இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அதிநவீன கார் இதுவே முதல் முறை... இன்னும் 6 நாட்களில் புதிய சகாப்தம்...

இந்தியாவின் முதல் கனெக்டட் காரான ஹூண்டாய் வெனியூ இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அதிநவீன கார் இதுவே முதல் முறை... இன்னும் 6 நாட்களில் புதிய சகாப்தம்...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள காம்பேக்ட் எஸ்யூவி ரக காரான வெனியூவை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் தயாராகி வருகிறது. ஹூண்டாய் வெனியூ இந்தியா மார்க்கெட்டில் வரும் மே 21ம் தேதி முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அதிநவீன கார் இதுவே முதல் முறை... இன்னும் 6 நாட்களில் புதிய சகாப்தம்...

விற்பனைக்கு அறிமுகமாக இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், ஹூண்டாய் வெனியூ காருக்கான புக்கிங் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரூ.21 ஆயிரம் முன்பணம் செலுத்தி ஹூண்டாய் வெனியூ காரை புக்கிங் செய்து கொள்ளலாம். அதேபோல் ஹூண்டாய் வெனியூ காரின் உற்பத்தியும் கடந்த சில நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டது.

இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அதிநவீன கார் இதுவே முதல் முறை... இன்னும் 6 நாட்களில் புதிய சகாப்தம்...

சென்னையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் தொழிற்சாலையில்தான் வெனியூ கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த சூழலில் பெரும் ஆவலை தூண்டியுள்ள ஹூண்டாய் வெனியூ தற்போது டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.

இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அதிநவீன கார் இதுவே முதல் முறை... இன்னும் 6 நாட்களில் புதிய சகாப்தம்...

தென் கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் களமிறக்கும் முதல் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் வெனியூதான். இதனால் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறி கிடக்கிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் எஸ்யூவி ரக காரான கிரெட்டாவிற்கு கீழாக வெனியூ நிலை நிறுத்தப்படுகிறது. வெனியூ காரின் சிறப்பம்சங்கள் மிரள வைக்கும் வகையில் உள்ளன.

இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அதிநவீன கார் இதுவே முதல் முறை... இன்னும் 6 நாட்களில் புதிய சகாப்தம்...

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உடன், இந்தியாவின் முதல் கனெக்டட் கார் (Connected Car) என்ற பெருமையை வெனியூ பெறவுள்ளது. மொத்தம் 33 வசதிகளை உள்ளடக்கிய ஹூண்டாய் நிறுவனத்தின் ப்ளூ லிங்க் கனெக்டிவிட்டி (Blue Link Connectivity) ஆப்ஷனுடன் ஹூண்டாய் வெனியூ களம் காணவுள்ளது. இதில், 10 வசதிகள் இந்திய மார்க்கெட்டிற்கு என பிரத்யேகமாக சேர்க்கப்பட்டவை.

இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அதிநவீன கார் இதுவே முதல் முறை... இன்னும் 6 நாட்களில் புதிய சகாப்தம்...

டிசைன் என எடுத்து கொண்டால், ஹூண்டாய் நிறுவனத்தின் லேட்டஸ்ட் டிசைன் லாங்குவேஜை வெனியூ அப்படியே தாங்கி வருகிறது. இதன் முன்பகுதியில் அறுங்கோண வடிவ க்ரில் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர ட்யூயல் ஹெட்லேம்ப் செட் அப், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் எல்இடி டெயில் லைட்ஸ் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.

இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அதிநவீன கார் இதுவே முதல் முறை... இன்னும் 6 நாட்களில் புதிய சகாப்தம்...

2 பெட்ரோல் மற்றும் 1 டீசல் என வெனியூ காரில் ஹூண்டாய் நிறுவனம் மொத்தம் மூன்று இன்ஜின் ஆப்ஷன்களை வழங்கவுள்ளது. இதில், எலைட் ஐ20 ஹேட்ச்பேக் காரிடம் இருந்து பெறப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும் அடக்கம். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவர் மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அதிநவீன கார் இதுவே முதல் முறை... இன்னும் 6 நாட்களில் புதிய சகாப்தம்...

இதுதவிர 1.0 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. அத்துடன் ஹூண்டாய் கிரெட்டா காரில் உள்ள 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் வெனியூ காரில் இடம்பெறவுள்ளது.

இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அதிநவீன கார் இதுவே முதல் முறை... இன்னும் 6 நாட்களில் புதிய சகாப்தம்...

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவர் மற்றும் 220 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. மிகவும் சவால் நிறைந்த இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில், வெனியூ மூலம் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்க முடியும் என ஹூண்டாய் உறுதியாக நம்புகிறது. அதற்கேற்ப ஹூண்டாய் வெனியூ காருக்கான முன்பதிவுகளும் குவிந்து வருகின்றன.

இந்திய வரலாற்றில் இப்படி ஒரு அதிநவீன கார் இதுவே முதல் முறை... இன்னும் 6 நாட்களில் புதிய சகாப்தம்...

ஹூண்டாய் வெனியூ கார் ரூ.8-ரூ.12 லட்சம் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டால், இந்த 'பேபி கிரெட்டா' புதிய வரலாறு படைப்பது உறுதி. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் செக்மெண்ட் லீடர் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட கார்களுக்கு ஹூண்டாய் வெனியூ வடிவில் கடும் சவால் காத்திருக்கிறது.

Image Courtesy: Gagan Choudhary

Most Read Articles
English summary
Hyundai Venue Starts Arriving At Dealerships A Week Ahead Of Its Launch In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X