Just In
- 25 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
மார்ச் மாதம் இல்லையாம்.. மோகன்லாலின் அந்த மெகா பட்ஜெட் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- News
150 ஆடுகள், 300 கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி.. கலகலக்கும் முனியாண்டி திருவிழா.. பின்னணி என்ன?
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யாரும் எதிர்பாராத மலிவு விலையில் களமிறங்கிய இந்தியாவின் முதல் ஸ்மார்ட் கனெக்ட் கார்: முழுமையான தகவல்
ஹூண்டாய் நிறுவனம், அதன் அதிநவீன தொழில்நுட்பத்திலான முதல் ஸ்மார்ட் கனெக்ட் காரை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. இந்த காரின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்திய வாகன பிரியர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹூண்டாய் வெனியூ கார் தற்போது விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக மாடலாக வெளிவந்திருக்கும் இந்த கார் இந்திய மதிப்பில் ரூ. 6.5 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலையில் களமிறங்கியிருக்கின்றது. இதன் விலை விவரப் பட்டியலை கீழே காணலாம்.
எஞ்ஜின் | டிரான்ஸ்மிஷன் | இ | எஸ் | எஸ்எக்ஸ் | எஸ்எக்ஸ் (ஓ) |
1.2லி பெட்ரோல் | 5-எம்டி | ரூ. 6,50,000 | ரூ. 7,20,000 | ||
1.0L டர்போ-பெட்ரோல் | 6-எம்டி | ரூ. 8,21,000 | ரூ 9,54,000 | Rs 10,60,000 | |
7-டிசிடி | ரூ. 9,35,000 | Rs 11,10,500 (எஸ்எக்+) | |||
1.4L டீசல் | 6-எம்டி | ரூ. 7,75,000 | ரூ. 8,45,000 | ரூ. 9,78,000 | Rs 10,84,000 |

ஸ்மார்ட் கனெக்ட் எனும் தொழில்நுட்பத்தில் வெளிவந்திருக்கும் இந்த கார், நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்திய எஸ்யூவி கார்கள் சந்தையில் தற்போது களமிறங்கியிருக்கின்றது. அந்தவகையில், இந்த காரில் ப்ளூ லிங்க் கனெக்டிவிட்டி எனப்படும் புதிய ரகத்திலான தொழில் நுட்பம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் 33 வகையிலான சேவைகளை இந்த காரில் பெறமுடியும். அதில், பத்துக்கும் மேற்பட்ட அம்சங்கள் இந்திய வாடிக்கையாளர்களைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ஜியோ பென்சிங், எமர்ஜென்சி அசிஸ்டண்ட்ஸ் மற்றும் கார் டிராக்கிங் உள்ளிட்ட அம்சங்கள் அடங்கும்.

அதேசமயம், இந்த வெனியூ காம்பேக்ட் ரக எஸ்யூவி கார், லேட்டஸ்ட் டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களினாலே, இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு மிக பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில்தான், தற்போது இந்த அதிநவீன தொழில்நுட்பங்களை அடங்கிய கார் இந்தியாவில் களமிறங்கி இருக்கின்றது.

அதேசமயம், இந்த கார் யாரும் எதிர்பாராத வகையில், மிகவும் மலிவான விலையில் களமிறங்கியிருக்கின்றது. இதன்காரணமாகவே, கார் வாங்க விருப்பம் இல்லாதவர்களுக்குகூட, வெனியூவை வாங்க ஆசையைத் தூண்டும்.

