ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முதல் நாள் புக்கிங் எவ்வளவு தெரியுமா?

எதிர்பார்த்தது போலவே ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி காருக்கு முன்பதிவு குவியத் துவங்கி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முதல் நாள் புக்கிங் எவ்வளவு தெரியுமா?

ஹூண்டாய் நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் ரக எஸ்யூவியான வெனியூ வரும் 21ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாக, நேற்று ஆன்லைனிலும், டீலர்களிலும் முன்பதிவு துவங்கப்பட்டது. ரூ.21,000 முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்படுகிறது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முதல் நாள் புக்கிங் எவ்வளவு தெரியுமா?

இந்த நிலையில், முன்பதிவு துவங்கிய நேற்று முதல் நாளில் மட்டும் 2,000 பேர் இந்த புதிய வெனியூ எஸ்யூவிக்கு முன்பதிவு செய்துள்ளதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. விலை அறிவிப்புக்கு முன்னதாகவே இந்த எஸ்யூவிக்கு எகிடுதகிடான முன்பதிவு கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முதல் நாள் புக்கிங் எவ்வளவு தெரியுமா?

ஏற்கனவே நாம் கணித்து கூறியது போல, இந்த எஸ்யூவிக்கு அதிக முன்பதிவு பெறும் வாய்ப்பு இருப்பதால், காத்திருப்பு காலமும் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. மேலும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலுக்குத்தான் அதிகம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதுவும் நாம் ஏற்கனவே கணித்து கூறிய செய்திதான்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முதல் நாள் புக்கிங் எவ்வளவு தெரியுமா?

மேலும், மாத உற்பத்தி இலக்கு தற்போது குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதால், காத்திருப்பு காலம் நீளும் வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில், வரும் மாதங்களில் காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கு ஏதுவாக, உற்பத்தியை அதிகரிக்க ஹூண்டாய் மோட்டார்ஸ் நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முதல் நாள் புக்கிங் எவ்வளவு தெரியுமா?

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு அதிக வரவேற்பு இருப்பதற்கு காரணம், மிகச் சிறப்பான டிசைன், அதிக தொழில்நுட்ப வசதிகள், க்ரெட்டாவைவிட குறைவான விலை ஆகியவை முக்கிய காரணங்களாக இருக்கும்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முதல் நாள் புக்கிங் எவ்வளவு தெரியுமா?

இந்த புதிய வெனியூ எஸ்யூவியானது 82 பிஎச்பி பவரை அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 118 பிஎச்பி பவரை அளிக்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 89 பிஎச்பி பவரை அளிக்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் வர இருக்கிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முதல் நாள் புக்கிங் எவ்வளவு தெரியுமா?

புதிய ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் இரண்டு வேரியண்ட்டுகளிலும், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 6 வேரியண்ட்டுகளிலும், டீசல் எஞ்சின் 5 வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முதல் நாள் புக்கிங் எவ்வளவு தெரியுமா?

இந்த எஸ்யூவியில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகல், புரொஜெக்டர் பனி விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும். தவிரவும், இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் புளூலிங்க் என்ற விசேஷ செயலியையும் சப்போர்ட் செய்யும். இதன்மூலமாக 33 விதமான வசதிகளை பெற முடியும்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முதல் நாள் புக்கிங் எவ்வளவு தெரியுமா?

எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட்டுகள், கார்னரிங் விளக்குகள், கூல்டு க்ளவ் பாக்ஸ் ஆகியவையும் முகக்கிய அம்சங்களாக இருக்கும் என்பதுடன் ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவிக்கு முதல் நாள் புக்கிங் எவ்வளவு தெரியுமா?

ரூ.7.50 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய காம்பேக்ட் ரக மாடல்களுக்கு கடும் போட்டியை அளிக்கும்.

Most Read Articles
English summary
Hyundai Venue Gets Over 2000 Bookings On First Day.
Story first published: Friday, May 3, 2019, 17:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X