ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்

ஹூண்டாய் நிறுவனம் அழகான அதேநேரம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைகளை பெறும் விதமான கார்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் கார்கள் சில சமயங்களில் சாலைகளில் ப்ரேக்டவுன் ஆகி நிற்பதும் உண்டு.

ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்

ஆனால் இந்த விஷயம் எல்லாம் நல்லதுக்கு தான். ஏனெனில் ஹூண்டாய் கார்களை ஆப்-ரோடுகளில் பயன்படுத்த இயலாது என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகள் தான் சாட்சி. அப்படி தான் அமெரிக்காவில் ஒருவர் தனது ஹூண்டாய் டூஸான் காரை மலைப்பாதைக்கு ஓட்டிச் சென்று சிக்கி தவித்துள்ளார்.

ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்

உட்டா, அமெரிக்காவில் உள்ள 13வது மிக பெரிய மாநிலம். குறிப்பாக இந்த மாநிலம் ஆப்-ரோடு ட்ரைல்ஸுக்கு மிக பிரபலமான இடம். இதுவரைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாகசங்கள் இங்கு பொழுதுபோக்கிற்காக நடந்தேறியுள்ளன.

ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்

இவ்வாறு ஆப்-ரோடு சாகசங்களில் ஈடுப்படும் வாகனங்கள் சில சமயங்களில் மலைப்பாதையில் சிக்குவதும் உண்டு. அவ்வாறு சிக்கிக்கொள்ளும் வாகனங்களை காப்பாற்றுவதற்காக இதற்கென மீட்பு குழுக்களும் உள்ளன. இவை அந்த வாகனங்களை தங்களது ஜீப் போன்ற மலைப்பாதைக்கு ஏற்ற வாகனங்களின் உதவியுடன் வெளியே கொண்டு வருகின்றன.

ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்

இந்த கடின சாலையில் ஹூண்டாய் நிறுவனத்தின் டூஸான் கார் சென்றால் என்ன ஆகும் என கற்பனை செய்து பாருங்கள். கொஞ்சம் தூரம் சமாளித்து சென்ற கார் எதிர்பார்த்ததை போல பாதியில் ஒரு இடத்தில் சிக்கி கொண்டுள்ளது. பிறகு என்ன, எப்போதும் போல மாட் மீட்பு குழு நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளனர்.

ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்

அவர்கள் 1997 ஜீப் செரொகி எக்ஸ்ஜே-வை எடுத்து கொண்டு ஹூண்டாய் டூஸான் சிக்கியிருக்கும் இடத்திற்கு ஜிபிஎஸ் உதவியுடன் வந்து மீட்டு கொண்டு சென்றுள்ளனர். இந்த நிகழ்வு வீடியோவாக எடுக்கப்பட்டு யூடியுப்பிலும் பகிரப்பட்டுள்ளது.

நான் இவர்களது அழைப்பை எடுத்து பேசும் பொழுது, இவர்கள் ஹூண்டாய் டூஸான் என கூறியபோது அநேகமாக நெடுஞ்சாலைக்கு அருகில் தான் எங்காவது சிக்கியிருக்கும், அதனால் இது எளிதான வேலையாக தான் இருக்கும் என நினைத்தேன். ஆனால் இது மிகவும் சவாலான வேலையாக இருந்தது என டூஸானை மீட்க சென்ற மாட் மீட்பு குழு ஆப்ரேட்டர் கவலையுடன் கூறியுள்ளார்.

ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்

இந்த வீடியோவில் பார்க்கையில், ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி வித்தியாசமான நிலையில் பாதையில் முன்புறம் சிறு குன்று ஒன்றில் சிக்கியிருந்துள்ளது. ஓட்டுனர் காரை மீட்க பல முறை முயற்சித்துள்ளார். இதனால் கார் முழுவதும் மண்ணாகி உள்ளது.

ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்

ஹூண்டாய் நிறுவனம் டூஸான் மாடலை கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து தயாரித்து வருகிறது. தற்சமயம் உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள இந்த கார், அமெரிக்காவில், 2.0 மற்றும் 2.4 லிட்டர் என்ஜின்களுடன் வெளியாகி வருகிறது. 2.0 என்ஜின் அதிகப்பட்சமாக 161 பிஎச்பி ஆற்றலையும், 2.4 லிட்டர் என்ஜின் 181 பிஎச்பி ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது.

ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்

என்ஜினின் ஆறு வேகத்திற்கான நிலைகளை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்குகிறது. ஹூண்டாய் நிறுவனம் அனைத்து சக்கரங்களையும் இயக்கும் அமைப்பையும் தேர்வாக வழங்கும். ஆனால் இந்த டூஸான் காரில் அத்தகைய அமைப்பு இல்லை.

ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்

ஜீப் செரொகி எக்ஸ்ஜே, இன்லைன்-ஆறு சிலிண்டர் அமைப்புகளை கொண்ட 4.0 லிட்டர் என்ஜினுடன் அதிகபட்ச ஆற்றலாக 190 பிஎச்பி பவரையும் 305 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வாகனமாகும். குறைவான விகிதத்திலேயே இந்த ஜீப்பின் நான்கு சக்கரங்களையும் இயக்க முடியும்.

ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்

உட்டா ட்ரைல்ஸில் சிக்கிகொள்ளும் வாகனங்களை மிக எளிதாக வெளியே கொண்டு வந்துவிடும் இந்த ஜீப்பே, டூஸானை மீட்கும்போது சில இடங்களில் சரிவை கண்டுள்ளது. முக்கியமாக டூஸானை சிக்கியிருந்த நிலையில் இருந்து நகர்த்துவது ஜீப்பிற்கு பெரும் சவாலாக இருந்தது.

ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்

ஹூண்டாய் டூஸான் சிக்கி கொண்டது, அதன் உரிமையாளர்களுக்கு ஒருபுறம் கஷ்டமாக இருந்தாலும் மறுபுறம் அதை வெளியே கொண்டுவர அவர்கள் செய்த முய்றசிகள் ஜாலியாகவே இருந்திருக்கும். டூஸானும் பள்ளத்தில் சிக்கி கொண்டதே தவிர்த்து காரில் எந்தவொரு பெரிய சேதமும் ஆகவில்லை. காரின் பம்பர், சறுக்கலான தட்டுகள், காரின் அடிப்பகுதி உள்ளிட்ட பாகங்கள் தான் பாறைகளால் சில சேதங்களை கண்டுள்ளன.

ஹூண்டாய் டூஸானுக்கு வந்த ஆஃப்ரோடு ஆசை... கடைசியில் நடந்ததை பாருங்கள்

பெட்ரோல் குழாயில் எந்த பாதிப்பும் இல்லை. டயரில் காற்றின் அளவு அப்படியே உள்ளது. இது காரின் சக்கரத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பதை காட்டுகின்றது. கார் ஒவ்வொரு முறையும் பாறையால் பாதிப்பு அடையும்போது ட்ரைவர் சிறப்பாக செயலாற்றியுள்ளார். கடைசி ஹூண்டாய் வெற்றிகரமாக வெளியே வந்து இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற்றுவிட்டது.

Most Read Articles
English summary
Hyundai Tucson Extreme Off-Road Video: SUV Gets Stuck & Rescued By Jeep Cherokee
Story first published: Tuesday, October 15, 2019, 11:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X