அதற்கேற்ப ஸ்டைல் மற்றும் டிசைனும் அமைந்துள்ளன. அந்தவகையில், புதிய ரகத்திலான சிக்னேட்சர் கேஸ்கேடிங் ஹெக்ஸாகோனல் அமைப்பைக் கொண்ட க்ரில் முகப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பக்கவாட்டில்தான், எல்இடி ரகத்திலான டிஆர்எல்களால் இன்டெக்ரேட் செய்யப்பட்ட முகப்பு மின் விளக்கு, பனி விளக்கு மற்றும் சைட் இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இத்துடன், சில்வர் நிறத்திலான அக்சென்ட், முன் பக்க பம்பரில் பொருத்தப்பட்டுள்ளது. இது, பனி விளக்கிற்கு கீழே அமைந்துள்ளது. இந்த அக்சென்ட்டிற்கு நடுப்பகுதியில் காரின் உள்பகுதி காற்றை எடுத்துச் செல்வதற்கு ஏதுவான இன்டேக் டிசைன் வடிவைமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய எஸ்யூவி காரின் பக்கவாட்டு மற்றும் பின்பக்க டிசைன்கள், ஹூண்டாய் நிறுவனத்திற்கே உரித்தான, உடல் மொழியில் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் டைமண்ட் ஷேப்பிலான பெரிய அளவு அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், வெனியூ எஸ்யூவி காரின் இன்டீரியரில், கருப்பு நிறத்திலான டேஷ்போர்ட் மற்றும் கேபின் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த டேஷ்போர்டின் சென்டர் கன்சோலில், 8.0 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இதன் இரு பக்கவாட்டிலும் ஏசி வெண்ட்டும், கீழாக காரைக் கட்டுபடுத்தும் கியர் லிவர் லிவரும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் டிசைன் காருக்கு ராயல் லுக்கை வழங்குகிறது.

ஹூண்டாயின் இந்த கார் மூன்றுவிதமான பவர்டிரெயின் ஆப்ஷனில் கிடைக்கின்றது. அந்தவகையில், எலைட் ஐ20 பிரீமியம் ஹேட்ச்பேக் காரில் பொருத்தப்பட்டுள்ள 1.2லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின்தான் வெனியூவின் வேரியண்டில் பொருத்தப்பட்டுள்ளது. இது, 83பிஎச்பி பவரையும், 115என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. இது 5 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைந்து இயங்குகின்றது.

அதேபோன்று, 1.4 லிட்டர் டீசல் என்ஜின் 89 பிஎச்பி பவரையும், 220என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. இது, 6 ஸ்பீடு மேனுவர் டிரான்ஸ்மிஷனில் இயங்கும். இத்துடன், வெனியூ கார் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இது 120 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் வழங்கும். இந்த எஞ்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு ட்யூவல் க்ளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷனில் இயங்கும்.

இவற்றுடன், இந்த காம்பேக்ட் ரக வென்யூ காரில், பாதுகாப்பு வசதிகளாக இபிடியுன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, பிரேக் அசிஸ்ட் கன்ட்ரோல், கரூஸ் கன்ட்ரோல், ஸ்பீட் சென்சிங் ஆட்டோ டூர் லாக், சைல்ட் ஐசோபிக்ஸ் சீட்டுகள், ஆறு ஏர் பேக்குகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், க்ளோவ் பாக்ஸ் கூலிங், வயர்லஸ் சார்ஜர் மற்றும் எலக்ட்ரிக் சன் ரூஃப் உள்ளிட்ட பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இத்துடன், ஹூண்டாய் வெனியூ கார், 7 சிங்கிள் டோன் கலர்கள் தேர்விலும், 3 வண்ணக் கலவை தேர்வுகளிலும் விற்பனைக்கு கிடைக்கின்றது.
இதில், ஃபயரி ரெட்,ஸ்டார் டஸ்ட், டீப் ஃபாரஸ்ட், லாவா ஆரஞ்ச், போலார் ஒயிட், டைபூன் சில்வர் மற்றும் டெனிம் ப்ளூ ஆகிய சிங்கிள் டோன் கலர்கள் ஆப்ஷனிலும்.
டெனிம் ப்ளூ அல்லது போலார் ஒயிட் ரூஃப், போலார் ஒயிட் அல்லது பாந்தம் ப்ளாக் ரூஃப் மற்றும் லாவா ஆரஞ்ச் அல்லது பாந்தம் ப்ளாக் ரூஃப் ஆகியவை வண்ணக் கலவை ஆப்ஷனிலும் கிடைக்கும்.

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி ரக கார், மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட கார்களுடன் போட்டியிட இருக்கின்றது.