மலிவு விலை காரின் கூடுதல் சிறப்பான ரகத்தை டீலர்களுக்கு அனுப்பி வைத்த ஹூண்டாய்...!

யாரும் எதிர்பாராத மலிவு விலையில் விற்பனைக்கு களமிறங்கி இருக்கும் வெனியூ காரின் புதிய ரகத்தை, ஹூண்டாய் நிறுவனம் அதன் டீலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

மலிவு விலை காரின் கூடுதல் சிறப்பான ரகத்தை டீலர்களுக்கு அனுப்பி வைத்த ஹூண்டாய்...!

தென்கொரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த வெனியூ காரை, கடந்த புதன்கிழமை (மே 22) அன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதேசமயம், வெனியூ காரை அந்த நிறுவனம் யாரும் எதிர்பாராத மிக மலிவான விலைக்கு களமிறக்கியிருக்கின்றது.

மலிவு விலை காரின் கூடுதல் சிறப்பான ரகத்தை டீலர்களுக்கு அனுப்பி வைத்த ஹூண்டாய்...!

இந்த கார் மலிவு விலையில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களைப் பெற்றிருப்பதால், இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில், அறிமுகம் செய்யப்பட்ட மிக விரைவில் 17,000 யூனிட்களுக்கான புக்கிங்குகளை அந்த கார் பெற்றுள்ளது. இத்துடன், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், கார் குறித்த தகவலை டீலர்களிடம் விசாரித்திருப்பதாக கூறப்படுகிறது.

மலிவு விலை காரின் கூடுதல் சிறப்பான ரகத்தை டீலர்களுக்கு அனுப்பி வைத்த ஹூண்டாய்...!

இந்நிலையில், ஹூண்டாய் வெனியூ காரின் ட்யூவல் டோன் கலர் ஆப்ஷனும் விற்பனைக்காக, அதன் டீலர்கள் ஷோரூமை வந்தடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை ரிஷி சேதி என்ற ஃபேஸ்புக் பக்கம் வெளியிட்டுள்ளது.

மலிவு விலை காரின் கூடுதல் சிறப்பான ரகத்தை டீலர்களுக்கு அனுப்பி வைத்த ஹூண்டாய்...!

ஹூண்டாயின் இந்த வெனியூ கார், தனி நிறங்களைக் கொண்ட ஏழு வண்ணங்களிலும், இரு வண்ணக் கலவையைக் கொண்ட மூன்று நிறங்களிலும் விற்பனைக்கு கிடைக்கின்றது. அதில், முன்னதாக சிங்கிள் கலர் ஆப்ஷன் கார்கள் டீலர்களை வந்தடைந்தநிலையில், தற்போது ட்யூவல் கலர் கொண்ட வெனியூ கார்கள், ஷோரூம்களை வந்தடைந்துள்ளது.

மலிவு விலை காரின் கூடுதல் சிறப்பான ரகத்தை டீலர்களுக்கு அனுப்பி வைத்த ஹூண்டாய்...!

வெனியூ கார், ஸ்டார் டஸ்ட், டீப் ஃபாரஸ்ட், ஃபயரி ரெட், லாவா ஆரஞ்ச், டைபூன் சில்வர், போலார் ஒயிட் மற்றும் டெனிம் ப்ளூ ஆகிய சிங்கிள் டோன் கலர்களிலும், போலார் ஒயிட் அல்லது பாந்தம் ப்ளாக் ரூஃப், டெனிம் ப்ளூ அல்லது போலார் ஒயிட் ரூஃப் மற்றும் லாவா ஆரஞ்ச் அல்லது பாந்தம் ப்ளாக் ரூஃப் ஆகிய மூன்று விதமான வண்ணக் கலவையில் தயாராகி உள்ளது.

ஆனால், இதில் முதலாவதாக, வெள்ளை நிற பாடியையும், கருப்பு நிற மேற்கூரையையும் கொண்ட கார்தான் தற்போது வருகையைத் தந்துள்ளது.

