ஹூண்டாய் வென்யூ காருக்கு இப்படியொரு வரவேற்பா! 6 மாதங்களில் எவ்வளவு முன்பதிவுகள் தெரியுமா?

அறிமுகமானதில் இருந்து அனைத்து மாதங்களின் விற்பனை நிலவரங்களிலும் குறிப்பிடத்தகுந்த கணிசமான விற்பனை எண்ணிக்கையை பெற்றுவரும் மாடல் கார், ஹூண்டாய் வென்யூ. விற்பனை நிலவரங்கள் இவ்வாறு ஒருபுறம் இருக்க, இந்த எஸ்யூவி காருக்கு கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 80,000 முன்பதிவுகள் நடைபெற்றுள்ளன.

ஹூண்டாய் வென்யூ காருக்கு இப்படியொரு வரவேற்பா! 6 மாதங்களில் எவ்வளவு முன்பதிவுகள் தெரியுமா?

2019 மே மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தால் ரூ.6.5 லட்சம் விலையில் இந்த வென்யூ கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் மிக அதிகமான தொழிற்நுட்பங்களுடன் வெளியான முதல் எஸ்யூவி காராக விளங்கும் ஹூண்டாய் வென்யூ கார் துவக்கத்திலேயே பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

ஹூண்டாய் வென்யூ காருக்கு இப்படியொரு வரவேற்பா! 6 மாதங்களில் எவ்வளவு முன்பதிவுகள் தெரியுமா?

முதல் இரு மாதத்திற்கு கம்பெக்ட்-எஸ்யூவி வரிசையில் விற்பனையில் அதிக யூனிட்கள் விற்பனையானது வென்யூ கார் தான் என்றால் பார்த்து கொள்ளுங்கள். கடந்த அக்டோபர் மாத விற்பனை நிலவரத்திலும் இந்திய மார்க்கெட்டில் சிறந்த முறையில் விற்பனையான கம்பெக்ட்-எஸ்யூவி கார்களின் வரிசையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு அடுத்தப்படியாக ஹூண்டாய் வென்யூ கார் தான் உள்ளது. மற்ற இடங்களில் எந்தெந்த கார்கள் உள்ளன என்பது குறித்த முழுமையான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

ஹூண்டாய் வென்யூ காருக்கு இப்படியொரு வரவேற்பா! 6 மாதங்களில் எவ்வளவு முன்பதிவுகள் தெரியுமா?

ஏகப்பட்ட உட்புற மற்றும் வெளிப்புற அம்சங்கள், நவீன தொழிற்நுட்பங்கள் மற்றும் வலிமையான என்ஜின் அமைப்பு உள்ளிட்டவற்றுடன் வென்யூ கார் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் மூன்று என்ஜின் தேர்வுகள் உள்ளன. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 83 பிஎச்பி பவரையும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் 120 பிஎச்பி பவரையும் வெளியிடும் திறன் கொண்டவை.

ஹூண்டாய் வென்யூ காருக்கு இப்படியொரு வரவேற்பா! 6 மாதங்களில் எவ்வளவு முன்பதிவுகள் தெரியுமா?

ஒரே ஒரு வேரியண்ட்டில் விற்பனையாகும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் 90 பிஎச்பி பவரை வெளிப்படுத்துகிறது. இதில் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினும் 1.4 லிட்டர் டீசல் என்ஜினும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் வென்யூ காருக்கு இப்படியொரு வரவேற்பா! 6 மாதங்களில் எவ்வளவு முன்பதிவுகள் தெரியுமா?

1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினிற்கு கூடுதலாக டிசிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட்டில் ஹூண்டாய் எலைட் ஐ20 மாடலில் உள்ள ஐந்து வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளன.

ஹூண்டாய் வென்யூ காருக்கு இப்படியொரு வரவேற்பா! 6 மாதங்களில் எவ்வளவு முன்பதிவுகள் தெரியுமா?

கம்பெக்ட்-எஸ்யூவி பிரிவில் வென்யூ மாடல் இடம்பெற்றுள்ளதால், இந்த காருக்கு மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் டாடா நெக்ஸான் போன்ற மாடல்கள் கடுமையான போட்டியினை அளித்து வருகின்றன.

ஹூண்டாய் வென்யூ காருக்கு இப்படியொரு வரவேற்பா! 6 மாதங்களில் எவ்வளவு முன்பதிவுகள் தெரியுமா?

இந்தியாவில் ஹூண்டாய் கார்களுக்கு எப்போதுமே ஒரு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை வென்யூ காருக்கான இந்த 80,000 முன்பதிவுகள் வெளிக்காட்டுகின்றன. வென்யூ எஸ்யூவியின் இத்தகைய வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் இந்த காரின் விலை தான். இதனால் தான் வென்யூ இதன் பிரிவில் உள்ள மற்ற கார்களுக்கு கடுமையான போட்டியினையும் தருகிறது எனலாம்.

Most Read Articles
English summary
Hyundai Venue Registers Over 80,000 Bookings In Just Six Months Since Launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X