இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடியை முதலீடு செய்ய ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்!

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக விளங்குகிறது. இந்த நிலையில், எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தையை மனதில் வைத்து, முதல் எலெக்ட்ரிக் கார் மாடலாலக கோனா எஸ்யூவியே நேற்றுமுன்தினம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்!

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவி சிறப்பம்சங்களில் அசத்தலாக வந்தபோதிலும், ரூ.25.30 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் வந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு சற்று மலைப்பான விஷயமாக இருக்கிறது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்!

எனினும், சிறந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக வந்திருப்பதால், பசுமை வாகனங்களை விரும்புவோர் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் ஹூண்டாய் இருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் குறைவான பட்ஜெட்டில் சிறந்த எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை ஹூண்டாய் கையில் எடுத்துள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்!

அதன்படி, ரூ.1,400 கோடியை எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக இந்தியாவில் முதலீடு செய்ய இருக்கிறது ஹூண்டாய் மோட்டார்ஸ். இதில், கார் உருவாக்கப் பணிகள் மற்றும் லித்தியம் அயான் பேட்டரி ஆலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. இந்த ஆலை அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

எலெக்ட்ரிக் காரின் விலையில் லித்தியம் அயான் பேட்டரிதான் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவிலேயே லித்தியம் அயான் பேட்டரியையும், கார்களை அசெம்பிள் செய்யும்போது, விலை கணிசமாக குறையும். எனவே, ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் புதிய எலெக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை பெற முடியும்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்!

இந்தியாவில் உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் கார்களை உள்நாட்டு சந்தையை தவிர்த்து, பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால், எலெக்ட்ரிக் கார் உற்பத்தி கட்டமைப்பை தொடர்ந்து விரிவாக்கம் செய்யவும் ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.1,400 கோடி முதலீடு செய்யும் ஹூண்டாய்!

இதுதவிர்த்து, எலெக்ட்ரிக் கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் விதத்தில், சார்ஜ் ஏற்றும் மையங்களை அதிக அளவில் நிறுவுவதற்கான முயற்சிகளையும் ஹூண்டாய் மேற்கொள்ள இருக்கிறது. இதனால், நகர்புற பயன்பாட்டின்போதும், நீண்ட தூர பயணங்களின்போதும் வாடிக்கையாளர்கள் சிரமமின்றி பயணிக்க ஏதுவாகும்.

Source: ET Auto

Most Read Articles
English summary
Hyundai is plannning to invest Rs. 1,400 Cr in India for electric cars.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X