மலிவு விலை காரின் கூடுதல் சிறப்பான ரகத்தை டீலர்களுக்கு அனுப்பி வைத்த ஹூண்டாய்...!

மிகவும் மலிவான விலையில் களமிறங்கி உள்ள இந்த எஸ்யூவி ரக வெனியூ கார், பல்வேறு விதமான தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கின்றது. அந்தவகையில், இந்த காரில் ப்ளூ லிங்க் எனப்படும் புதிய விதமான தொழில்நுட்ப வசதி இணைக்கப்பட்டுள்ளது. இதுவே, இந்த காரை இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கனெக்ட் கார் என்று அழைக்க காரணமாக இருக்கின்றது.

மலிவு விலை காரின் கூடுதல் சிறப்பான ரகத்தை டீலர்களுக்கு அனுப்பி வைத்த ஹூண்டாய்...!

இத்துடன், இந்த காரில் நவீன வசதியாக ரிமோட் கார் டிராக்கிங், ஒயர்லெஸ் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர், புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் வசதி, கீ லெஸ் என்ட்ரீ உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பாதுகாப்பு வசதிகளாக, இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, ஹில் ஹோல்டு, ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஜியோ பென்சிங், எமர்ஜென்சி அசிஸ்டண்ட்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மலிவு விலை காரின் கூடுதல் சிறப்பான ரகத்தை டீலர்களுக்கு அனுப்பி வைத்த ஹூண்டாய்...!

மேலும், ஹை எண்ட் வேரியண்டில் ஆறு ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, வெனியூ காருக்கு ஹூண்டாய் நிறுவனம், புதிய ஸ்டைலான தோற்றத்தை வழங்கியுள்ளது.

அந்தவகையில், புதிய வெனியூ காரின் முன் பக்க க்ரில், பம்பர், ஹெட்லைட் உள்ளிட்டவை தனித்துவமான பிரத்யேக வடிவமைப்பைப் பெற்றுள்ளது. இத்துடன் காரின் இன்டீரியரும் ராயல் லுக்கை, அதாவது சொகுசு கார்களில் இருக்கின்ற சௌகரியத்தைப் போன்ற வசதிகளைப் பெற்றுள்ளது.

மலிவு விலை காரின் கூடுதல் சிறப்பான ரகத்தை டீலர்களுக்கு அனுப்பி வைத்த ஹூண்டாய்...!

அந்தவகையில், காரின் டேஷ்போர்ட் மையப்பகுதியில் இருக்கும் கன்சோலில், 8.0 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே, சொகுசான இருக்கை வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் இரு பக்கவாட்டிலும் ஏசி வெண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு கீழாக காரைக் கட்டுபடுத்தும் கியர் லிவர் பொருத்தப்பட்டுள்ளது.

மலிவு விலை காரின் கூடுதல் சிறப்பான ரகத்தை டீலர்களுக்கு அனுப்பி வைத்த ஹூண்டாய்...!

ஹூண்டாயின் இந்த ஸ்மார்ட் கனெக்ட் கார், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின், 1.4 லிட்டர் டீசல் எஞ்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் ஆகிய மூன்று ஆப்ஷன்களில் கிடைக்கின்றது.

இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வழங்கும் திறனைப் பெற்றுள்ளது. அதேபோன்று, 1.4 லிட்டர் டீசல் எஞ்ஜின் 99 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது.

மலிவு விலை காரின் கூடுதல் சிறப்பான ரகத்தை டீலர்களுக்கு அனுப்பி வைத்த ஹூண்டாய்...!

இவற்றின் ஹை என்ட் வேரியண்டான 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் 120 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் வழங்கும்.

இந்த கார் ரூ. 6.50 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஹை ஸ்பெக் மாடல் ரூ. 11.11 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்யப்படுகிறது. இவையனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலைகளாகும்.

Most Read Articles
English summary
Hyundai Venue Dual Tone Model Arrives At Dealer. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X