அறிமுகமான இரண்டே மாதங்களில் மாருதி பிரெஸ்ஸா சோலியை முடித்த ஹூண்டாய் வெனியூ!!

அறிமுகமான இரண்டே மாதங்களில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை அதளபாதாளத்தில் தள்ளி நம்பர்-1 இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது ஹூண்டாய் வெனியூ கார்.

அறிமுகமான இரண்டே மாதங்களில் மாருதி பிரெஸ்ஸா சோலியை முடித்த ஹூண்டாய் வெனியூ!!

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் தன்னிகரற்ற மாடலாக மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஆதிக்கம் செலுத்தி வந்தது. அறிமுகம் செய்யப்பட்டது முதலே, இந்த ரகத்தில் நம்பர்-1 இடத்தில் இருந்து வந்தது. போட்டியாளர்களைவிட ஒப்பிடும்போது விற்பனை எண்ணிக்கை பல மடங்கு உச்சத்தில் இருந்து வந்தது.

அறிமுகமான இரண்டே மாதங்களில் மாருதி பிரெஸ்ஸா சோலியை முடித்த ஹூண்டாய் வெனியூ!!

இந்த நிலையில், கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெனியூ காம்பேக்ட் எஸ்யூவி கார் மாருதி விட்டாரா ஆதிக்கத்தை இரண்டே மாதங்களில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஆம், கடந்த ஜூலை மாத விற்பனையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா திடீரென வழக்கத்தைவிட மிக குறைவான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இது மாருதிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அறிமுகமான இரண்டே மாதங்களில் மாருதி பிரெஸ்ஸா சோலியை முடித்த ஹூண்டாய் வெனியூ!!

கடந்த மாதம் 9,585 ஹூண்டாய் வெனியூ கார்கள் விற்பனையாகி உள்ளன. அதேநேரத்தில், 5,302 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. மாதத்திற்கு 10,000க்கும் அதிகமான பிரெஸ்ஸா கார்கள் விற்பனையான நிலையில், கடந்த மாதம் சரியான அடி விழுந்துள்ளது. விற்பனை கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துவிட்டது.

அறிமுகமான இரண்டே மாதங்களில் மாருதி பிரெஸ்ஸா சோலியை முடித்த ஹூண்டாய் வெனியூ!!

இது மாருதிக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும், ஹூண்டாய் வெனியூ காருக்கு 50,000க்கும் அதிகமான முன்பதிவுகள் கிடைத்திருப்பதால், அடுத்த சில மாதங்களுக்கு ஹூண்டாய் வெனியூ காரின் விற்பனை மிக அதிகமாகவே இருக்கும் என்று நம்பலாம். ஆனால், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் விற்பனை எழுச்சி பெறுமா என்பது சந்தேகமாக உள்ளது.

அறிமுகமான இரண்டே மாதங்களில் மாருதி பிரெஸ்ஸா சோலியை முடித்த ஹூண்டாய் வெனியூ!!

பொதுவாக புதிய கார்கள் அறிமுகமாகும்போது இதுபோன்ற அதிக முன்பதிவுகளுடன் சில மாதங்கள் விற்பனையில் சக்கை போடு போடும். ஆனால், ஹூண்டாய் வெனியூ காருக்கான வரவேற்பு தொடர்ந்து சிறப்பாக இருக்கும் என்று கருதப்படுவதால், மாருதி நிறுவனம் விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையை அதிகரிக்க புதிய விற்பனை யுக்திகளை கையிலெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அறிமுகமான இரண்டே மாதங்களில் மாருதி பிரெஸ்ஸா சோலியை முடித்த ஹூண்டாய் வெனியூ!!

ஹூண்டாய் வெனியூ கார் இன்ஸ்டன்ட் ஹிட் அடித்ததற்கு பல முக்கிய காரணங்களை கூறலாம். இந்திய வாடிக்கையாளர்களை கவரும் டிசைன், நேரடி இணைய வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சிறந்த எஞ்சின் தேர்வுகள் ஆகியவை வெனியூ காரை தூக்கிப் பிடித்துள்ளன. மேலும், விலையும் மிக சரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அறிமுகமான இரண்டே மாதங்களில் மாருதி பிரெஸ்ஸா சோலியை முடித்த ஹூண்டாய் வெனியூ!!

காம்பேக்ட் எஸ்யூவி கார் செக்மென்ட்டில் போட்டியாளர்களைவிட மிக அதிக வித்தியாசத்தில் ஹூண்டாய் வெனியூ கார் நம்பர்-1 இடத்தில் உள்ளது. வரும் மாதங்களில் இந்த இடத்தை ஹூண்டாய் வெனியூ கார் தக்க வைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
English summary
Hyundai Venue SUV to become best selling compact SUV in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X