மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது

மிகவும் மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய புதிய ஹூண்டாய் வெனியூ காரின் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது

இந்திய வாடிக்கையாளர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த கார் ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஹூண்டாய் நிறுவனம் நேற்றுதான் (மே 21) வெனியூ காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

 மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது

மிகவும் மலிவான விலையில் களமிறக்கப்பட்டுள்ளதால், ஹூண்டாய் வெனியூ விற்பனையில் பெரிதாக சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே ஹூண்டாய் வெனியூ காரின் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது.

 மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது

இந்தியா முழுவதும் உள்ள ஹூண்டாய் டீலர்ஷிப்கள், வெனியூ கார்களை டெலிவரி செய்யும் பணிகளை தொடங்கியுள்ளன. இந்த சூழலில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோ நகரில் உள்ள ஒரு டீலர்ஷிப்பில் வாடிக்கையாளர் ஒருவர் வெனியூ காரை டெலிவரி எடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

 மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது

இந்திய அளவில் பார்த்தால், முதல் ஹூண்டாய் வெனியூ டெலிவரிகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. லக்னோ என்ற அளவில் பார்த்தால், இதுதான் முதல் டெலிவரி என தகவல்கள் தெரிவிக்கின்றன. Mr Car Lover வெளியிட்டுள்ள அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு டெலிவரி கொடுப்பதற்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை அந்த டீலர்ஷிப் நடத்தியுள்ளதை நம்மால் பார்க்க முடிகிறது. வீடியோவில் காட்டப்பட்ட கார், 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் கூடிய 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் வேரியண்ட் ஆகும்.

 மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது

இது புத்தம் புதிய இன்ஜின் ஆகும். அத்துடன் இந்த செக்மெண்ட்டில் ஹூண்டாய் நிறுவனம் முதல் முறையாக ட்யூயல்-க்ளட்ச் டிரான்ஸ்மிஷனை வழங்கியுள்ளது. இது ஹூண்டாய் நிறுவனத்தின் மிகப்பெரிய முயற்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

MOST READ: சிறிய விபத்திற்கு இத்தனை லட்சமா...? பில்லைக் கண்டு அதிர்ச்சியடைந்த சொகுசு காரின் உரிமையாளர்...!

 மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது

அதே சமயம் டெஸ்ட் டிரைவ் கூட செய்யாமல் வாடிக்கையாளர்கள் இந்த காரை வாங்கியிருப்பதன் மூலமாக, ஹூண்டாய் நிறுவனத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கையையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

 மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது

இந்திய மார்க்கெட்டில் ஒரு மாதத்திற்கு சராசரியாக 10 ஆயிரம் வெனியூ கார்களை விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயித்து ஹூண்டாய் நிறுவனம் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறது. இது நடந்தால், இந்தியாவின் மிகப்பெரிய எஸ்யூவி உற்பத்தியாளர் என்ற அந்தஸ்தை ஹூண்டாய் அடையும்.

MOST READ: வைரலாகும் மாட்டு சாணி கோட்டிங்: மஹிந்திரா காரை சாணியால் பூசி மெழுகிய கேன்சர் மருத்துவர்...!

 மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது

ஏனெனில் அந்த நிறுவனம் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு 10 ஆயிரம் கிரெட்டா எஸ்யூவி கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த சூழலில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரான வெனியூ, நடப்பு மாதம் முதல் சேல்ஸ் சார்ட்டில் இணையவுள்ளது.

 மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது

இதன்மூலம் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்யும் ஒட்டுமொத்த எஸ்யூவி கார்களின் எண்ணிக்கை, இந்திய மார்க்கெட்டில் வேறு எந்த நிறுவனத்தை காட்டிலும் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

MOST READ: எளிய கார்களில் வலம் வரும் இந்திய ஜாம்பவான்கள்: எந்த கார்கள் என தெரிந்தால் வியந்து போவீர்கள்...

 மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது

ஹூண்டாய் வெனியூ கார் மொத்தம் 11 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வெர்ஷனின் விலை 6.5 லட்ச ரூபாய் மட்டுமே. வெனியூ காரின் மிகவும் விலை உயர்ந்த வேரியண்ட்டின் விலை 11.10 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

 மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது

2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் வெர்ஷன் என மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்பட்டுள்ளன. இனி இந்த மூன்று இன்ஜின்கள் குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

 மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது

ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்படும் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 82 பிஎச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை ஸ்டாண்டர்டாக பெற்றுள்ளது. அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 17.52 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும்.

 மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது

அதேசமயம் ஹூண்டாய் வெனியூ காரின் டீசல் வேரியண்ட்கள், 1.4 லிட்டர் நான்கு-சிலிண்டர் இன்ஜினை பெற்றுள்ளன. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவர் மற்றும் 220 என்எம் டார்க் திறனை உற்பத்தி செய்யக்கூடியது. இது 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை ஸ்டாண்டர்டாக பெற்றுள்ளது. ஒரு லிட்டருக்கு அதிகபட்சமாக 23.7 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும்.

 மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது

1.0 லிட்டர் மூன்று-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் யூனிட்தான் ஹூண்டாய் வெனியூ காரில் கிடைக்கும் பவர்ஃபுல் இன்ஜின் ஆப்ஷன் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இது 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (மைலேஜ் லிட்டருக்கு 18.27 கிமீ) மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமெட்டிக் (மைலேஜ் லிட்டருக்கு 18.15 கிமீ) ஆப்ஷன்களை பெற்றுள்ளது. இவை அராய் சான்று அளித்த மைலேஜ் ஆகும்.

 மலிவான விலையில் களமிறங்கி இந்தியாவை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஹூண்டாய் கார்... டெலிவரி தொடங்கியது

எச்டி 8-இன்ச் ஸ்கீரின், ப்ரொஜெக்டர் பனி விளக்குகள், ஏர் ப்யூரிஃபையர், 3 ஆண்டுகள் அன்லிமிடெட் வாரண்டி ஆகியவை ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்படுகின்றன. இதுதவிர சன் ரூஃப், க்ரூஸ் கண்ட்ரோல், லெதர் இருக்கைகள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், 6 ஏர் பேக்குகள் ஆகியவையும் ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்படும் குறிப்பிடத்தகுந்த வசதிகள் ஆகும்.

Most Read Articles

English summary
Hyundai Venue Compact SUV Delivery Begins In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X