்பாடுகள் கண்ணை கவரும் விதத்தில் இடம்பெற்றுள்ளன. புதிய ஃபேப்ரிக் சீட் கவர்கள் உள்ளன. இதுதவிர்த்து, ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டில் கிடைக்கும் அனைத்து சிறப்பம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

MOST READ: அரசியல்வாதிகள் வெள்ளை கலர் கார்களை அதிகம் பயன்படுத்துவது ஏன் தெரியுமா? எல்லாம் ஒரு காரணமாதான்...

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல்: முழு விபரம்

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடலில் அதே 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இடம்பெற்றுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

MOST READ: எம்ஜி ஹெக்டர் காரை வாங்கிய பழம் பெரும் நடிகை... யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல்: முழு விபரம்

புதிய ஹூண்டாய் சான்ட்ரோ காரின் ஆனிவர்சரி ஸ்பெஷல் எடிசன் ஸ்போர்ட்ஸ் மேனுவல் வேரியண்ட்டிற்கு ரூ.5.16 லட்சமும், ஏஎம்டி மாடலுக்கு ரூ.5.74 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வருவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

Via: Carwale

Most Read Articles

English summary
Hyundai is all set to launch anniversary edition of the Santro, called the Santro Sportz SE in India soon.
Story first published: Saturday, October 19, 2019, 10:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X